நேர் விலகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கழல் திருப்பம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நேர் விலகு வீச்சை விளக்கும் மாதிரி இயங்குபடம்

நேர் விலகு (leg break) துடுப்பாட்டத்தில் கையாளப்படும் பந்து வீச்சுகளில் ஓர் வகையாகும். இது ஓர் வலது கை நேர்ச்சுழல் பந்துவீச்சாளரின் தாக்கு வீச்சாகும்.[1]

துடுப்பாட்டப் பந்தின் தையல்கோட்டின் மீது அனைத்து விரல்களும் இருக்குமாறு உள்ளங்கையில் வைத்துக்கொண்டு வீசுகையில் மணிக்கட்டையினைச் சுழற்றி வீசுவதால் நேர் விலகு நிகழ்கிறது. பந்தை வீசும்போது ஓர் வலதுகை வீச்சாளரின் மணிக்கட்டிலிருந்து கொடுக்கப்படும் சுழற்சி தையல்கோட்டின் மேலுள்ள விரல்களைத் தழுவி சுட்டுவிரலையொட்டி வெளிப்படும்போது இடதுபுறமாக சுழல் கொடுக்கப்படுகிறது. பந்து வீசுகளத்தில் பட்டெழும்பும்போது இந்தச் சுழல், பந்தை நேர்கோட்டிலிருந்து, வீச்சாளரின் பார்வையில், இடதுபுறம் விலகச்செய்கிறது. ஓர் மட்டையாளரின் பார்வையில் பந்து ஓர் வலக்கை மட்டையாளரின் வலப்புறமாக நேர்ப்பக்கத்தில் இருந்து விலகிச் செல்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேர்_விலகு&oldid=2879061" இருந்து மீள்விக்கப்பட்டது