கோர்சாவ்
கோர்சாவ் Curaçao Kòrsou | |
|---|---|
| கோர்சாவ் நாடு | |
| பண்: | |
அமைவிடம் (சிவப்பு) | |
| இறைமையுள்ள நாடு | |
| நாட்டு அங்கீகாரம் | 10 அக்டோபர் 2010 |
| தலைநகர் | வில்லெம்ஸ்டாடு 12°6′18″N 68°56′6″W / 12.10500°N 68.93500°W |
| பெரிய நகரம் | தலைநகர் |
| ஆட்சி மொழிகள் | |
| இனக் குழுக்கள் (2018) | 75.4% கியூரசாவோக்கள் 9% இடச்சு 3.6% டொமினிக்கன் 3% கொலம்பியன் 1.2% எயிட்டியர் 1.2% சுரிநாமியர் 1.1% வெனிசுவேலாக்கள் 1.1% அரூபன்கள் 0.9% அறியப்படாதோர் 6% ஏனையோர்[1] |
| சமயம் |
|
| இடப்பெயரர் |
|
| அரசு | நாடாளுமன்ற சார்பாண்மை மக்களாட்சி (அரசியல்சட்ட முடியாட்சிக்குள்) |
• மன்னர் | விலெம் அலெக்சாந்தர் |
• ஆளுநர் | மவ்ரித்சு டெ கோர்ட் |
• பிரதமர் | கில்மார் பிசாசு |
| சட்டமன்றம் | நாடாளுமன்றம் |
| பரப்பளவு | |
• மொத்தம் | 444[2] km2 (171 sq mi) (181-ஆவது) |
| உயர் ஏற்றம் | 372 m (1,220 ft) |
| மக்கள்தொகை | |
• 2023 கணக்கெடுப்பு | 155,826[3] |
• அடர்த்தி | 349.13/km2 (904.2/sq mi) |
| மொ.உ.உ (கொ.ஆ.ச) | 2021[4] மதிப்பு |
• மொத்தம் | $5.5 பில். (184-ஆவது) |
• தலைக்கு | $35,484 (45-ஆவது) |
| மொ.உ.உ (nominal) | 2021 மதிப்பு |
• மொத்தம் | $3.5 பில்.[5] (149-ஆவது) |
• தலைக்கு | $22,581 (40-ஆவது) |
| ம.மே.சு (2012) | 0.811[6] very high |
| நாணயம் | கரிபிய கில்டார் |
| நேர வலயம் | UTC-4:00 (அத்திலாந்திக்கு நேர வலயம்) |
| ஓட்டுநர் பக்கம் | வலம் |
| தொலைபேசிக் குறியீடு | +599 9 |
| ISO 3166 குறியீடு |
|
| இணைய ஆள்களம் | .cw |
கோர்சாவ் (பப்பியாமெந்தோ: Kòrsou), கியூரசாவ் (ஆங்கிலம்: Curaçao; ஒலிப்பு: /kʊərəsaʊ/; அல்லது கூரசாவ் (இடச்சு: Curaçao),[7][8] அதிகாரபூர்வமாக கோர்சாவ் நாடு[9] என்பது நெதர்லாந்து இராச்சியத்திற்குள் உள்ள தீவு நாடாகும். இது தெற்கு கரிபியக் கடலில் (குறிப்பாக இடச்சு கரிபியப் பகுதியில்) வெனிசுவேலாவிற்கு ஏறத்தாழ 65 கிமீ (40 மைல்) கிழக்கேயும், அரூபாவிற்கு 80 கிமீ (50 மைல்) தென்கிழக்கேயும் அமைந்துள்ளது. இத்தீவு நாட்டில், கோர்சாவ் என்ற பிரதான தீவும், அதைவிட மிகச் சிறியதும், மக்கள் வசிக்காததுமான கிளீன் கோர்சாவ் ("சின்ன கோர்சாவ்") என்ற தீவும் அடங்கும்.[9]
கோர்சாவின் மக்கள்தொகை 158,675 (சனவரி 2019 மதிப்பு) ஆகும்,[2] பரப்பளவு 444 சதுரகிமீ; இதன் தலைநகரம் வில்லெம்ஸ்டாடு ஆகும்.[9] அரூபா, பொனயீர் தீவுகளுடன் கோர்சாவ் ஏபிசி தீவுகளில் உள்ளடங்கும்.[10][11] கூட்டாக, கோர்சாவ், அரூபா ஆகியவற்றுடன் கரிபியனில் உள்ள பிற இடச்சுத் தீவுகள் பெரும்பாலும் "இடச்சு கரிபியன்" என்று அழைக்கப்படுகின்றன.[11] இது பரப்பளவு,[10] மக்கள்தொகை[11] ஆகிய இரண்டிலும் ஏபிசி தீவுகளில் மிகப்பெரியது ஆகும்.
இந்தத் தீவு, இங்கு விளையும் லரகா எனும் கிச்சிலிப் பழத்தின் உலர்ந்த தோலைக் கொண்டு சுவையூட்டப்பட்ட, கசப்பான நரந்தம் பழத்தை அடிப்படையாகக் கொண்ட குரோசோவ் என்னும் அதன் பூர்வீக மதுபானத்திற்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறது.
கோர்சாவில் முதலில் அரவாக், கக்கெட்டியோ பழங்குடி மக்கள் வசித்து வந்தனர். இந்தத் தீவை ஆராய்ந்த முதல் ஐரோப்பியர் எசுப்பானியர்கள் ஆவர்; அவர்கள் 1499-இல் முதன்முதலில் இங்கு வந்தடைந்தனர். அலோன்சோ டி ஓசெடாவின் 1499 பயணத்திற்குப் பிறகு இந்தத் தீவு ஒரு எசுப்பானியக் குடியேற்ற நாடாக மாறியது. அதன் மோசமான விவசாய விளைச்சல், விலைமதிப்பற்ற உலோகங்கள் இல்லாததால் இது "ஒரு பயனற்ற தீவு" என்று முத்திரை குத்தப்பட்டாலும், அது பின்னர் ஒரு மூலோபாய கால்நடை வளர்ப்புப் பகுதியாக மாறியது. 1634-இல் டச்சுக்காரர்கள் இந்தத் தீவைக் கைப்பற்றியபோது, அவர்கள் தீவின் கவனத்தை வணிகம், கப்பல் போக்குவரத்து பக்கம் திருப்பினர், பின்னர் அதை அத்திலாந்திக் அடிமை வணிகத்தின் மையமாக மாற்றினர். ஐரோப்பாவில் துன்புறுத்தல்களிலிருந்து தப்பி ஓடிய யூதர்கள் இங்கு குடியேறி, பொருளாதாரத்திலும் கலாச்சாரத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினர்.
பிரெஞ்சுப் புரட்சி, நெப்போலியப் போர்களின் போது பிரித்தானியப் படைகள் கோர்சாவை இரண்டு முறை கைப்பற்றின, ஆனால் அது மீண்டும் இடச்சு ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1863-இல் அடிமை வணிகம் ஒழிக்கப்பட்டதால் பொருளாதார மாற்றங்களும் இடம்பெயர்வுகளும் ஏற்பட்டன. இடச்சு மொழி அதிகாரப்பூர்வ மொழியாகத் தொடர்ந்தாலும், பாப்பியாமெண்டு, ஆங்கிலம், எசுப்பானிய மொழிகள் பரவலாகப் பேசப்படுகின்றன, இது தீவின் பன்முகப் பண்பாட்டுத் தாக்கங்களைப் பிரதிபலிக்கிறது. கோர்சாவ் முன்னர் 1815 முதல் 1954 வரை "கோர்சாவ் மற்றும் சார்பு நாடுகள்" குடியேற்றத்தின் ஒரு பகுதியாகவும், பின்னர் 1954 முதல் 2010 வரை நெதர்லாந்து அண்டிலீசின் ஒரு பகுதியாகவும், "கோர்சாவ் தீவு ஆள்புலமாக" இருந்தது.[9]
1914-இல் மரகாய்ப்போ படுகையில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதால், கோர்சாவ் ஒரு முக்கிய எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையமாக மாறியது,[12] இது அதன் பொருளாதார நிலப்பரப்பை மாற்றியது. நெதர்லாந்து இராச்சியத்திற்குள் ஒரு நாடாக மாறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; இந்தத் தீவு 2010-இல் தன்னாட்சி பெற்றது.[13]
விளையாட்டு
[தொகு]கோர்சாவ் தேசிய காற்பந்து அணி, 2017 கரீபியன் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஜமைக்காவைத் தோற்கடித்து, 2017 கொன்காஃப் தங்கக் கோப்பைக்குத் தகுதி பெற்றது.[14] பின்னர் கோர்சாவ் அணி தாய்லாந்தில் 2019 அரசுக் கோப்பையில் பங்கேற்று, இறுதிப் போட்டியில் வியட்நாமைத் தோற்கடித்து கோப்பையை வென்றனர்.[15] 2025-ஆம் ஆண்டில், கோர்சாவ் கொன்காஃப் தகுதிச் சுற்றுகளின் இறுதிச் சுற்றில் தங்கள் குழுவில் வெற்றி பெற்று 2026 பீஃபா உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது, இதன் மூலம் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற வரலாற்றில் மிகச்சிறிய நாடு என்ற பெருமையைப் பெற்றது.[16][17]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Curacao". The World Factbook. Central Intelligence Agency. Archived from the original on 4 May 2023. Retrieved 29 December 2019.
- 1 2 "Waaruit bestaat het Koninkrijk der Nederlanden?". Rijksoverheid. 19 May 2015. Archived from the original on 13 May 2023. Retrieved 10 January 2020.
- ↑ "First results 2023 pop census Curaçao". April 2023.
- ↑ van der Molen, Maarten (19 September 2013). "Country Report Curaçao". RaboResearch – Economic Research. Archived from the original on 23 August 2017. Retrieved 23 August 2017.
- ↑ "Curacao". The World Bank. Archived from the original on 18 April 2023. Retrieved 9 August 2021.
- ↑ "Human Development Index (HDI): Korte Notitie inzake de berekening van de voorlopige Human Development Index (HDI) voor Curaçao" (PDF). Centraal Bureau voor de Statistiek. 20 December 2013. Archived from the original (PDF) on 13 July 2015.
- ↑ Wells, John C. (2008). Longman Pronunciation Dictionary (3rd ed.). Harlow: Longman. ISBN 9781405881180.
- ↑ "Curaçao". Dictionary.com Unabridged. Random House.
- 1 2 3 4 "CIA World Factbook- Curaçao". Archived from the original on 4 May 2023. Retrieved 15 July 2019.
- 1 2 Öörni, Juha (6 October 2017). Traveler's Paradise—ABC Islands: Travel Guide for ABC Islands (Aruba, Bonaire, Curaçao). p. 16. Retrieved 16 June 2025.
- 1 2 3 van Stipriaan, Alex; Alofs, Luc; Guadelupe, Francio, eds. (1 July 2023). Caribbean Cultural Heritage and the Nation : Aruba, Bonaire and Curaçao in a Regional Context. Amsterdam University Press. doi:10.24415/9789087283827. ISBN 9789400604278.
- ↑ "De komst van de olieraffinaderij op Curaçao". NationaalArchief.cw (in டச்சு). Archived from the original on 18 July 2025. Retrieved 13 December 2025.
- ↑ "Rijkswet wijziging Statuut in verband met de opheffing van de Nederlandse Antillen (32.213 (R1903))". Eerstekamer.nl (in டச்சு). Retrieved 14 September 2025.
- ↑ "Curaçao edges Jamaica for first-ever Caribbean Cup title". CONCACAF Gold Cup. 26 June 2017 இம் மூலத்தில் இருந்து 7 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210207071154/https://www.goldcup.org/en/article/curacao-edges-jamaica-for-first-ever-caribbean-cup-title.
- ↑ "Elson Hooi slept King's Cup in de wacht met Curaçao" [Elson Hooi wins King's Cup with Curaçao]. ADO Den Haag. 8 June 2019. Archived from the original on 29 July 2020. Retrieved 9 June 2019.
- ↑ "Curacao become smallest-ever nation at World Cup". ESPN.com. 19 November 2025. Retrieved 19 November 2025.
- ↑ சுமார் ஒன்றரை லட்சம் மக்களே வாழும் குட்டித் தீவான 'குராசோவா' உலகக்கோப்பைக்கு முன்னேறிய வரலாறு, பிபிசி தமிழ், 15 சூன் 2026
வெளி இணைப்புகள்
[தொகு]- Curaçao Tourism Board
- Curaçao – Official இன்ஸ்ட்டாகிராம் account
