சுனில் காவஸ்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sunil Gavaskar BH.jpg
காவஸ்கரின் மொத்த ஆட்ட நடக்கை விளக்கவரைவு

சுனில் மனோகர் "சன்னி"காவாஸ்கர் (Sunil Manohar "Sunny" Gavaskar (ஜூலை 10, 1949) முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் அணித்தலைவர் ஆவார். இவர் 1970 ஆம் ஆண்டு முதல் 1980 வரை மும்பை மாநிலத் துடுப்பாட்ட அணிக்காகவும் இந்திய தேசியத் துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடினார்.

அனைத்துக் காலத்திற்குமான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் துவக்க ஆட்டக்காரர் ஆவார்.

இவர் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர், அதிக நூறுகள் அடித்தவர் உள்ளிட்ட சாதனைகளைப் படைத்தவர். இவர் தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளில் மொத்தம் 34 நூறுகள் அடித்து சாதனை படைத்துள்ளார்.இந்தச் சாதனையானது 20 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்தது. பின் டிசம்பர், 2005 இல் சச்சின் டெண்டுல்கர் இந்தச் சாதனையை முறியடித்தார். ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளின் இரு பகுதிகளிலும் நூறு ஓட்டங்கள் அடித்த முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இதே போன்று மூன்று முறை இந்தச் சாதனைகளை இவர் புரிந்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 10,000 ஓட்டங்கள் அடித்த முதல் வீரர் இவர் ஆவார். தற்போது 10,000 இலக்குகளுக்கும் அதிகமாக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் பட்டிலில் 13 ஆவது வீரராக உள்ளார்.

இந்தியக் குடியுரிமை விருதுகளான பத்மசிறீ மற்றும் பத்மபூசன் விருதுகளைப் பெற்றுள்ளார்.[1] 2012 ஆம் ஆண்டில் கல் சி கே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றார்.[2]

இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத் தலைவர்[தொகு]

இவரை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் தற்காலிகத் தலைவராக நியமிக்க இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.[3][4]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

கைவிரலில் ஏற்பட்ட காயத்தினால் போர்ட் ஆஃப் ஸ்பெய்ன்,டிரினிடாட்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடாமல் இரண்டாவது போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்கள் எடுத்து அந்த அணிக்கு எதிரான முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.

இந்தத் தொடரின் ஜார்ஜ் டவுன் , கயானாவில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 116, 64* எடுத்தார்.பின் பிரிடஜ் டவுன், பார்படோசுவில் நடைபெற்ற நான்காவது போட்டியில் 1 மற்றும் 117* ஓட்டங்கள் பெற்றார். டிரினிடாட்டில் நடைபெற்ற நான்காவது போட்டியில் 124 மற்றும் 220 ஓட்டங்கள் எடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரை முதன்முறையாக வெற்றிபெற உதவினார். இதன்மூலம் ஒரே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் நூறு மற்றும் இருநூறுகள் அடித்த இரண்டாவது வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன் டக் வால்டர் இந்தச் சாதனையைப் புரிந்தார்.மேலும் ஒரே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் நான்கு நூறுகள் அடித்த முதல் இந்தியர் எனும் சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்த படியாக விஜய் அசாரே ஒரே போட்டியில் இரு முறை நூறு ஓட்டங்கள் எடுத்தார்.

இங்கிலாந்துச் சுற்றுப் பயணம்[தொகு]

1971 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. தனது முதல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டதனால் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் அந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தத் தவறினார். இரு ஐம்பது ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். ஜான் சுனோ வீசிய ஒரு ஓவரில் வேகமாக ஓர் ஓட்டம் எடுக்க ஓடும் போது சுனோமோதியதில் இவர் கீழே விழுந்தார். அதனால் சுனோ போட்டியில் விளையாடத் தடை பெற்றார். அந்தத் தொடரில் மூன்று போட்டிகளிலும் சேர்த்து 144 ஓட்டங்களை 24 எனும் சராசரியோடு எடுத்தார்[5]. இதனால் இவரின் தேர்வு பற்றி எதிர்மறைக் கேள்விகள் எழுந்தன.[6]

இங்கிலாந்தின் இந்தியச் சுற்றுப் பயணம்[தொகு]

1972-73 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. இதுவே இந்திய மண்ணில் கவாஸ்கர் விளையாடும் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போடி ஆகும். ஆனால் முதல் மூன்று போட்டிகளிலும் சரியாக இவர் விளையாடவில்லை.மொத்த்மாக ஐந்து ஆட்டப் பகுதிகளிலும் சேர்த்து அறுபது ஓட்டங்களே எடுத்திருந்தார். அப்போது இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றிருந்தது. இறுதி இரு தேர்வுப் போட்டிகளிலும் போதுமான அளவு ஓட்டங்கள் எடுத்திருந்தார். இந்தத் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்தத் தொடரில் மொத்தமாக 224 ஓட்டங்களை 24.89 எனும் சராசரி பெற்றிருந்தார்.[5] பின் 1974 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் 101மற்றும் 58 ஓட்டங்களை எடுத்தார்.மொத்தமாக 227 ஓட்டங்களை 37.83 சராசரியில் பெற்றார். இந்தத் தொடரினை இந்திய அணி முழுமையாக இழந்தது.[5][6]

மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப் பயணம்[தொகு]

1974-75 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவில் சுற்றுப் பயணம் செய்து ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. அதில் இவர் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதில் வான்கடே மைதானத்தில் 86 ஓட்டங்கள் எடுத்து லேன்ஸ் கிப்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மேலும் ஒரு போட்டியில் 108 ஓட்டங்கள் எடுத்தார்.[5]

1975-76 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. பிஷன் பேடிக்கு காலில் காயம் ஏற்பட்டதனால் சனவரி 1976 இல் ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில் இவர் தலைவராகச் செயல்பட்டார்.[6] ஆனால் அந்தத் தொடரில் 703 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த இரண்டாவது போட்டியில் 156 ஓட்டங்களும் டிரினிடாட்டில் நடந்த மூன்றாவது போட்டியில் 102 ஓட்டங்களையும் எடுத்தார். மூன்றாவது போட்டியில் இவர் 102 ஓட்டங்கள் எடுத்து அணியின் ஓட்டத்தினை அதிகரிக்கச் செய்தார்(4/406). இதன்மூலம் அதிகபட்ச வித்தியாசத்தில் (நான்காவது ஆட்டப் பகுதியில்) அதிகபட்ச ஓட்டங்களில் வெற்றி பெற்ற அணி எனும் சாதனையினை இந்திய அணி பெற்றது.

சாதனைகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். டான் பிராட்மனின் சாதனையான 29 நூறுகளைத் தகர்த்து. 34 நூறுகள் எடுத்தார். பின் இவரின் சாதனையானது சச்சின் டெண்டுல்கரால் தகர்க்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India (2015). பார்த்த நாள் July 21, 2015.
  2. "BCCI names Gavaskar for CK Nayudu award". Wisden India. 25 October 2012. Archived from the original on 8 மே 2018. https://web.archive.org/web/20180508185312/https://www.wisdenindia.com/cricket-news/bcci-names-gavaskar-ck-nayudu-award/32133. 
  3. "பிசிசிஐ தற்காலிக தலைவராக காவஸ்கரை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு". தி இந்து. பார்த்த நாள் 28 மார்ச் 2014.
  4. "SC removes Srinivasan, makes Gavaskar interim BCCI chief - See more at: http://www.hindustantimes.com/sports-news/cricketnews/sc-appoints-gavaskar-as-bcci-working-president/article1-1201355.aspx#sthash.UeJIHtIf.dpuf". HindustanTimes. மூல முகவரியிலிருந்து 2014-03-28 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 மார்ச் 2014.
  5. 5.0 5.1 5.2 5.3 Test Batting and Fielding in Each Season by Sunny Gavaskar, CricketArchive. Retrieved 5 September 2008.
  6. 6.0 6.1 6.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ESPN என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_காவஸ்கர்&oldid=3245365" இருந்து மீள்விக்கப்பட்டது