குச்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குச்சம் (ஸ்டம்புகள்)

குச்சம் (stump) எனப்படுவது துடுப்பாட்டத்தின் போது பயன்படுத்தப்படும் இலக்கில் காணப்படும் நிலைக்குத்துத் தடிகள் . துடுப்பாட்டத்தில் பயன்படுத்தப்படும் இலக்கில் தரையில் நிலைக்குத்தாக ஊன்றப்பட்ட மூன்று குச்சங்களும் அவற்றின் மேல் வைக்கப்பட்ட இரண்டு சிறிய குறுக்குத்தடிகளும் காணப்படுகின்றன. குச்சங்கள் பொதுவாக மத்தினாலானவை. பட்டிகையின் இரண்டு முடிவுகளில் நடப்பட்ட மும்மூன்று குச்சங்கள் இலக்குகளை ஆக்குகின்றன. இலக்கின் மொத்த அகலம் 9 அங்குலம் (22.9 செமீ)ஆகும்.

ஒவ்வொரு குச்சமும் 28 அங்குலம் (71.1 செமீ) உயரமும் கூடிய விட்டமாக 112 அங்குலத்தையும் (3.81 செமீ) குறைந்த விட்டமாக 138 (3.49 செமீ) அங்குலத்தையும் கொண்டிருக்கும். குச்சத்தின் ஒரு முனை தரையில் நடப்பட வசதியாக கூறாக கானப்படுவதோடு மற்றைய முனையில் குறுக்குத்தடிகளை தாங்கும் வகையில் அரைவட்டவடிவத் தவாளிப்பு காணப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குச்சம்&oldid=1353451" இருந்து மீள்விக்கப்பட்டது