உள்ளடக்கத்துக்குச் செல்

டிம் சௌத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிம் சௌத்தி
Tim Southee
2009 இல் சௌத்தி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்திமொத்தி கிராண்ட் சௌத்தி
பிறப்பு11 திசம்பர் 1988 (1988-12-11) (அகவை 35)
வங்காரேய், நார்த்லாண்ட், நியூசிலாந்து
உயரம்1.93 மீ (6 அடி 4 அங்)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை மித-விரைவு
பங்குபந்துவீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 237)22 மார்ச் 2008 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு29 நவம்பர் 2019 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 150)15 சூன் 2008 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப3 சூலை 2019 எ. இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்38
இ20ப அறிமுகம் (தொப்பி 30)5 பெப்ரவரி 2008 எ. இங்கிலாந்து
கடைசி இ20ப10 நவம்பர் 2019 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006–இன்றுவடக்கு மாவட்டங்கள் அணி
2011சென்னை சூப்பர் கிங்ஸ்
2011எசெக்சு
2014–2015ராஜஸ்தான் ராயல்ஸ்
2016–2017மும்பை இந்தியன்ஸ்
2017மிடில்செக்சு
2018–2019பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒநாப இ20ப முத
ஆட்டங்கள் 68 140 66 105
ஓட்டங்கள் 1,620 676 220 2,335
மட்டையாட்ட சராசரி 18.20 12.75 12.22 18.24
100கள்/50கள் 0/5 0/1 0/0 1/7
அதியுயர் ஓட்டம் 77* 55 39 156
வீசிய பந்துகள் 15,182 7,021 1,401 21,896
வீழ்த்தல்கள் 256 186 75 400
பந்துவீச்சு சராசரி 29.89 34.26 26.05 27.37
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
8 3 1 17
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 0 0 1
சிறந்த பந்துவீச்சு 7/64 7/33 5/18 8/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
49/– 39/– 29/– 59/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 29 நவம்பர் 2019

டிமோதி கிரேன்ட் சௌத்தி (Timothy Grant Southee, பிறப்பு: டிசம்பர் 11, 1988) என்பவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணி வீரரும் உதவி அணித் தலைவரும் ஆவார். இவர் நியூசிலாந்து அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடி வருகிறார். வலது கை மட்டையாளரான இவர் வலது கை மித விரைவு வீச்சாளராக செயல்படுகிறார். துடுப்பாட்டங்களில் இவர் பன்முக வீரராக விளங்குகிறார். ஊஞ்சல் வகையிலான பந்துகளை வீசுவதன் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார். மிக இளம் வயதில் நியூசிலாந்து அணிக்காகத் தேர்வானவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். தனது 19 ஆம் வயதில் பெப்ரவரி , 2008 இல் இவர் அணியில் சேர்ந்தார். இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இவரின் முதல் போட்டியிலேயே 5 இலக்குகளைக் கைப்பற்றினார். மேலும் அதே போட்டியில் 40 பந்துகளில் 77 ஓட்டங்களை எடுத்தார்.[1] மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். பல போட்டிகளில் விளையாடியதால் கேன் வில்லியம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. எனவே இவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2] இந்தப் போட்டியில் 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.[3]

2011 துடுப்பாட்ட உலகக்கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்டார். இதில் 18 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் பந்துவீச்சு சராசரி 17.33 ஆகும். இந்தத் தொடரில் அதிக இலக்குகள் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தார். 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் ஏழு இலக்குகளைக் கைப்பற்றினார்.

பன்னாட்டுப் போட்டிகள்

[தொகு]

2016 -2017 ஆம் ஆண்டில் தரம்சாலாவில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 10 ஆவது வீரராகக் களமிறங்கிய இவர் தனது முதல் ஒருநாள் போட்டிக்கான அரைநூறினை அடித்தார். இதன்மூலம் பத்தாவது வீரராக களம் இறங்கி ஒருவர் எடுக்கும் ஐந்தாவது அதிகபட்ச ஓட்டம் எனும் சாத்னையைப் படைத்தார். இதே ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தின் முதல் போட்டியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்ப்படவில்லை. ஆனால் ஜீத்தன் படேல் காயம் காரணமாக வெளியேறியதால் அவருக்குப் பதிலாக சவுத்தி களத்தடுப்பாடி அசீம் ஆம்லாவின் இலக்கினை கேட்ச் பிடித்து வீழ்த்தினார்.[4][5]

2014 ஆம் ஆண்டின் முதல் பருவகாலத்தில் புதிய பந்துகளில் சிறப்பாகப் பந்து வீசுபவர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் நிலையான ஆட்டத் திறனை வெளிப்படுத்தி 11 இலக்குகளைக் கைப்பற்றி தொடரைக் கைப்பற்ற உதவினார். பின் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தி 11 இலக்குகளைக் கைப்பற்றி 12 ஆண்டுகளுக்குப் பிறகு தொடரைக் கைப்பற்ற உதவினார். இந்தத் தொடரின் இறுதியில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்டப் பந்து வீச்சாளருக்கான தரவரிசையில் 6 வது இடத்திற்கு முன்னேறினார்.

சான்றுகள்

[தொகு]
  1. http://www.espncricinfo.com/ci/content/player/28235.html
  2. "Kitchen called up for WI T20s, Guptill returns". ESPN Cricinfo. 23 December 2017. http://www.espncricinfo.com/story/_/id/21852167/anaru-kitchen-called-wi-t20s-martin-guptill-returns. பார்த்த நாள்: 23 December 2017. 
  3. "1st T20I, West Indies tour of New Zealand at Nelson, Dec 29 2017". ESPNcricinfo. 29 December 2017. http://www.espncricinfo.com/ci/engine/match/1115798.html. பார்த்த நாள்: 29 December 2017. 
  4. "ODI Records – Most runs in an innings (by batting position)". ESPN Cricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/284242.html. 
  5. "Scorecard in Southee's maiden fifty". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/india-v-new-zealand-2016-17/engine/match/1030219.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிம்_சௌத்தி&oldid=3968776" இலிருந்து மீள்விக்கப்பட்டது