உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னாட்டுக் காவலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்வதேச காவல் துறை
Common nameஇண்டர்போல்
சுருக்கம்ICPO
துறையின் கண்ணோட்டம்
உருவாக்கம்7 செப்டம்பர் 1923
பணியாளர்கள்703 (2012)[1]
ஆண்டு வரவு செலவு திட்டம்€70 மில்லியன் (2012)[2]
அதிகார வரம்பு அமைப்பு
International agency
நாடுகள்190
ஆட்சிக் குழுபன்னாட்டு காவலக பொதுக் குழு
Constituting instrument
செயல்பாட்டு அமைப்பு
தலைமையகம்லியான்ஸ் நகரம், பிரான்சு
துறை நிருவாகிகள்
  • Mireille Balestrazzi, தலைவர்
  • ரோனால்டு நோபல், தலைமைச் செயலர்
வசதிகள்
தேசிய நடுவண் குழுs190
இணையத்தளம்
interpol.int

சர்வதேச காவல் துறை (The International Criminal Police Organization - INTERPOL) சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்காக கொண்டு 1923 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட காவல்துறை அமைப்பு ஆகும். இது 184 உலக நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. இவ் அமைப்பு நாடுகளின் காவல்துறைகளுக்கிடையான ஒத்துழைப்பு, இயைபு ஆக்கத்தை ஏதுவாக்குகின்றது. இவ் அமைப்பின் தலைமையகம் லியான்ஸ், பிரான்சில் அமைந்துள்ளது.

வெளியிடும் உலகாளாவிய அறிவிப்புகள்

[தொகு]

ஒரு நாட்டில் குற்றம் புரிந்து வேறு உறுப்பு நாடுகளில் தங்கியிருப்பவர்களை கண்டு பிடிக்கவும், விசாரணை செய்யவும், கைது செய்து குற்றம் செய்த நாட்டின் அரசிடம் ஒப்படைக்கவும், பண்னாட்டு காவலகம் பன்னாட்டு வானூர்தி நிலையங்கள், குடிவரவு அலுவலகங்கள் மற்றும் பன்னாட்டு எல்லைச்சாவாடிகளுக்கு 7 வண்ணங்களில் அறிவிப்புகளை வெளியிடுவர். 7 வண்ண அறிவிப்புகளும், அதன் நோக்கங்களும் பின்வருமாறு:

ஒரு உறுப்பு நாட்டின் மத்திய காவல் பணியகத்தின் வேண்டுகோளின் பேரில் இன்டர்போலின் பொதுச் செயலகத்தால் 7 வண்ணங்களில் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. மேலும் அவை அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் கிடைக்க வகை செய்யப்படுகிறது.

  • சிவப்பு அறிவிப்பு: குற்ற வழக்குத் தொடர அல்லது தண்டனை அனுபவிக்கத் தேடப்படும் நபர்களின் இருப்பிடத்தை அறிவதற்கும், கைது செய்வதற்காகவும் மற்றும் தேடுதல் பணிக்கு.
  • மஞ்சள் அறிவிப்பு: காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க உதவுதல், பெரும்பாலும் சிறார்களைக் கண்டறிதல் அல்லது தங்களை அடையாளம் காண முடியாத நபர்களை அடையாளம் காண உதவுதல்.
  • நீல அறிவிப்பு: குற்றவியல் விசாரணை தொடர்பாக ஒரு நபரின் அடையாளம், இருப்பிடம் அல்லது செயல்பாடுகள் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரிக்க.
  • கருப்பு அறிவிப்பு: அடையாளம் தெரியாத உடல்கள் பற்றிய தகவல்களைத் தேடுதல்.
  • பச்சை அறிவிப்பு: பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் ஒரு நபரின் குற்றச் செயல்கள் குறித்து எச்சரிக்கை வழங்குதல்.
  • ஆரஞ்சு அறிவிப்பு: பொது பாதுகாப்புக்கு கடுமையான மற்றும் உடனடி அச்சுறுத்தலைக் குறிக்கும் ஒரு நிகழ்வு அல்லது ஒரு நபர் அல்லது ஒரு பொருள் அல்லது செயல்முறை குறித்து எச்சரிக்க செய்தல்.
  • ஊதா அறிவிப்பு: குற்றவாளிகள் பயன்படுத்தும் செயல் முறைகள், பொருள்கள், சாதனங்கள் மற்றும் மறைத்தல் முறைகள் பற்றிய தகவல்களைத் தேட அல்லது வழங்குதல்.

உறுப்பு நாடுகள்

[தொகு]

Sub-bureaus shown in italics.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2012 Annual Report" (PDF). Interpol. Archived from the original (PDF) on 12 ஜனவரி 2015. Retrieved 5 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Financial Statements for the year ended 31 December 2012" (PDF). Interpol. 23 May 2013. Archived from the original (PDF) on 10 ஜனவரி 2014. Retrieved 9 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னாட்டுக்_காவலகம்&oldid=4314772" இலிருந்து மீள்விக்கப்பட்டது