பிரவீன் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரவீண் குமார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரவீண் குமார்
Praveen Kumar.jpg
Script error: The function "getImageLegend" does not exist.
Personal information
Full name பிரவீண் குமார்
Height 5 ft 11 in (1.80 m)
Batting வலதுகை மட்டையாளர்
Bowling வலதுகை மிதவேகம்
Role பந்து வீச்சாளர்
International information
ODI debut (cap [[List of {{{country}}} ODI cricketers|170]]) 18 நவம்பர் 2007 v பாக்கிஸ்தான்
Last ODI 10 ஆகத்து 2010 v நியூசிலாந்து
Domestic team information
Years Team
2004/05–நடப்பில் உத்தரப் பிரதேசம்
Career statistics
Competition ஒ.ப.து கள் மு.து ப.அ டி20
Matches 34 37 85 35
Runs scored 201 1,387 1,201 290
Batting average 16.75 25.21 22.66 15.26
100s/50s 0/1 0/8 0/5 0/1
Top score 54* 98 64 76*
Balls bowled 1,646 7,840 4,226 742
Wickets 40 166 126 35
Bowling average 35.17 23.18 25.85 27.47
5 wickets in innings 0 12 2 0
10 wickets in match n/a 1 n/a n/a
Best bowling 4/31 8/68 5/32 3/23
Catches/stumpings 8/– 6/– 16/– 5/–
Source: CricketArchive, 5 திசம்பர் 2009

பிரவீண்குமார் சகத் சிங் (Praveenkumar Sakat Singh அல்லது Praveen Kumar) (பிறப்பு இரண்டு அக்டோபர் 1986 மீரட், உத்தரப் பிரதேசம்) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். முதல்தர துடுப்பாட்டத்தில் உத்தரப் பிரதேச துடுப்பாட்ட அணிக்கு ஆடுகிறார். வலதுகை மிதவேக பந்து வீச்சாளராகிய இவர் பந்தை இருதிசைகளிலும் அலைவுறுமாறு வீசுவதிலும் வீசுகோடு மற்றும் வீசுநீளம் மாற்றங்களிலும் திறன் மிகுந்தவர். இவரது அலைவுறு பந்துவீச்சினால் புதிய பந்து மூலம் விக்கெட்களை வீழ்த்துவதில் வல்லவராக விளங்குகிறார். மட்டையாட்டத்திலும் ஆடுவரிசையில் பின்னால் வந்து விளாசுவதில் பெயரெடுத்துள்ளார். உள்ளூர் ஆட்டங்களில் துவக்க மட்டையாளராகவும் களமிறங்கியுள்ளார்.

ஆட்டவாழ்வு[தொகு]

முதல்தரம்[தொகு]

உத்தரப் பிரதேசத்திற்காக ஆடும் குமார் தமது முதல் ஆட்டத்தை 2004ஆம் ஆண்டு துவங்கினார். 25 ஆட்டங்களில் சராசரியாக 21.50 ஓட்டங்களிக்கு ஒரு விக்கெட் என 126 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். பட்டியல் அ போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி 22.05 சராசரியில் 39 ஆட்டங்களில் 67 விக்கெட்கள் எடுத்துள்ளார்.

பன்னாடு[தொகு]

இந்தியத் துடுப்பாட்ட வாரியத்திற்கு எதிரான இந்தியன் கிரிக்கெட் லீக்கிற்கு கையொப்பமிட்டு தனது பன்னாட்டு ஆட்டவாழ்வை சிதைக்க இருந்தார். இருப்பினும் கடைசி நேரத்தில் இந்த முடிவிலிருந்து மாற்றிக்கொண்டார். இவரது முதல்தரத் துடுப்பாட்டத்தில் மற்றும் இந்தியா முதல்நிலை அணியில் காட்டிய ஆட்டத்திறனுக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் ஆட்டத்தை 18 நவம்பர் 2007ஆம் ஆண்டில் பாக்கிஸ்தானுடன் நடந்த ஐந்தாவது பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் துவங்கினார்.[1] ஜெய்ப்பூரில் நடந்த இந்த முதல் ஆட்டத்தில் தமது முழு பத்து பந்து பரிமாற்றங்களிலும் விக்கெட் எதுவும் எடுக்காது 50 ஓட்டங்கள் கொடுத்தார். இவரது இரண்டாவத் ஒருநாள் ஆட்டத்திலும் விக்கெட்கள் எதுவும் எடுக்க இயலவில்லை. ஆனால் 26 பிப்ரவரி 2008 அன்று இலங்கையுடன் ஆடிய தமது மூன்றாவது ஆட்டத்தில் 31 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்கள் வீழ்த்தி இந்திய வெற்றிக்கு வழிகோலினார்.[2]

மார்ச்சு 4, 2008 அன்று நடந்த இரண்டாவது இறுதி ஆட்டத்தில் ஆத்திரேலியாவிற்கு எதிராக 46 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்கள் வீழ்த்தி ஆட்டநாயகனாகத் தெரிவானார்.

குமார் பயிற்சிவலையில் பந்து வீசுதல்.

இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]

இந்தியன் பிரீமியர் லீக்கின் முதல் பருவத்தில் இருபது20 போட்டிகளில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருவிற்காக ஆடினார். இப்போட்டிகளில் மூன்று அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் வீழ்த்தி "ஹேட்ரிக்" பெற்ற முதல் பந்துவீச்சாளராக விளங்கினார். 18 மார்ச்சு,2010 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் பெங்களூரு சின்னசாமி அரங்கத்தில் நடந்த ஆட்டத்தில் டேமியன் மார்ட்டின், நர்வால் மற்றும் டோக்ராவை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

2011 ஆண்டில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறார்.

ஆடுகளத்திற்கு வெளியேயான சர்ச்சைகள்[தொகு]

16 மே 2008 அன்று மீரட் நகரில் ஒரு மருத்துவரை அடித்ததாக பிரவீண் மீது குற்றம் சாட்டப்பட்டது. குடிபோதையில் இவ்வாறு நடந்துகொண்டதாகத் தெரிகிறது. இருப்பினும் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. [3]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரவீன்_குமார்&oldid=2489611" இருந்து மீள்விக்கப்பட்டது