சான் மரீனோ
சான் மரீனோ மோஸ்ட் செரீன் குடியரசு Serenissima Repubblica di San Marino | |
---|---|
குறிக்கோள்: Libertas (இலத்தீன்) "விடுதலை" | |
நாட்டுப்பண்: "Inno Nazionale della Repubblica" | |
![]() | |
தலைநகரம் | சான் மரீனோ |
பெரிய நகர் | செராவால் |
ஆட்சி மொழி(கள்) | இத்தாலிய மொழி1 |
மக்கள் | சமாரினீய |
அரசாங்கம் | குடியரசு |
• காப்டன் | அலெசாண்ட்ரோ மான்சீனி அலெசாண்ட்ரோ ரொசி |
உருவாக்கப்பட்டது | |
• திகதி | 301 செப்டம்பர் 3 |
பரப்பு | |
• மொத்தம் | 61 km2 (24 sq mi) (223 ஆவது) |
• நீர் (%) | புறக்கணிக்கத் தக்கது |
மக்கள் தொகை | |
28,117 (212 ஆவது) | |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2001 மதிப்பீடு |
• மொத்தம் | $904 மில்லியன் (195 ஆவது) |
• தலைவிகிதம் | $34,600 (12 ஆவது) |
நாணயம் | யூரோ (€) (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (ம.ஐ.நே) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+2 (ம.ஐ.கோ.நே) |
அழைப்புக்குறி | 378 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | SM |
இணையக் குறி | .sm |
சான் மரீனோ (San Marino, (இத்தாலிய மொழி: Serenissima Repubblica di San Marino) அப்பெனின் மலைகளில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது இத்தாலியால் முழுவதுமாகச் சூழப்பட்ட நாடு. ஐரோப்பாவில் உள்ள மிகச் சிறிய நாடு இதுவாகும்.
சான் மரீனோ உலகிலேயே மிகவும் பழைமையான குடியரசு நாடு எனப்படுகிறது. இது 301 ஆம் ஆண்டில் சென் மரீனஸ் என்பவரால் அமைக்கப்பட்டது. சான் மரீனோ உலகிலேயே மிகவும் பழைமையான அரசியலமைப்பைக் கொண்டுள்ளது. இதன் அரசியலமைப்பு 1600 இல் எழுதப்பட்டது. இன்றும் இது நடைமுறையில் உள்ளது.[1]
1945 இலிருந்து 1957 வரை இந்நாடு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கம்யூனிச நாடாகவும் இருந்தது.
1968இல் நவுரு நாடு விடுதலை அடையும் வரை சான் மரீனோ உலகின் மிகவும் சிறிய குடியரசு நாடாக இருந்தது.
சான் மரீனோ ஐரோப்பியக் கவுன்சிலில் 1988 முதலும், ஐநா அவையில் 1992 முதலும் அங்கத்துவம் வகிக்கிறது. ஆனாலும் இது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கவில்லை.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ அமெரிக்க காங்கிரசின் சட்ட நூலகம். "சான் மரீனோ சட்டங்கள்: San Marino". மார்ச் 29, 2007 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புக்கள்[தொகு]
- சிஐஏ உலகத் தரவுகள்: சான் மரீனோ பரணிடப்பட்டது 2010-07-11 at the வந்தவழி இயந்திரம்