பாஃப் டு பிளெசீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாஃப் டு பிளெசீ
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிரான்சுவா டு பிளெசிஸ்
பட்டப்பெயர்"FAF"
உயரம்5 அடி 11 அங் (1.80 m)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை கழல் திருப்பம்
பங்குசகலதுறை, 20 ஓவர் கிரிக்கெட் கேப்டன்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 314)நவம்பர் 2 2012 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுஜனவரி 2 2015 எ. மேற்கிந்தியத்தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 101)ஜனவரி 18 2011 எ. இந்தியா
கடைசி ஒநாபமார்ச் 3 2015 எ. அயர்லாந்து
ஒநாப சட்டை எண்79
இ20ப அறிமுகம் (தொப்பி 52)செப்டம்பர் 8 2012 எ. இங்கிலாந்து
கடைசி இ20பமார்ச் 11 2015 எ. மேற்கிந்தியத்தீவுகள்
இ20ப சட்டை எண்79
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2004வடக்கத்தியத் துடுப்பாட்ட அணி
2005–தற்போதுடைட்டன்ஸ்
2008–2009லங்காசயர்
2011சென்னை சூப்பர் கிங்ஸ்
2012மேல்பொர்ன் ரேனேகடெசு
2014–தற்போதுசென்னை சூப்பர் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா ஏ-தர இ20
ஆட்டங்கள் 20 71 186 120
ஓட்டங்கள் 1428 2,213 5,947 2,601
மட்டையாட்ட சராசரி 52.20 35.69 41.15 26.12
100கள்/50கள் 3/2 2/12 10/27 1/13
அதியுயர் ஓட்டம் 137 126 126 119
வீசிய பந்துகள் 72 192 2,196 790
வீழ்த்தல்கள் 0 2 54 50
பந்துவீச்சு சராசரி n/a 94.50 36.72 18.34
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a 0
சிறந்த பந்துவீச்சு 0/8 1/8 4/47 5/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/– 41/– 103/– 49/–

பிரான்சுவா 'பாஃப்' டு பிளெசீ (Francois 'Faf' du Plessis, பிறப்பு: 13 சூலை 1984)[1], தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மற்றும் தலைவர் ஆவார். இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை சுழல் திருப்ப பந்துவீச்சாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடி வருகிறார்.

வலதுகை துடுப்பாட்ட வீரரான இவர் 3 ஆவது வீர்ராக களமிறங்கினார். இவர் நார்தன்ஸ், லங்காசயர் மற்றும் டைட்டன்ஸ் , மெல்போர்ன் ரெனெகடஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.[1]

2012 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். இவரின் முதல் போட்டியிலேயே நூறு அடித்தார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் நூறு அடித்த நான்காவது தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனை படைத்தார்.[2] நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் தலைவராக நியமிக்கப்பட்டார்.[3] பின் பெப்ரவரி 2013 இல் முழுநேர தலைவராக நியமிக்கப்பட்டார்.[4]

டிசம்பர் 2016 இல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின் ஆகஸ்டு 2017 இல் ஏ பி டி வில்லியர்ஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய பின்பு அனைத்து வடிவ போட்டிகளுக்கும் இவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.[5][6]

சர்வதேச போட்டிகள்[தொகு]

சனவரி 18, 2011 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 60 ஓட்டங்கள் எடுத்தார். 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை தொடரில் அல்பி மோகலுக்குப் பதிலாக விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். 2012 ஆம் ஆண்டில்அடிலெய்டு நீள்வட்ட அரங்கத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 6 ஆவது மட்டையாளராக அறிமுகமானார். ஜே பி டுமினிக்கு காயம் ஏற்பட்டதால் இவர் விளையாடும் அணியில் அணியில் இடம்பெற்றார்.

இந்தப் போட்டியில் 188 ஒட்டங்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். இந்தப் போட்டியானது சமனில்முடிந்தது. பின் ஆத்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 159 பந்துகளில் 78 ஓட்டங்கள் எடுத்து பென் ஹில்பென்ஹாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 8 ஆவது இணைக்கு ஜாக் கலிசுடன் இணைந்து 93 ஓட்டங்கள் எடுத்து அணியின் ஓட்டம் 338 ஆக அதிகரிக்க உதவினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் அணியைத் தோல்வியிலிருந்து மீட்பதற்காக சிறப்பாக விளையாடி 376 பந்துகளைச் சந்தித்த இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 110* ஓட்டங்களை எடுத்தார். இந்தப் போட்டியின் போது 466 மணித்துளிகள் இவர் களத்தில் இருந்தார். இவர் 6 ஆவது இணைக்கு ஜாக் கலிசுடன் இணைந்து போட்டியை சமன் பெறச் செய்தனர். இந்த இணையில் இவர் மட்டும் 99 ஓட்டங்கள் எடுத்தார்.

அடுத்த போட்டியில் 142 பந்துகளில் 78ஓட்டங்களை எடுத்து அனியின் ஓட்டத்தினை அதிகரிக்க உதவினார். அவர் முதல் ஆட்டப் பகுதியில் தென்னாப்பிரிக்க அணி 75 ஓட்டங்களில் ஆறு இலக்குகளை இழந்து இருந்த சமயத்தில் ராபின் பீட்டர்சனுடன் 45 பந்துகளைச் சந்தித்து 35 ஓட்டங்களையும் வெர்னான் பிலாண்டருடன் இணைந்து 54 பந்துகளில் 30 ஓட்டங்களையும் மோர்னே மோர்கலுடன் இணைந்து 15 பந்துகளில் 17 ஓஒட்டங்களையும் எடுத்தார்.அந்தப் போட்டித் தொடரினை 1-0 எனும் கணக்கில் வெற்றி பெற்றது. 2012 ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டித் தொடரின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[7]

2013 ஆம் ஆண்டில் இவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப்போட்டியின் போது பந்தினை சேதப்படுத்தியதாக இவரின் சம்பளத்தில் இருந்து 50% அபராதத் தொகையாகச் செலுத்தினார்.[8]

2013 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 309 பந்துகளில் 134 ஓட்டங்களை எடுத்தார். அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு 458 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த அணி 450 ஓட்டங்களை எடுத்து போட்டியினை சமன் செய்தது. 2014 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 27 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவர் தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். 98 பந்துகளில் இவர் 106 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அந்தப் போட்டியில் வெற்றி இலக்காக 327 ஓட்டங்கள் இருந்தபோது டிவில்லியர்சுடன் இணைந்து இவர் 206 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் ஆத்திரேலியத்ய் துடுப்பாட்ட அணிக்கு எதிராக அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது இணை எனும் சாதனை படைத்தது. 2013 ஆம் ஆண்டின் கிரிக் இன்போ தளத்தின் பன்னாட்டு இருபது20 போட்டியில் இவரும் இட பெற்றார்.[9] அதற்கு ஆறு நாட்களுக்குப் பின்னர் இவர் தனது இரண்டாவது நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். அதே அணிக்கு எதிராக 109 பந்துகளில் 126 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் அந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி 62 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. 2014 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க, சிம்பாப்வே மற்றும் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிகள் விளையாடிய முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் செப்டம்பர் 4, 2014 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவர் 140பந்துகளில் 121 ஓட்டங்கள் எடுத்தார். இந்தத் துடுப்பாட்டத் தொடரினை தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியது. இவர் தொடர் நாயகனாகத் தேர்வானார். இவர் 2014 ஆம் ஆண்டில் தனது 108 ஆவது போட்டியில் விளையாடிய போது முதன்முறையாக ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சர்வதேசப் போட்டியில் 100 போட்டிகளுக்கும் மேலாக விளையாடி அதன்பிறகு ஒரு வீரர் டக் அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும்.[10][11]


இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]

2018[தொகு]

2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இவரை கிங்சு இலெவன் பஞ்சாபு அணி 1.6 கோடி ரூபாய் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. பின் தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பினைப் பயன்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை தக்கவைத்தது.[1] மே 10,2018 அன்றுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 71 ஓட்டங்களை எடுத்திள்ளார். இவரின் அதிகபட்ச ஒட்டம் 33 ஆகும். இவரின் ஸ்டிரைக் ரேட்116.39 ஆகும்.[1]

பன்னாட்டு சதங்கள்[தொகு]

தேர்வு சதங்கள்[தொகு]

பிரான்சுவா டு பிளெசீயின் தேர்வு சதங்கள்
ஓட்டங்கள் போட்டி எதிராக நகரம்/நாடு நிகழ்விடம் ஆண்டு முடிவு
[1] 110*  ஆத்திரேலியா ஆத்திரேலியா அடிலெயிட், ஆத்திரேலியா அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் 2012 சமன்
[2] 137  நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா போர்ட் எலிசபெத், தென்னாப்பிரிக்கா புனித ஜார்ஜ் நீள்வட்ட அரங்கம் 2013 வெற்றி
[3] 134  இந்தியா தென்னாப்பிரிக்கா ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா வான்டெரெர்சு அரங்கம் 2013 சமன்
[4] 103  மேற்கிந்தியத் தீவுகள் தென்னாப்பிரிக்கா போர்ட் எலிசபெத், தென்னாப்பிரிக்கா புனித ஜார்ஜ் நீள்வட்ட அரங்கம் 2014 சமன்

ஒருநாள் பன்னாட்டு சதங்கள்[தொகு]

பிரான்சுவா டு பிளெசீயின் ஒருநாள் அனைத்துலக சதங்கள்
ஓட்டங்கள் போட்டி எதிராக நகரம்/நாடு நிகழ்விடம் ஆண்டு முடிவு
[1] 106  ஆத்திரேலியா சிம்பாப்வே ஹராரே, சிம்பாப்வே ஹராரே விளையாட்டுக் கழகம் 2014 வெற்றி
[2] 126  ஆத்திரேலியா சிம்பாப்வே ஹராரே, சிம்பாப்வே ஹராரே விளையாட்டுக் கழகம் 2014 தோல்வி
[3] 121  சிம்பாப்வே சிம்பாப்வே ஹராரே, சிம்பாப்வே ஹராரே விளையாட்டுக் கழகம் 2014 வெற்றி

இருபது20 அனைத்துலக சதங்கள்[தொகு]

பிரான்சுவா டு பிளெசீயின் இருபது20 அனைத்துலக சதங்கள்
ஓட்டங்கள் போட்டி எதிராக நகரம்/நாடு நிகழ்விடம் ஆண்டு முடிவு
[1] 119 22  மேற்கிந்தியத் தீவுகள் தென்னாப்பிரிக்கா ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா புதிய வான்டெரெர்சு அரங்கம் 2015 தோல்வி

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 "IPLT20.com - Indian Premier League Official Website", www.iplt20.com, archived from the original on 2018-03-31, பார்க்கப்பட்ட நாள் 2018-05-11
 2. Scorecard, Wisden India, பார்க்கப்பட்ட நாள் 2012-11-26
 3. Du Plessis to lead South African Twenty20 side, Wisden India, பார்க்கப்பட்ட நாள் 2012-12-12
 4. Du Plessis takes over as T20 skipper, Wisden India, archived from the original on 2013-12-05, பார்க்கப்பட்ட நாள் 2013-02-20
 5. "De Villiers steps down as Test captain". espncricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 13 January 2018.
 6. "De Villiers steps down as ODI captain, available for Tests". espncricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 13 January 2018.
 7. Du Plessis to lead South African Twenty20 side, Wisden India, பார்க்கப்பட்ட நாள் 12 December 2012
 8. Ali, Rizwan (26 October 2013), South Africa's Faf du Plessis fined 50 per cent of match fee for ball tampering, London: The Independent, பார்க்கப்பட்ட நாள் 26 October 2013
 9. "AB, Ajmal and Co". www.espncricinfo.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-18.
 10. "Most international innings before first duck". ESPNcricinfo. 3 March 2017. பார்க்கப்பட்ட நாள் 3 March 2017.
 11. "Faf du Plessis first to play in 100 international innings before first duck". cricketcountry. 3 March 2017. பார்க்கப்பட்ட நாள் 3 March 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஃப்_டு_பிளெசீ&oldid=3370727" இலிருந்து மீள்விக்கப்பட்டது