போர்ட் ஆஃப் ஸ்பெய்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்ட் ஆஃப் ஸ்பெய்ன்
மாநகரம்

Port of Spain night skyline 2008
மேலிருந்து: தேசிய நிகழ்த்துக் கலை அகாதமி, நகரத்தின் வான்காட்சி , தேசிய இசை மற்றும் கலை அருங்காட்சியகம்
நாடு டிரினிடாட் மற்றும் டொபாகோ
பெருநகரம்போர்ட் ஆஃப் ஸ்பெய்ன் பெருநகரப் பகுதி
மாநகரம்போர்ட் ஆஃப் ஸ்பெய்ன் நகரம்
நிறுவப்பட்டது1560
சட்டப்படி (நகரம்)1990
அரசு
 • மேயர்ரேமண்டு டிம் கீ
 • ஆளுகை அமைப்புமாநகராட்சி
பரப்பளவு
 • நிலம்5.2 sq mi (13.4 km2)
ஏற்றம்10 ft (3 m)
மக்கள்தொகை (கணக்கெடுப்பு 2011)
 • மாநகரம்36,963
 • அடர்த்தி10,961.54/sq mi (4,253.73/km2)
 • நகர்ப்புற அடர்த்தி51,780/sq mi (19,992/km2)
 • பெருநகர்269,923
நேர வலயம்AST (ஒசநே-4)
 • கோடை (பசேநே)DST (ஒசநே-4)
தொலைபேசி குறியீடு619, 623, 624, 625, 627, 641, 661, 821, 622, 628, 822
இணையதளம்http://cityofportofspain.gov.tt/
ம.மே.சு டிரினிடாடு மற்றும் டொபாகோவின் ம.மே.சு 0.814, 177 நாடுகளில் 19ஆவதாக உள்ளது. (2007/2008) – high

போர்ட் ஆஃப் ஸ்பெய்ன் (Port of Spain) டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் தலைநகரமாகவும் நாட்டின் மூன்றாவது பெரிய நகராட்சியாகவும் விளங்குகின்றது. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகர மக்கள்தொகை 36,963 ஆகவும்[1] பெருநகரப்பகுதியில் மக்கள்தொகை 128,026 (1990 அலுவல்முறையற்ற மதிப்பீடு) ஆகவும்[2] நாளும் வந்து செல்லும் மக்கள்தொகை 250,000 ஆகவும் உள்ளது.[3] இந்நகரம் பாரியா வளைகுடாப் பகுதியில் டிரினிடாட் தீவின் வடமேற்கில் அமைந்துள்ளது. 600,000 பேர் வசிப்பதாக மதிப்பிடப்படும் கிழக்கு-மேற்கு தொடர்நகரங்களின் அங்கமாகவும் உள்ளது.[4]

இந்நகரம் முதன்மையாக சில்லறை வணிக மற்றும் நிர்வாகத் தலமாக செயல்படுகின்றது. 1757 முதல் தீவின் தலைநகரமாக விளங்குகின்றது. கரிபியன் பகுதிக்கு முதன்மையான நிதியச் சேவைகள் மையமாகவும் விளங்குகின்றது.[5] இப்பகுதியில் அமைந்துள்ள இரு பெரும் வங்கிகளின் தாயகமாக விளங்குகின்றது.

தீவில் அமைந்துள்ள பெரிய கொள்கலத் துறைமுகங்களில் ஒன்றான போர்ட் ஆஃப் ஸ்பெய்ன் கரிபியனின் முதன்மை கப்பல் கட்டும் துறையாகவும் உள்ளது. இத்துறைமுகம் வழியே வேளாண் பொருட்களும் தயாரித்தப் பொருட்களும் ஏற்றுமதியாகின்றது. ஆண்டுதோறும் இங்கு நடக்கும் களியாட்டத் திருவிழா முக்கியச் சுற்றுலா ஈர்ப்பாக விளங்குகின்றது.

கரீபியப் பகுதியில் முதன்மை நகரமாக உருவெடுத்துள்ள போர்ட் ஆப் ஸ்பெய்னில் 2009ஆம் ஆண்டு நடந்த ஐந்தாவது அமெரிக்காக்களின் மாநாட்டிற்கு விருந்தினர்களாக அமெரிக்க குடியரசுத் தலைவர் பராக் ஒபாமாவும் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் இலரி கிளின்டனும் வந்திருந்தனர்.[6] அதே ஆண்டில் பொதுநலவாய அரசுத் தலைவர் மாநாட்டையும் 2011இல் பொதுநலவாய வணிக மன்றத்தையும் ஏற்று நடத்தியது.[7]

மேற்சான்றுகள்[தொகு]

  1. இது டிரினிடாட் & டொபாகோவின் புதிய தலைநகரமாயிற்று. முன்னதாக செயின்ட்.ஜேம்ஸ் தலைநகராக இருந்தது. Table 2 பரணிடப்பட்டது 2017-01-20 at the வந்தவழி இயந்திரம், 2011 கணக்கெடுப்பு, from Ministry of Planning and the Economy, Central Statistical Office, டிரினிடாடு & டொபாகோ அரசு
  2. Halcrow Group (Trinidad & Tobago) Ltd. (December 2000). "Greater Port of Spain Local Area Plan". Archived from the original on 2008-03-03. பார்க்கப்பட்ட நாள் 2007-05-14.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. The Port of Spain City Corporation website பரணிடப்பட்டது 2012-12-17 at the வந்தவழி இயந்திரம். cityofportofspain.org.tt
  4. "Trinidad and Tobago – Country overview, Location and size, Population, Industry, Oil and gas, Manufacturing, Services, Tourism". Nationsencyclopedia.com. பார்க்கப்பட்ட நாள் 2010-06-26.
  5. CIA World Factbook Trinidad and Tobago பரணிடப்பட்டது 2017-12-17 at the வந்தவழி இயந்திரம். cia.gov
  6. The website for the secretariat for the fifth summit of the Americas பரணிடப்பட்டது 2008-02-18 at Archive.today. fifthsummitoftheamericas.org
  7. The website of the secretariat for the CHOGM பரணிடப்பட்டது 2008-09-17 at the வந்தவழி இயந்திரம். chogm2009.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்ட்_ஆஃப்_ஸ்பெய்ன்&oldid=3792775" இலிருந்து மீள்விக்கப்பட்டது