கிளென் மெக்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிளென் மெக்ரா
Glenn McGrath Portrait, 2011, jjron.jpg
ஆத்திரேலியா ஆஸ்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் கிளென் டோனால்டு மெக்ராத்
உயரம் 1.95 m (6 ft 5 in)
வகை பந்து வீச்சாளர்
துடுப்பாட்ட நடை வலது கை
பந்துவீச்சு நடை வலது கை விரைவு வீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 358) 12 நவம்பர், 1993: எ நியூசிலாந்து
கடைசித் தேர்வு 2 ஜனவரி, 2007: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 113) 9 டிசம்பர், 1993: எ தென்னாப்பிரிக்கா
கடைசி ஒருநாள் போட்டி 28 ஏப்ரல், 2007:  எ இலங்கை
சட்டை இல. 11
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1992–2008 நியூ சவுத்து வேல்சு புளூசு (squad no. 11)
2000 Worcestershire
2004 Middlesex
2008 டெல்லி டேர்டெவில்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேஒ.பமு.துப.அ
ஆட்டங்கள் 124 250 189 305
ஓட்டங்கள் 641 115 977 124
துடுப்பாட்ட சராசரி 7.36 3.83 7.75 3.35
100கள்/50கள் 0/1 0/0 0/2 0/0
அதிக ஓட்டங்கள் 61 11 61 11
பந்து வீச்சுகள் 29248 12970 41759 15808
இலக்குகள் 563 381 835 463
பந்துவீச்சு சராசரி 21.64 22.02 20.85 21.60
சுற்றில் 5 இலக்குகள் 29 7 42 7
ஆட்டத்தில் 10 இலக்குகள் 3 n/a 7 n/a
சிறந்த பந்துவீச்சு 8/24 7/15 8/24 7/15
பிடிகள்/ஸ்டம்புகள் 38/– 37/– 54/– 48/–

20 ஆகஸ்ட், 2007 தரவுப்படி மூலம்: cricketarchive.com

கிளென் டொனால்ட் மெக்ரா Glenn Donald McGrath (/məˈɡrɑː/; பிறப்பு: பெப்ரவரி 9, 1970)[1] என்பவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் மித விரைவு வீச்சாளர் ஆவார். இவர் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய வடிவங்களில் ஆத்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார். அனைத்துக்காலத்திற்குமான சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[2] 1990 முதல் 2000 ஆகிய ஆண்டுகளில் துடுப்பாட்டங்களில் ஆத்திரேலியா ஆதிக்கம் செலுத்தியதற்கு இவரும் முக்கியக் காரணமாக இருந்துள்ளார்.[3]

நிலையான வேகத்திலும் துல்லியமான பந்துவீச்சிற்காகவும் ,சிக்கனமாகப் பந்து வீசி இலக்குகளை வீழ்த்துவதற்காகவும் இவர் பரவலாக அறியபடுகிறார். இவரின் காலகட்டத்தில் அபாயகரமான பந்துவீச்சளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகளை வீழ்த்திய விரைவு வீச்சாளர்களில் முதல் இடத்திலும் அனைத்துப் பந்துவீச்சளர்களின் வரிசையில் முத்தையா முரளிதரன், ஷேன் வோர்ன், அனில் கும்ப்ளே ஆகியோர்க்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் உள்ளார். மேற்கூறிய அனைத்துப் பந்துவீச்சளர்களும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.[4] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 381 இலக்குகளைக் கைப்பற்றி அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் தரவரிசையில் 7 ஆவது இடத்தில் உள்ளார். மேலும் துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் எனும் சாதனையைப் படைத்துள்ளார். டிசம்பர் 23, 2006 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[5] சனவரி,2007 இல் நடைபெற்ற ஐந்தாவது ஆஷஸ் தொடரோடு இவர் ஓய்வு பெற்றார். 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தோடு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார். இந்தத் தொடரின் தொடர்நாயகன் விருதினைப் பெற்று ஆத்திரேலிய அணிவெற்றி பெற மிக முக்கியமான நபர்களில் ஒருவராக விளங்கினார்.[6]

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதல் பருவகாலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். அந்தத் தொடரில் மிகச் சிக்கனமாகப் பந்து விசியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். ஆனால் இரண்டாவது பருவகாலங்களில் இருந்து அவர் விளையாடவில்லை.[7]

மெட்ராசு இறப்பர் பேக்டரி பேஸ் பவுண்டேசன் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். இவருக்கு முன்பாக டென்னீஸ் லில்லீ என்பவர் இருபத்தி ஐந்து ஆண்டுகள் இயக்குநராக இருந்தார்.[8] இவர் தற்போது மெக்றா பவுண்டேசனுடைய துனை இயக்குநராக இருந்து வருகிறார். இவரின் முதல் மனைவி ஜேன் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

மெக்ரா பெப்ரவரி 9, 1970 டப்போவில் பிறந்தார். இவரின் பெற்றோர் பிவர்லி மற்றும் கெவின் மெக்ரா ஆவர்.[9] இவர் நியூ சவுத் வேல்ஸ்சில் வளர்ந்து வந்தார். இங்கு துடுப்பாட்டம் விளையாடி வந்த போது இவரின் திறமையை டக் வால்டர்ஸ் என்பவர் கண்டறிந்தார்.[10] பின் சதர்ன்லேண்ட் அணிக்காக முதல் துடுப்பாட்டங்களில் விளையாடினார். பின் 1992- 1993 ஆம் ஆண்டுகளில் நியூ சவுத்து வேல்சு புளூசு அணிக்காக விளையாடினார். எட்டு முதல் தரத் துடுப்பாட்டங்களில் விளையாடிய பிறகு இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியில் விளையாடுவதற்காகத் தேர்வு செய்யப்பட்டார்.[11]

சான்றுகள்[தொகு]

 1. "Glenn McGrath Cricinfo Profile". கிரிக்இன்ஃபோ.
 2. "All Time Greatest Australian Test Team". கிரிக்இன்ஃபோ. பார்த்த நாள் 2010-09-01.
 3. "Glenn McGrath's Brilliant Career". கிரிக்இன்ஃபோ.
 4. "Bowlers taking 300 wickets". Howstat. பார்த்த நாள் 1 January 2018.
 5. "Glenn McGrath To Retire After World Cup". கிரிக்இன்ஃபோ.
 6. "McGrath eyes perfect one-day finish". கிரிக்இன்ஃபோ. பார்த்த நாள் 22 December 2006.
 7. "Cricket Records | Indian Premier League, 2007/08". Stats.cricinfo.com. மூல முகவரியிலிருந்து 14 April 2009 அன்று பரணிடப்பட்டது.
 8. India Cricket News: Glenn McGrath replaces Dennis Lillee at MRF Pace Foundation, espncricinfo.com; retrieved 23 December 2013.
 9. "The Observer - Sport - Heroes and villains: Glenn McGrath" (2 October 2006). மூல முகவரியிலிருந்து 2 October 2006 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 January 2018.
 10. "Cricketing great's career nearly didn't start". abc.net.au. பார்த்த நாள் 1 January 2018.
 11. "Glenn McGrath Profile". Hindustantimes.com. மூல முகவரியிலிருந்து 30 September 2007 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளென்_மெக்ரா&oldid=2765860" இருந்து மீள்விக்கப்பட்டது