உள்ளடக்கத்துக்குச் செல்

தப்பியோடியவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தப்பியோடியவர் (fugitive or runaway), குற்றச் செயல் புரிந்தோர் காவல் துறை அல்லது சிறைச்சாலை அல்லது நீதிமன்ற விசாரணை அல்லது புலனாய்வு விசாரணையிலிருந்து தப்பி ஓடிய தேடப்படும் நபரைக் குறிக்கும். தப்பியோடிவர் ஒரு குற்றத்திற்காக தண்டனை பெற்றவராகவோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவராகவோ, அரசு சட்ட அமலாக்கத்திடம் இருந்து மறைந்திருப்பவராகவோ அல்லது வேறு நாட்டில் தஞ்சம் புகுந்தவராகவோ இருக்கலாம்.[1]

ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஒரு நபர் தப்பியோடவோ, மறைந்திருக்கவோ அல்லது வேறு நாட்டில் தஞ்சம் புகவோ கூடாது.[2]பன்னாட்டுக் காவலகம் தப்பியோடிய நபர்களை நேரடியாகப் பின்தொடர்வதற்கோ அல்லது தடுத்து வைப்பதற்கோ எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லாத சர்வதேச அமைப்பாகும். தப்பியோடியவரின் நாட்டின் காவல் துறை பன்னாட்டுக் காவல்துறை அறிவிப்பு மூலம் மட்டுமே வெளிநாட்டில் வாழும் தப்பியோடிரை கைது செய்ய இயலும்.[3]

பல அதிகார வரம்புகளில், விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது காவலில் இருந்து தப்பியோடியவர், அவர் மீது சுமத்தப்பட்ட எந்தவொரு தண்டனை அல்லது தண்டனைகளையும் மேல்முறையீடு செய்யும் உரிமையை இழக்கிறார். ஏனெனில் தப்பிச் செல்லும் செயல் நீதிமன்றத்தின் அதிகாரத்தை மீறுவதாகக் கருதப்படுகிறது. 2003ஆம் ஆண்டில், கற்பழிப்பு குற்றவாளி ஆண்ட்ரூ லஸ்டர் தப்பியோடியவனாக ஆறு மாதங்கள் கழித்ததன் அடிப்படையில் அவரது மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டன (அவர் விசாரணையில் ஆஜராகமலேயே தண்டனை விதிக்கப்பட்டார்").[4][5][6]

தடுப்பு முறைகள்

[தொகு]

தப்பியோடியவரை கைது செய்வதற்கு பல முறைகள் உள்ளது.[7]அவைகளில் தப்பியோடிவரின் தொலைபேசியை ஒட்டு கேட்பது, தொலைபேசி அழைப்பு பதிவேட்டை ஆராய்வது[8], வங்கி கடன் அட்டை மற்றும் வங்கி மின்னனு பரிவர்த்தனைகளை ஆராய்வது, சுவரொட்டிகள் தப்பியோடியரின் படத்தை விளம்பரப்படுத்துவது அடங்கும்.[9]மேலும் சிறைச்சாலை பதிவேடுகளையும் ஆய்வு செய்யலாம்.

இந்தியாவிலிருந்து தப்பியோடியவர்கள்

[தொகு]

பாலியல் மற்றும் நிதிசார் குற்ற வழக்குகளில் சிக்காமல் இருக்க இந்தியாவிலிருந்து டிசம்பர், 2021 முடிய 33 பேர் வெளிநாடுகளில் தப்பியோடியுள்ளனர்.[10]அவர்களில் சிலர்:

  1. நித்தியானந்தா
  2. விஜய் மல்லையா
  3. லலித் மோடி
  4. நீரவ் மோடி
  5. நீஷால் மோடி (நீரவ் மோடியின் சகோதரர்) [11]
  6. மொகுல் சோக்சி[12]
  7. நிதின் சந்தேசரா[13]
  8. சேத்தன் குமார் சந்தேசரா (நிதின் சந்தேசராவின் சகோதரர்)[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lehman, Jeffrey; Phelps, Shirelle (2005). West's Encyclopedia of American Law, Vol. 5 (2 ed.). Detroit: Thomson/Gale. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780787663742.
  2. Sadoff, David A. (2016-12-24). Bringing International Fugitives to Justice: Extradition and its Alternatives (in ஆங்கிலம்). Cambridge University Press. pp. 30–31, 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107129283.
  3. Sadoff, David A. (2016-12-24). Bringing International Fugitives to Justice: Extradition and its Alternatives. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107129283.
  4. "California Courts - Appellate Court Case Information". appellatecases.courtinfo.ca.gov. Archived from the original on 2012-07-07.
  5. [[[:வார்ப்புரு:SCOTUS URL Docket]] Supreme Court of the United States Docket for 03-854, Andrew Stuart v. California] December 11, 2003
  6. "Legal Blog Network - FindLaw" (PDF). Findlaw.
  7. Nyagudi, Nyagudi Musandu. "Intelligence Studies in Forensic Criminology of Fugitive Emanating Definitive and Locational Parameters – dissertation without errata" (PDF). Figshare. Figshare repository. பார்க்கப்பட்ட நாள் 11 September 2015.
  8. Pen register
  9. Most-Wanted: How Officials Find Fugitives
  10. { https://timesofindia.indiatimes.com/business/india-business/33-financial-fugitives-from-india-are-still-hiding-abroad-govt-data/articleshow/88313738.cms 33 financial fugitives from India are still hiding abroad: Govt data]
  11. CBI Moves Extradition Request Against Nirav Modi's Brother
  12. திடீர் திருப்பம்.. மொகுல் சோக்சி இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும்.. கோர்டில் டொமினிகா அரசு வாதம்
  13. Fugitive Sandesaras offer to repay ₹900 crore in Rs 16,000-crore bank fraud case
  14. From Gujarat to Albania and Nigeria, How the Sandesara Business Family Evaded Justice

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தப்பியோடியவர்&oldid=3810484" இலிருந்து மீள்விக்கப்பட்டது