உள்ளடக்கத்துக்குச் செல்

2015 இந்தியன் பிரீமியர் லீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2015 இந்தியன் பிரீமியர் லீக்
இந்தியன் பிரீமியர் லீக் இலச்சினை
நாட்கள்8 ஏப்ரல் 2015 (2015-04-08) – 24 சூன் 2015 (2015-06-24)
நிர்வாகி(கள்)பிசிசிஐ
துடுப்பாட்ட வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல்முறைப் போட்டி
மற்றும் தீர்வாட்டங்கள்
நடத்துனர்(கள்)இந்தியா இந்தியா
மொத்த பங்கேற்பாளர்கள்8
மொத்த போட்டிகள்60
அலுவல்முறை வலைத்தளம்
2014
2016

2015 இந்தியன் பிரீமியர் லீக் (சுருக்கமாக ஐபிஎல் 8 அல்லது 2015 ஐபிஎல்), என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கின், எட்டாவது பருவ நிகழ்வாகும். இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) நடத்தி வருகிறது. 2007இல் தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக்கில் ஏழு பருவங்கள் ஏற்கனவே முடிந்துள்ளன. எட்டாவது பருவமான இப்பருவத்தில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. ஏப்ரல் 08, 2015 முதல் மே 24, 2015 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. இப்பருவத்தில் மொத்தமாக 60 போட்டிகள் நடக்கவுள்ளன. ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 25 வரையிலான நாட்களில் கொல்கத்தாவில் நகராட்சித் தேர்தல் நடக்க உள்ளதால் அந்நாட்களில் கொல்கத்தாவில் எந்த ஆட்டமும் நடைபெறாது.[1]

வீரர்களின் ஏலம்

[தொகு]

இந்தியன் பிரீமியர் லீக்கைப் பொறுத்தவரை ஒவ்வொரு அணியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வீரர்களை ஏலத்திற்கு விடாமல் தங்களது அணியிலேயே தக்க வைத்துக் கொள்ள முடியும். இதன்படி 123 வீரர்கள் அந்தந்த அணிகளால் தக்கவைத்துக் கொள்ளப் பட்டனர். இவ்வாறாக தக்க வைக்கப்படாமல் அணியைவிட்டு வெளியேற்றப்படும் வீரர்கள் தங்களது பெயரை அடுத்து நடைபெறும் ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். பெங்களூருவில், பிப்ரவரி 16 அன்று நடைபெற்ற பெப்சி ஐபிஎல் 2015 ஏலத்தில், அதிகபட்சமாக யுவராஜ் சிங் 16 கோடிக்கு ஏலம் போனார். 2014 ஐபிஎல்-இல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இவரை இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. மொத்தமாக 67 வீரர்கள் விற்கப்பட்ட இந்த ஏலத்தில் மொத்தமாக 87,60 கோடிகள் செலவாயின.


மைதானங்கள்

[தொகு]

12 மைதாங்களில் தொடர் சுழல்முறை ஆட்டங்கள் நடைபெறும்.[2] மும்பை, பூனே மற்றும் ராஞ்சியில் முறையே தகுதியாளர்-1 விலகுபவர்-1 மற்றும் தகுதியாளர்-2 நடைபெறும். கொல்கத்தாவில் இறுதிப் போட்டி நடைபெறும்.[3]


அகமதாபாத் பெங்களூரு சென்னை டெல்லி
ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ்
சர்தார் பட்டேல் அரங்கம் எம். சின்னசுவாமி அரங்கம் எம். ஏ. சிதம்பரம் அரங்கம் பெரோசா கோட்லா விளையாட்டரங்கம்
கொள்ளளவு: 54,000 [4] கொள்ளளவு: 36,760 [5] கொள்ளளவு: 37,220 கொள்ளளவு: 55,000
ஹைதராபாத் கொல்கத்தா
சன்ரைசர்ஸ் ஐதராபாத் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் ஈடன் கார்டன்ஸ்
கொள்ளளவு: 55,000 கொள்ளளவு: 67,000[6]
மொஹாலி மும்பை
கிங்சு இலெவன் பஞ்சாபு மும்பை இந்தியன்ஸ்
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம் வான்கேடே அரங்கம்
கொள்ளளவு: 40,000 கொள்ளளவு: 33,320
மும்பை பூனே ராய்ப்பூர், சத்தீஸ்கர் விசாகப்பட்டினம்
ராஜஸ்தான் ராயல்ஸ் கிங்சு இலெவன் பஞ்சாபு டெல்லி டேர்டெவில்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத்
பிராபோர்ன் விளையாட்டரங்கம் சுப்ரதா ராய் அரங்கம் ராய்பூர் சர்வதேச அரங்கம் ACA-VDCA அரங்கம்
கொள்ளளவு: 20,000 கொள்ளளவு: 36,000 கொள்ளளவு: 50,000 கொள்ளளவு: 38,000

போட்டி அட்டவணை

[தொகு]

புள்ளிகள் பட்டியல்

[தொகு]
அணிகள்[7] ஆட்டங்கள் வெ தோ மு. இ. புள்ளி நி. ஓ. விகிதம்
சென்னை சூப்பர் கிங்ஸ் (Q) 1385016 +0.646
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 1375115 +0.973
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 1375115 +0.315
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 1376014 +0.020
மும்பை இந்தியன்ஸ் 1376014 −0.259
ராஜஸ்தான் ராயல்ஸ் 1365214 +0.027
டெல்லி டேர்டெவில்ஸ் 1358010 −0.049
கிங்சு இலெவன் பஞ்சாபு 1331006−1.425


புள்ளிவிவரங்கள்

[தொகு]

அதிக ஓட்டங்கள்

[தொகு]
வீரர்அணி ஆட். இன்.ஓட். சரா. ஓ. வி. அ. ஓ. 100 50 4கள் 6கள்
ஆத்திரேலியா டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்1313556 46.33157.0691076421
இந்தியா விராட் கோலி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்1313480 53.33134.4582*033422
இந்தியா அசங்க்ய ராகானே ராஜஸ்தான் ராயல்ஸ்1211461 51.22130.9691*044611
தென்னாப்பிரிக்கா ஏ பி டி வில்லியர்சு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்1312446 49.55176.98133*115618
நியூசிலாந்து பிரண்டன் மெக்கல்லம் சென்னை சூப்பர் கிங்ஸ்1313430 35.83156.93100125023


அதிக விக்கெட்டுகள்

[தொகு]
PlayerTeam Mat Inns Wkts Ave Econ BBI SR 4WI 5WI
டிரினிடாட் மற்றும் டொபாகோ டுவைன் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ்131219 16.267.853/2212.4000
ஆத்திரேலியா மிட்செல் ஸ்டார்க் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்10918 11.506.674/1510.3010
இந்தியா புவனேசுவர் குமார் சன்ரைசர்ஸ் ஐதராபாத்131318 21.728.033/2616.2000
இந்தியா ஆசீஷ் நேரா சென்னை சூப்பர் கிங்ஸ்121217 19.707.124/1016.5010
இந்தியா யூசுவேந்தரா சஹால் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்121117 20.059.513/4012.6000

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pepsi IPL 2015 schedule revised due to Municipal Elections in Kolkata.". cricshed.com. 1 April 2015 இம் மூலத்தில் இருந்து 6 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150406080350/http://cricshed.com/ipl-2015/pepsi-ipl-2015-schedule-revised-due-to-municipal-elections-in-kolkata/.
  2. "2015 Venues". Cricbuzz (Sports Media) (Cricbuzz). 26 March 2015. http://www.cricbuzz.com/cricket-series/2330/indian-premier-league-2015/venues. பார்த்த நாள்: 26 March 2015.
  3. "2015 Play offs schedule". IPL (www.iplt20.com). 29 April 2015 இம் மூலத்தில் இருந்து 30 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150430052424/http://www.iplt20.com/news/2015/announcements/6383/pepsi-ipl-playoffs-revised-schedule. பார்த்த நாள்: 29 April 2015.
  4. http://www.iplt20.com/venues/19/sardar-patel-stadium
  5. http://www.iplt20.com/venues/5/m-chinnaswamy-stadium>
  6. "Eden Gardens". CricInfo. ESPN. Retrieved 26 December 2012.
  7. "IPL 2015 Point Table". WWW.IPLT20.COM. 8 April 2015. Retrieved 8 April 2015.
  8. "Indian Premier League, 2015 / Records / Most runs". Cricinfo. ESPN. Retrieved 8 April 2015.
  9. "Indian Premier League, 2015 / Records / Most wickets". Cricinfo. ESPN. Retrieved 1 May 2015.