போட்டித் தேர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போட்டித் தேர்வு (Competitive examination) என்பது, மாணவா்களின் திறன்களை சோதிப்பதற்காக நடத்தப்படும் ஒரு தோ்வு. இதில் போட்டியாளர்களில் வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மற்றவர்கள் நிராகரிக்கப்படுவார்கள்.

போட்டித்தேர்வுகள் பெரும்பாலும் பல்கலைக்கழகம், கல்லூரி சேர்க்கை அல்லது மேல்நிலைப் பள்ளிகளுக்கான நுழைவுத் தேர்வு போன்றவற்றிற்கு பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் பொதுத் துறைகளில் தேவைப்படும் பதவிகள், இந்திய ஆட்சிப் பணி போன்ற தேர்வுகள் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரையிலான பல பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் வழியாக அப்பணிகள் நிறப்பப் படுகின்றன.

போட்டித் தேர்வுகள் நடத்துவதற்கான காரணங்களாக தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பது, செல்வாக்கு செலுத்துதல், பக்கசார்பு அல்லது பிற கவலைகள் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்காக நடத்தப்படுவதாக கூறப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

Best book for competitive. by somesh.routray11 on Jul 04, 2016

"https://ta.wikipedia.org/w/index.php?title=போட்டித்_தேர்வு&oldid=3598147" இலிருந்து மீள்விக்கப்பட்டது