ஜோஷ் ஹேசல்வுட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோஷ் ஹேசல்வுட்
2018.01.21.17.06.41-Hazelwood (39139885264).jpg
ஜனவரி 2018இல் ஹேசல்வுட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜோஷ் ரெஜினால்ட் ஹேசல்வுட்
பிறப்பு8 சனவரி 1991 (1991-01-08) (அகவை 31)
டாம்வெர்த், நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
பட்டப்பெயர்ஹொஃப்[1], புல்லட்[2]
உயரம்196 cm (6 ft 5 in)
மட்டையாட்ட நடைஇடது-கை
பந்துவீச்சு நடைவலது-கை விரைவு-நடுத்தர
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 440)17 டிசம்பர் 2014 எ இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 183)22 ஜூன் 2010 எ இங்கிலாந்து
கடைசி ஒநாப16 நவம்பர் 2014 எ தென்னாப்பிரிக்கா
ஒநாப சட்டை எண்38
இ20ப அறிமுகம் (தொப்பி 62)13 பிப்ரவரி 2013 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி இ20ப31 ஜனவரி 2014 எ இங்கிலாந்து
இ20ப சட்டை எண்38
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2009–தற்போதுநியூ சவுத் வேல்ஸ் (squad no. 8)
2011–இன்றுசிட்னி சிக்சர்ஸ்
2020-தற்போதுசென்னை சூப்பர் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநா முத பஅ
ஆட்டங்கள் 51 44 89 94
ஓட்டங்கள் 402 37 747 144
மட்டையாட்ட சராசரி 12.18 18.50 11.67 9.60
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 39 11* 43* 30
வீசிய பந்துகள் 11,019 2,294 17,715 5,019
வீழ்த்தல்கள் 195 72 334 149
பந்துவீச்சு சராசரி 26.20 25.15 24.56 26.95
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
7 3 9 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 6/67 6/52 6/35 7/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
18/– 13/– 33/– 26/–
மூலம்: ESPNcricinfo, 15 டிசம்பர் 2019

ஜோஷ் ரெஜினால்டு ஹேசல்வுட் (Josh Reginald Hazlewood, பிறப்பு: 8 சனவரி 1991) என்பவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் நியூ சவுத் வேல்சு அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளிலும், ஆத்திரேலிய அணிக்காகப் பன்னாட்டுப் போட்டிகளிலும் விளையாடுகிறார். நியூ சவுத் வேல்சு மாநிலத்தில் டாம்வெர்த் என்ற நகரில் பிறந்த ஹேசல்வுட் நியூ சவுத் வேல்சு அணிக்காக விளையாடிய இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 2010 சூன் 22 இல் ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் ஆத்திரேலிய அணியில் விளையாடினார். இவரே அவ்வணியில் வயதில் குறைந்த துடுப்பாட்ட வீரர் ஆவார்.[3] இவரின் துல்லியமான பந்துவீச்சினால் இவர் முன்னாள் விரைவு வீச்சாளரான கிளென் மெக்ராவுடன் ஒப்பிடப்படுகிறார். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். [4] இவர் டிசம்பர் 2019இல் நடைபெற்ற ஐ.பி.எல்.2020 தொடருக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.[5]

பன்னாட்டுப் போட்டிகள்[தொகு]

2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற போடர்-காவஸ்கர் கோப்பைத் தொடரில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப்பகுதியில் 23 நிறைவுகள் வீசி 68 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து செதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜின்க்யா ரகானே, மகேந்திரசிங் தோனி, மற்றும் ரவிச்சந்திரன் அசுவின் ஆகிய ஐந்து மட்டையாளர்களை வீழ்த்தினார். இதில் 6 நிறைவுகளை வெறுமையாக வீசினார். மட்டையாட்டத்தில் 50 பந்துகளில் 32 ஓட்டங்களை எடுத்தார். இதில் 7 நான்குகளும் அடங்கும். பின்னர் இரண்டாவது ஆட்டப்பகுதியில் செதேஷ்வர் புஜாரா மற்றும் வருண் ஆரோன் ஆகிய மட்டையாளர்களை வீழ்த்தினார். இதில் 16 நிறைவுகள் வீசி 74 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 மட்டையாளர்களைக் கைப்பற்றினார். இவரின் பந்துவீச்சு சராசரி 4.62ஆக இருந்தது.[6]

ஜனவரி 30, 2017 இல் ஓக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியில் 10 நிறைவுகள் வீசி 48 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 மட்டையாளரை வீழ்த்தினார். இவரின் பந்துவீச்சு சராசரி 4.80ஆக இருந்தது. இந்தப் போட்டியில் 6 இழப்புகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் ஆத்திரேலிய அணியில் இடம்பெற்றார். பின் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 4 மட்டையாளர்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.

நவம்பர் 2015இல் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக தனது முதல் பகல்-இரவு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் மார்ட்டின் கப்டிலை முன்னங்கால் இடைமறிப்பு முறையில் வீழ்த்தினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 17 நிறைவுகள் வீசி 66 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் 2 நிறைவுகளை வெறுமையாக வீசினார். இதில் கப்டில், வட்லிங் ,மற்றும் சௌத்தி ஆகிய மூன்று மட்டையாளர்களை வீழ்த்தினார். மட்டையாட்டத்தில் 9 பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்து சான்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 24 நிறைவுகள் வீசி 70 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 நிறைவுகளை வெறுமையாக வீசினார். இதில் 6 மட்டையாளர்களை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி 3 இழப்புகளால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஹேசல்வுட் பெற்றார். இதன்மூலம் முதல் பகல்-இரவு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது பெற்றவரானார்.[7][8] இவர் தனது 12ஆவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 50ஆவது மட்டையாளரை வீழ்த்தினார். இதன்மூலம் ஆத்திரேலிய வீரர்கள் ஷேன் வோர்ன், கிளென் மெக்ரா மற்றும் மிட்செல் ஜோன்சன் ஆகியோரை விட விரைவாக 50 மட்டையாளர்களை வீழ்த்தி சாதனை படைத்தார்.

சிறந்த செயல்பாடு[தொகு]

பந்துவீச்சாளர்
ஓட்டங்கள் எதிரணி இடம் ஆண்டு
தேர்வு 6/70 நியூசிலாந்து துடுப்பாட்ட அணி அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் 2015 [9]
ஒருநாள் போட்டிகள் 6/52 நியூசிலாந்து துடுப்பாட்ட அணி பிர்மின்ஹாம் துடுப்பாட்ட அரங்கம் 2017 [10]
இருபதுக்கு 20 4/30 இங்கிலாந்து துடுப்பாட்ட அணி மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் 2014 [11]
முத 6/50 வெஸ்டர்ன் ஆத்திரேலியா ஓவல் மைதானம் 2014 [12]
பஅ 7/36 தெற்கு ஆத்திரேலியா பிரிஸ்பன் துடுப்பாட்ட அரங்கம் 2014 [13]
இ20ப 4/30 இங்கிலாந்து துடுப்பாட்ட அணி மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் 2014 [11]

சான்றுகள்[தொகு]

 1. "Sydney Sixers Player Profiles - Josh Hazlewood". 2014-12-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-02-15 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 2. "Hazlewood soars, Smith back to No.1". cricket.com.au. 25 March 2016 அன்று பார்க்கப்பட்டது.
 3. Coverdale, Brydon (22 சூன் 2010). "Teenager Hazlewood debuts, Australia bat". CricInfo. 22 சூன் 2010 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Hazlewood will be the next McGrath: Younis" (in en-AU). ABC News. 2017-01-06. http://www.abc.net.au/news/2017-01-06/hazlewood-will-be-the-next-mcgrath-younis/8166950. 
 5. . https://cricketaddictor.com/cricket/chennai-super-kings-rope-in-josh-hazlewood-for-inr-2-crores/. 
 6. "2nd Test, Border-Gavaskar Trophy at Brisbane, Dec 17-20 2014 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, 2018-05-23 அன்று பார்க்கப்பட்டது
 7. "Australia sneak home in tense finish". Cricinfo. 25 March 2016 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Bowlers dominate early in day-night Test". Cricinfo. 25 March 2016 அன்று பார்க்கப்பட்டது.
 9. "New Zealand tour of Australia, 2015/16 – Australia v New Zealand Scorecard". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 29 November 2015. 3 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
 10. "ICC Champions Trophy, 2nd Match, Group A: Australia v New Zealand at Birmingham, Jun 2, 2017". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 2 June 2017. 3 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
 11. 11.0 11.1 "England tour of Australia, 2013/14 – Australia v England Scorecard". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 31 January 2014. 3 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Sheffield Shield Final, 2013/14 – NSW v WA Scorecard". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 25 March 2014. 3 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Matador BBQs One-Day Cup, 2014/15 – NSW v SA Scorecard". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 4 October 2014. 3 January 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஷ்_ஹேசல்வுட்&oldid=3214334" இருந்து மீள்விக்கப்பட்டது