கேல் ரத்னா விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா
விருது குறித்தத் தகவல்
வகை குடியியல் விருது
பகுப்பு விளையாட்டு (தனிநபர்/ குழு)
நிறுவியது 1991 - 1992
முதலில் வழங்கப்பட்டது 1991 - 1992
வழங்கப்பட்டது இந்திய அரசு
நிதிப் பரிசு 25 லட்சம்
(US$32,800)
விவரம் இந்தியாவின் மிக உயரிய விளையாட்டு விருது
முதல் வெற்றியாளர்(கள்) விசுவநாதன் ஆனந்த்
கடைசி வெற்றியாளர்(கள்)
விருது தரவரிசை
மேஜர் தயான் சந்த் கேல் ரத்னாஅருச்சுனா விருது

கேல் ரத்னா விருது (அதிகாரப்பூர்வமாக: மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது) என்பது இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவாக ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்த இந்த விருது நரேந்திர மோடி அரசால் 2021 ஆம் ஆண்டு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்தி மொழியில் கேல் ரத்னா என்பது விளையாட்டில் இரத்தினக்கல் போன்றவர் என பொருள்படும். இவ்விருது ஓர் பதக்கம், அங்கீகார சுருள் மற்றும் பணமுடிப்பைக் கொண்டது. 2004-05 ஆண்டில் கடைசியாக வழங்கப்பட்டபோது, இது இந்திய ரூபாய் 500,000/- மதிப்பு கொண்டதாக இருந்தது. பின்னர் 750,000க்கு கூட்டப்பட்டது.[1]

1991-92 ஆண்டில் நிறுவப்பட்ட இவ்விருது தேசிய அளவில் விளையாட்டுத்துறையில் உயர்ந்த அங்கீகாரம் பெற்ற விருது இல்லாமையை நீக்கியது. இதனை அடுத்துள்ள அருச்சுனா விருது துறை சார்ந்த விருதாக இருக்கிறது. மாற்றாக இவ்விருது அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் பொதுவான சீரிய விருதாக மிகச்சிறந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

தேர்வு முறை[தொகு]

நடுவண் அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகம் விளையாட்டுத்துறை வல்லுனர்களைக் கொண்டு தேர்வுக்குழு அமைக்கிறது. பொதுவாக ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டின் மார்ச் 31 வரையிலான காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது.ஒலிம்பிக் விளையாட்டுக்கள்,ஆசிய விளையாட்டுகள் அல்லது உலக சாம்பியன்ஷிப் அல்லது உலக கோப்பை போட்டிகளில் இடம் பெற்றுள்ள விளையாட்டொன்றில் அந்த நபரோ குழுவோ பங்கெடுத்திருக்க வேண்டும். விளையாட்டையே பணிவாழ்வாகக் கொண்ட பில்லியர்ட்ஸ், சுனூக்கர் மற்றும் சதுரங்க வீரர்களும் தேர்வுக்கு உரியவர்கள். இவ்விருதை ஒருவர் தம் வாழ்நாளில் ஒருமுறையே பெற இயலும். தேர்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அரசு, இந்திய விளையாட்டு ஆணையம் அல்லது தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் ஒன்றால் பரிந்துரைக்கப்பட்டிருக்க வேண்டும்.[2] தேர்வுக்குழு தனது பரிந்துரையை அரசிற்கு அனுப்பியபின், அரசின் பல மட்டங்களில் ஆய்வு செய்யப்பட்ட பின், குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கே வழங்கப்படல் வழக்கம் என்ற போதிலும் விலக்குகள் உள்ளன.[3] எந்த விளையாட்டு வீரருமே வேண்டிய தகுதிகளைப் பெறவில்லையாயின் விருது அந்த ஆண்டிற்கு கொடுக்கப்படாது இருக்கலாம்.

மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது பட்டியல்[தொகு]

வ.எண். ஆண்டு விளையாட்டு வீரர்(கள்) விளையாட்டு துறை
01 1991-92 விசுவநாதன் ஆனந்த் சதுரங்கம்
02 1992-93 கீத் சேத்தி பில்லியடு
03 1993-94 விருது வழங்கப்படவில்லை
04 1994-95 ஹோமி மோதிவாலா மற்றும் பி. கே. கர்க் பாய்மரப் படகோட்டம் (குழு நிகழ்வு)
05 1995-96 கர்ணம் மல்லேசுவரி பளு தூக்குதல்
06 1996-97 லியாண்டர் பயஸ் மற்றும் நாமேரிக்பம் குஞ்சராணி (இணைந்து) முறையே டென்னிசு மற்றும் பளு தூக்குதல்
07 1997-98 சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்
08 1998-99 சோதிர்மயீ சிக்தார் தட கள விளையாட்டுக்கள்
09 1999-2000 தன்ராசு பிள்ளை ஹாக்கி
10 2000-01 புல்லேலா கோபிசந்த் இறகுப் பந்தாட்டம்
11 2001 அபினவ் பிந்த்ரா சுடுதல்
12 2002 அஞ்சலி வேத் பதக் பாக்வத் மற்றும் கே. எம். பீனாமோல் (இணைந்து) முறையே சுடுதல் மற்றும் தட கள விளையாட்டுக்கள்
13 2003 அஞ்சு பாபி ஜார்ஜ் தட கள விளையாட்டுக்கள்
14 2004 ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் சுடுதல்
15 2005 பங்கஜ் அத்வானி பில்லியடும் சுனூக்கரும்
16 2006 மானவ்ஜித் சிங் சாந்து சுடுதல்
17 2007 மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்
18 2008 விருது வழங்கப்படவில்லை
19 2009 மேரி கோம், சுசீல் குமார், விஜேந்தர் குமார் முறையே குத்துச்சண்டை, மல்யுத்தம், குத்துச்சண்டை
20 2010 சாய்னா நேவால் இறகுப் பந்தாட்டம்
21 2011 ககன் நரங் சுடுதல்
22 2012 விஜய் குமார், யோகேசுவர் தத் முறையே சுடுதல், மல்யுத்தம்
23 2013 ரஞ்சன் சோதி சுடுதல்
24 2014 விருது வழங்கப்படவில்லை
25 2015 சானியா மிர்சா டென்னிசு
26 2016 பு. வெ. சிந்து, தீபா கர்மாகர், ஜீத்து ராய், சாக்சி மாலிக் முறையே இறகுப் பந்தாட்டம், ஜிம்னாஸ்டிக், சுடுதல், மற்போர்
27 2017 தேவேந்திர ஜஜாரியா, சர்தாரா சிங் முறையே ஈட்டி எறிதல், ஹாக்கி
28 2018 சைக்கோம் மீராபாய் சானு, விராட் கோலி முறையே பாரம் தூக்குதல், கிரிக்கெட்
29 2019 தீபா மாலிக் , பஜ்ரங் புனியா முறையே குண்டு எறிதல் & ஈட்டி எறிதல், மற்போர்
30 2020 ரோகித் சர்மா, மாரியப்பன் தங்கவேலு, மணிகா பத்ரா, வினேசு போகாட், இராணி இராம்பால் முறையே கிரிக்கெட், உயரம் தாண்டுதல், மேசைப்பந்தாட்டம், மற்போர், ஹாக்கி
31 2021 நீரஜ் சோப்ரா, ரவி குமார் தாகியா, லவ்லினா போர்கோஹெய்ன், ப. அர. சிறிஜேசு, அவனி லெகரா, சுமித் ஆன்டில், பிரமோத் பகத், கிருஷ்ண நாகர், மணீஷ் நர்வால், மிதாலி ராஜ், சுனில் சேத்ரி, மன்பிரீத் சிங் ஈட்டி எறிதல், பிரிஸ்டைல் குத்துச்சண்டை, குத்துச்சண்டை, ஹாக்கி, குறி பார்த்துச் சுடுதல், ஈட்டி எறிதல், இறகுப் பந்தாட்டம், இறகுப் பந்தாட்டம், சிறு கைத்துப்பாக்கிச் சுடுதல், கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி

2017. - தேவேந்திர ஜஜாரியா(PARA)

2017. - சர்தார்சிங்

  • 1993-94 ஆண்டில் இவ்விருது வழங்கப்படவில்லை.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. அமைச்சரவை, இளைஞர் மற்றும் விளையாட்டு (2005-08-30). "விருதுகள்– ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது". தேசிய தகவலியல் மையம். 2005-11-22 அன்று மூலம் (HTML) பரணிடப்பட்டது. 2006-05-15 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி); Check date values in: |date= (உதவி); External link in |publisher= (உதவி)
  2. Tamil Nadu, Sports Development Authority of. "Rajiv Gandhi Khel Ratna Award". 2007-07-06 அன்று மூலம் (ASP) பரணிடப்பட்டது. 2006-05-15 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. WEBINDIA123.COM. "Rajiv Gandhi Khel Ratna Award" (HTML). 2006-05-15 அன்று பார்க்கப்பட்டது.

உசாத்துணைகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேல்_ரத்னா_விருது&oldid=3462082" இருந்து மீள்விக்கப்பட்டது