விஜய் மல்லையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விஜய் மல்லையா
Vijaymallya.jpg
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
1 சூலை 2010 – 2 மே 2016
தொகுதி கர்நாடகா
தனிநபர் தகவல்
பிறப்பு 18 திசம்பர் 1955 (1955-12-18) (அகவை 66)
கொல்கத்தா, மேற்கு வங்காளம்,  இந்தியா
தேசியம் இந்தியன்
இருப்பிடம் லண்டன், இங்கிலாந்து
பணி அரசியல்வாதி, தொழிலதிபர்

டாக்டர் விஜய் மல்லையா (கன்னடம் கொங்கனி: ವಿಜಯ್ ಮಲ್ಯ, 18 டிசம்பர் 1955 ல் பிறந்தார்). இவர் ஒரு முன்னாள் ராஜ்ய சபா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் மதுபானங்கள் மற்றும் விமான தொழிலில் பெரும் பணக்காரர் ஆவார். இவர் யுனைட்டட் ப்ரெவெரீஸ் க்ரூப்ஸ் மற்றும் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் தலைவராவார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு சுமார் 1.2 பில்லியன் டாலர்கள் ஆகும்.[1] இவருடைய பகட்டான விருந்துகள் மற்றும் இவரது உணவு விடுதிகள், தானியங்குகள், போர்முலா ஒன் டீம் போர்ஸ் இந்தியா, ஐபிஎல் கிரிக்கெட் குழுவான ராயல் சாலேன்ஜெர்ஸ் பெங்களூர், மற்றும் இவருடைய இயந்திர படகு, இந்தியன் எம்ப்ரேஸ் போன்றவைகள் காரணமாக பத்திரிகைகளில் தொடர்ந்து செய்தியாக இடம் பெற்று வருகிறார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

மல்லையா கர்நாடகாவில் மங்களூருக்கு அருகே உள்ள பன்டவல் நகரத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் கல்கத்தாவிலுள்ள[2] கொல்கத்தா, லா மார்டிநீர் ஆடவர் கல்லூரியில் கல்வி பயின்றார் மற்றும் கொல்கத்தாவிலுள்ள புனித சேவியர்ஸ் கல்லூரியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார். கலிபோர்னியா தெற்கு பல்கலைக்கழகம் இவருக்கு, இவரது வணிக நிர்வாக தத்துவ ஆய்விற்கான கௌரவ முனைவர் பட்டதை வழங்கியது. மல்லையா இருவரை திருமணம் புரிந்துகொண்டார். இவருடைய முதல் மனைவி சமீரா மற்றும் இவர்களுக்கு சித்தார்த்தா விஜய் மல்லையா என்ற ஒரு மகன் இருக்கிறார். அதற்குப் பிறகு, இவர் ரேகாவை மணந்து லீனா மல்லையா, தான்யா மல்லையா என்ற இரு மகள்கள் உள்ளனர்.[சான்று தேவை]

தொழில்[தொகு]

பீர் வடிப்பாலைகள்[தொகு]

1984ல் யுனைட்டட் ப்ரெவெரீஸ் குழுமத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அன்றிலிருந்து அறுபது நிறுவனங்களுக்கும் மேற்பட்ட பன்னாட்டளவிலான பல வணிக அமைப்புகளைக் கொண்டதாக இக்குழு வளர்ச்சியடைந்துள்ளது, 1998-1999 ஆம் ஆண்டு காலத்தில் இந்நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 63.9% வளர்ச்சியடைந்து 11.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. இக்குழுவின் கவனம் வணிக மையப் பகுதிகளாகத் திகழும் மது பானங்கள், உயிர் அறிவியல்கள், பொறியியல், விவசாயம் மற்றும் வேதிப்பொருள்கள், தகவல் தொழில்நுட்பம், விமானம் வடிவமைத்தல் மற்றும் ஓய்வெடுத்தல் ஆகியவற்றைச் சூழ்ந்து இருந்தது. பாரம்பரியமிக்க மதுபானமான மேக்டோவேள் இவருக்குச் சொந்தமானதாகும்.

மே 2007 ல் யுனைட்டட் ப்ரெவெரீஸ் குழுமம் சுமார் 6000 கோடி இந்திய ரூபாய்க்கு வய்ட் மற்றும் மக்கேவால் உருவாக்கப்பட்ட ஸ்காட்ச் விஸ்கியினை கையகப்படுத்துவதாக அறிவித்தது.[3] 2005 ல் இவர் சாண்ட்பைபர் மற்றும் ஜிங்காரோ என்னும் பெயர் கொண்ட இரண்டு முன்னோடி பீர்வகைகளைச் சொந்தமாக கொண்டிருந்த மில்லேனியம் வடிப்பாலைகள் நிறுவனத்தினை (முன்பு இநேர்டியா தொழில் நிறுவனம் என்றழைக்கப்பட்டது) தனதாக்கிக் கொண்டார்.

விமான நிறுவனங்கள்[தொகு]

2005 ல் கிங் பிஷர் விமான நிறுவனம் விஜய் மல்லையா நிறுவினார். தற்போது, இவ்விமான உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவை மூலம் 32 நகரங்களை இணைக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவின் குறைந்த விலை விமான சேவை அளித்து வந்த ஏர் டெக்கானின் 26% உரிமை பங்குகளை கிங் பிஷர் விமான நிறுவனம் பெற்றது. பின்னர் முழுவதுமாக பெற்று தன்னுடைய கிங் பிஷர் ஃபிளீட் விமானங்களோடு ஒருங்கிணைத்தார், கிங் பிஷர் ரெட் என அதற்கு மறுபெயரிட்டார். விஜய் மல்லையா மற்றும் ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல் ஆகியோர் 13 அக்டோபர் 2008 இல் நடந்த மாரத்தான் சந்திப்பிற்கு பிறகு தங்கள் கூட்டு உடன்படிக்கையை வெளியிட்டனர்.[4]

விளையாட்டுகளில் முதலீடு[தொகு]

ஃபார்முலா ஒன்[தொகு]

2009 ஆம் ஆண்டு ஜப்பானின் கிராண்ட் பிரிக்ஸ், மல்லையாவின் போர்ஸ் இந்தியா போர்முலா ஒன் குழுவிற்காக விடன்ட்டனியோ லியூஸி ஓட்டுதல்.

2007 ல், நெதர்லாந்துலிருந்து 88 மில்லியன் ஐரோப்பிய டாலர்களுக்கு மல்லையா மற்றும் மோல் குடும்பம் ஸ்பயிகர் எப்1 குழுவை வாங்கினார்கள்.[5] 2008 ஆம் ஆண்டிலிருந்து இக்குழுவானது தன்னுடைய பெயரை போர்ஸ் இந்திய எப்1 என்று மாற்றியது[6]. விஜய் மல்லையா, ஜான் மோல் மற்றும் மிச்சில் மோல் ஆகியோர் அக்குழுவின் உரிமையாளர்களாக மாறிய பிறகு அக்குழுவின் காருக்கு விஜேஎம்-01 என்ற பெயரினைச் சூட்டினார்கள்.

மேலும் மல்லையா எப்ஐஏ வேர்ல்ட் மோட்டார் ஸ்போர்ட் கவுன்சிலில் இந்திய பிரதிநிதியாகக் கலந்து கொண்டு 2009 முதல் 2013 வரை தனக்கென்று ஒரு இருக்கையை வைத்துக் கொண்டிருக்கிறார்.[7]

கால்பந்து[தொகு]

மல்லையாவின் யுனைட்டட் ப்ரெவெரீஸ் நிறுவனம் கிழக்கு வங்காளம் மற்றும் கல்கத்தாவிலுள்ள மொஹுன் பாகன் கால்பந்தாட்ட சங்கங்களுக்கு ஆதரவளித்து வருகிறது.[8]

மேலும் இவர் பெர்னி ஏக்லேஸ்டன், ப்லவியோ ப்ரியாட்டோர் மற்றும் லக்ஷ்மி மிட்டல் போன்ற தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் பகுதியாக விளங்கிய, குயின்ஸ் பார்க் ரேன்ஜெர்ஸ் எப்சியினை முயன்று பெற்றுள்ளார்.[9]

கிரிக்கெட்[தொகு]

மல்லையாவின் கொடிகட்டிப் பறக்கும் யூபி குழு இந்தியன் பிரிமியர் லீக்கில் உள்ள ராயல் சேலன்ஜர்ஸ் பெங்களூர் குழுவை சொந்தமாகக் கொண்டுள்ளது. இவர் இந்த குழுவிற்காக US$111.6 மில்லியன்களை கொடுத்து ஏலத்தில் வெற்றி பெற்றார். ராயல் சாலேன்ஜெர்ஸ் பெங்களூர் குழுவில் உள்ள ஆட்டக்காரர்கள் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, கெவின் பீட்டர்சென், ஜச்குஸ் கல்லிஸ், ஷிவ்னரைன் சந்தேர்பால், ராபின் உத்தப்பா, மார்க் பௌசெர், சுனில் ஜோஷி, மிஸ்பாஹ்-உல்-ஹக், ரோஸ் டேலர் மற்றும் டேல் ஸ்டெயின் ஆகியோராவர்.

குதிரைப் பந்தயம்[தொகு]

மேலும் மல்லையா குதிரைப் பந்தயத்தில் தான் கொண்ட விருப்பம் காரணமாக யுனைடட் ரேசிங் மற்றும் ப்ளட்ஸ்டாக் ப்ரீடர்ஸ் ( யூஆர்பிபி )- ஐ சொந்தமாகக் கொண்டுள்ளார். கர்நாடக அரசு இவரிடமிருந்து குனிகள் ஸ்டட் பண்ணையை ( யூஆர்பிபி) குத்தகையின் கீழ் பெற்று நடத்துகிறது.

அரசியல் வாழ்க்கை[தொகு]

2000 ல் மல்லையா அரசியலில் பிரவேசமானார் மற்றும் அப்பொழுது ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமிக்கு மாற்றாக நியமனமாகி, உண்மையான ஜனதா தளத்தின் பிரிவினைக்கான சக்தியாக இருந்தார். கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் இவருடைய கட்சி ஏறத்தாழ அனைத்து 224 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஊடகம் மூலமாக, திடமாகத் தொடர்ந்து இவர் பிரச்சாரம் செய்தார், ஆனால் இவருடைய கட்சி எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாமல் தோல்வியைத் தழுவியது. தேர்தலில் கட்சி தோல்வியைத் தழுவியதையடுத்து, ஊடகங்களால் இக்கட்சியானது பெரிதும் புறக்கணிக்கப்பட்டது.

ஏல கொள்முதல்கள்[தொகு]

இந்தியாவின் சிறந்த கலாச்சார மதிப்பைக் கொண்டிருக்கும் பொருள்களின் ஏலத்தில் விஜய் மல்லையா பாராட்டும் விதமாக ஏலம் கோரியது குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை] 2004 ஆம் ஆண்டு லண்டன் - ல் நடைபெற்ற ஒரு ஏலத்தில் திப்பு சுல்தானின் வாளிற்காக £175,000 க்கு வெற்றிகரமான ஏல கோரிக்கை விடுத்து இவர் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.[10] மார்ச் 2009 ஆம் ஆண்டு, நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் மகாத்மா காந்திக்கு சொந்தமான பொருள்களுக்காக மல்லையா 1.8 அமெரிக்க டாலர்களுக்கு வெற்றிகரமாக ஏலம் கோரினார், முதலில் இந்த ஏலம் இந்தியாவில் அமளி ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது மேலும் உடன்படிக்கைகளின் கீழ் செல்வதிலிருந்து தடுப்பதில் அரசு கலைத்து தோல்வியுற்றது.[11][12][13]

சாதனைகள்[தொகு]

 • மல்லையாவினுடைய மருத்துவமனை பெங்களூரில் நிறுவப்பெற்றது. தன்னுடைய தகப்பனாரின் பெயரைக் கொண்ட விட்டல் மல்லையா சாலையில் இம்மருத்துவனை அமைந்துள்ளது.
 • பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியான மல்லையா ஆதிதி பன்னாட்டு பள்ளிக்கு நிதி உதவி செய்தார்.

வழக்கு[தொகு]

இந்தியாவில் பல வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடியை கடனாக பெற்று ஏய்ப்பு செய்ததாக இவர் மீது அமலாக்கப்பிரிவு மற்றும் நடுவண் புலனாய்வுச் செயலகம் வழக்கு பதிவு செய்துள்ளது. இவர் லண்டனுக்கு தப்பிச் சென்றதால் இவரை தேடப்படும் குற்றவாளியாக "உச்சநீதிமன்றம்" அறிவித்தது.[14][15]

மேலும் பார்க்க[தொகு]

 • இந்தியன் எம்ப்ரேஸ் - விஜய் மல்லையாவுக்கு சொந்தமான தனிப்பட்ட உல்லாச படகு.

குறிப்புகள்[தொகு]

 1. விஜய் மல்லையா இந்தியாவுடைய கோடீஸ்வரர், போர்ப்ஸ்.காம் மார்ச் 2008 - ல் அடையப்பட்டது
 2. 'விஜய் மல்லையா : ஆத்மா இருந்து கொண்டிருக்கிறது'தி டைம்ஸ் ஆப் இந்தியா நடப்பு பதிப்பு, 22 ஏப்ரல் 2002
 3. பி பி சி செய்திகள் கோடீஸ்வரருக்கு விற்ற இலாபகரமான விஸ்கி.
 4. ஜெட் விமான நிறுவனத்தின் பத்திரிகைச் செய்தி[தொடர்பிழந்த இணைப்பு]
 5. "போர்முலா ஒன் மறுகண்டுபிடிப்பு| போர்முலா ஒன் குழு ஸ்பைகருக்காக விஜய் மல்லையாவின் ஏல கோரிக்கை". 2008-12-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-01-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 6. "போர்முலா ஒன் மறுகண்டுபிடிப்பு| ஸ்பைகர் இப்பொழுது அதிகாரப்பூர்வமான போர்ஸ் இந்திய போர்முலா ஒன் குழு". 2008-12-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-01-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 7. "FIA Elects World Council Members". fia.com. Fédération Internationale de l'Automobile. 2009-10-23. 2011-11-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-10-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 8. "Mallya sore with Bagan brawls". Financial Express. 2004-10-03. 2008-02-21 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Indian Formula One high roller joins Ecclestone and Briatore's party at Queens Park Rangers". Daily Mail. 
 10. ஹபிப் பேரி,திப்புவினுடைய வாள் இந்தியர் கைகளுக்கு திரும்பியது. பி பி சி செய்திகள், ஏப்ரல் 7, 2004.
 11. காந்தி ஏல வெற்றிக்கு உதவியது இந்தியா, பி பி சி செய்திகள், 5 மார்ச் 2009
 12. காந்தி பொருள்கள் இந்தியாவிற்கு திரும்பியது, பி பி சி செய்திகள், 5 மார்ச் 2009
 13. இந்தியாவிற்கு காந்தியினுடைய தனிப்பட்ட பொருள்களை வாங்கியவர்கள் திருப்பி தருவார்கள் பரணிடப்பட்டது 2009-10-03 at the வந்தவழி இயந்திரம், ராம லக்ஷ்மி, தி சிட்னி மார்னிங் ஹெரல்ட், 5 மார்ச் 2009.
 14. ".900 கோடி மோசடி.. மல்லையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை".
 15. "மல்லையாவை ஆஜர்படுத்தினால்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு... சுப்ரீம் கோர்ட் அதிரடி!".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_மல்லையா&oldid=3480676" இருந்து மீள்விக்கப்பட்டது