ஹர்பஜன் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹர்பஜன் சிங்
Bhajji.jpg
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஹர்பஜன் சிங்
பட்டப்பெயர் பாஜ்ஜி, த டர்பனேட்டர் (ஆங்கில ஊடகங்களில்)
பிறப்பு 3 சூலை 1980 (1980-07-03) (அகவை 37)
ஜலந்தர், பஞ்சாப், இந்தியா
உயரம் 5 ft 11 in (1.80 m)
வகை பந்து வீச்சாளர்
துடுப்பாட்ட நடை வலது-கை
பந்துவீச்சு நடை வலது-கை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 215) 25 மார்ச், 1998: எ ஆஸ்திரேலியா
கடைசித் தேர்வு 2 சனவரி, 2008: எ ஆஸ்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 113) 17 ஏப்ரல், 1998: எ நியூசிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி 11 சூன், 2011:  எ மேற்கிந்தியத் தீவுகள்
சட்டை இல. 3
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1997–இற்றை பஞ்சாப்
2005 சுர்ரே
2008–இற்றை மும்பை இந்தியன்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.ப.து முதல்தர பட்டியல் A
ஆட்டங்கள் 94 227 152 262
ஓட்டங்கள் 2,083 1,166 3,193 1,425
துடுப்பாட்ட சராசரி 18.93 13.25 19.23 13.57
100கள்/50கள் 2/9 0/0 1/12 0/0
அதிக ஓட்டங்கள் 115 49 115 49
பந்து வீச்சுகள் 26,693 11,939 38,941 13,567
இலக்குகள் 400 255 646 320
பந்துவீச்சு சராசரி 31.87 33.52 28.30 31.16
சுற்றில் 5 இலக்குகள் 25 3 38 3
ஆட்டத்தில் 10 இலக்குகள் 5 0 7 0
சிறந்த பந்துவீச்சு 8/84 5/31 8/84 5/31
பிடிகள்/ஸ்டம்புகள் 42/– 69/– 74/– 79/–

22 June, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) (பஞ்சாபி: ਹਰਭਜਨ ਸਿੰਘ, பிறப்பு:சூலை 3, 1980 ஜலந்தர், பஞ்சாப்), இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு விளையாடும் ஓர் துடுப்பாட்ட வீரர். 1998இலிருந்து இந்திய அணியில் விளையாடுகிறார். பாஜ்ஜி எனவும் அழைக்கப்படுபவர். புறத்திருப்பப் பந்து வீச்சாளராகிய இவர் தேர்வுகளில் இந்தவகைப் பந்து வீச்சில் மிகக் கூடுதலான இலக்குகளை வீழ்த்திய முத்தையா முரளிதரனுக்கு அடுத்தநிலையில் உள்ளார். சூலை 7, 2011 அன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது தேர்வில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 400 இலக்குகள் வீழ்த்திய மூன்றாவது இந்தியர் எனும் சாதனை படைத்தார்.[1]

ஹர்பஜன் தேர்வு மற்றும் ஒருநாள் துடுப்பாட்ட ஆட்டங்களில் 1998ஆம் ஆண்டு விளையாடத் துவங்கினார். துவக்க காலங்களில் இவரது ஆட்டப்பணி பந்துவீச்சு செயல்முறை குறித்த மற்றும் ஒழுங்கீன செயல்கள் குறித்த சர்ச்சைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. 2001ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே காயமடைந்ததை அடுத்து அப்போதைய அணித்தலைவர் சௌரவ் கங்குலியால் மீண்டும் வாய்ப்பு பெற்றார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான அந்தப் போட்டித்தொடரில் 32 இலக்குகள் வீழ்த்தி தொடரை வெல்ல காரணமாக அமைந்ததால் அணியில் நிரந்தர இடம் பிடித்தார். இந்தப் போட்டிகளின்போது ஓர் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அடுத்தடுத்து மூன்று இலக்குகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஹர்பஜன் சிங் 400 விக்கெட்டுகள்
  2. Bal, Sambit. "Players and officials: Harbhajan Singh". Cricinfo. பார்த்த நாள் 2007-02-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்பஜன்_சிங்&oldid=2472828" இருந்து மீள்விக்கப்பட்டது