செயிண்ட் மார்டின் தொகுப்பு
செயிண்ட் மார்டின் தொகுப்பு Collectivité de Saint-Martin | |
---|---|
நாட்டுப்பண்: லா மார்செல்லேசு ஆட்புல பாடல்: ஓ இனிய செயிண்ட் மார்டின் நாடே | |
நிலை | கடல்கடந்த தொகுப்பு |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | மரிகாட் |
ஆட்சி மொழி(கள்) | பிரான்சியம் |
இனக் குழுகள் ([1]) |
|
இறைமையுள்ள நாடு | பிரான்சு |
அரசாங்கம் | சார்பு மண்டலம் |
• பிரான்சிய அரசுத் தலைவர் | பிரான்சுவா ஆலந்து |
• பிரிபெக்ட் | ஷாக் சிமோனே |
• ஆட்புல மன்றத்தின் தலைவர் | அலைன் ஆன்சன் |
பிரான்சிய கடல்கடந்த தொகுப்பு | |
• பிரான்சிற்கும் நெதர்லாந்திற்குமாகப் பிரிக்கப்பட்டது | 23 மார்ச் 1648 |
• தனியான தொகுப்பு | 15 சூலை 2007 |
பரப்பு | |
• மொத்தம் | 53.2 km2 (20.5 sq mi) (unranked) |
• நீர் (%) | negligible |
மக்கள் தொகை | |
• Jan. 2011 கணக்கெடுப்பு | 36,286[2] (unranked) |
• அடர்த்தி | 682/km2 (1,766.4/sq mi) (unranked) |
நாணயம் | ஐரோ (€) (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே-4 |
அழைப்புக்குறி | +590c |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | MF |
இணையக் குறி | |
|
செயிண்ட் மார்டின் (Saint Martin, பிரெஞ்சு மொழி: Saint-Martin), அலுவல்முறையாக செயிண்ட் மார்டின் தொகுப்பு (பிரான்சியம்: Collectivité de Saint-Martin) மேற்கிந்தியத் தீவுகளில் அமைந்துள்ள பிரான்சின் கடல்கடந்த தொகுப்புகளில் ஒன்றாகும். செயிண்ட் மார்ட்டின் தீவின் 60% கொண்ட வடக்குப் பகுதியையும் அடுத்துள்ள குறுந்தீவுகளையும் உள்ளடக்கிய இது சூலை 15, 2007இல் நிறுவப்பட்டது.[note 1]இத்தீவின் 40% அடங்கிய தென்பகுதி, சின்டு மார்தின், நெதர்லாந்து இராச்சியத்தின் நான்கு அங்கநாடுகளில் ஒன்றாகும்.
53.2 சதுர கிலோமீட்டர்கள் (20.5 sq mi) பரப்பளவுள்ள இதன் தலைநகரம் மரிகாட்டின் மக்கள்தொகை 36,286 (சன. 2011 கணக்கெடுப்பின்படி) ஆகும்.[2]
அங்கியுலா தீவிலிருந்து இதனை அங்கியுல்லா கால்வாய் பிரிக்கின்றது.
மக்கள்தொகையியல்
[தொகு]தீவின் பிரான்சியப் பகுதியின் நிலப் பரப்பளவு 53.2 சதுர கிலோமீட்டர்கள் (20.5 sq mi) ஆகும். தீவின் பிரான்சிய, டச்சு இரு பகுதிகளிலும் ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட உள்ளூர் வழக்குமொழி முறைசாரா இடங்களில் பயன்படுத்தப்படுகின்றது.[4] சனவரி 2011இல் எடுக்கப்பட்ட பிரான்சு நாட்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இத்தீவில் பிரான்சியப் பகுதியின் மக்கள்தொகை 36,286 ஆகும்.[2] இது 1982இல் இருந்த 8,072 தொகையைவிட கூடியுள்ளது. 2011இல் மக்கள்தொகை அடர்த்தி 682 inhabitants per square kilometre (1,770/sq mi) ஆக உள்ளது.
1885 | 1954 | 1961 | 1967 | 1974 | 1982 | 1990 | 1999 | 2006 | 2011 |
---|---|---|---|---|---|---|---|---|---|
3,400 | 3,366 | 4,502 | 5,061 | 6,191 | 8,072 | 28,518 | 29,078 | 35,263 | 36,286 |
பிரான்சு கணக்கெடுப்புகளிலிருந்து அலுவல்முறையான எண்ணிக்கை. |
நிலப்படங்கள்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ இதற்கான பிரான்சிய சட்டம் பெப்ரவரி 2007இல் நிறைவேற்றப்பட்டது, ஆனால் உள்ளாட்சி மன்றங்களுக்கானத் தேர்தல் முடிவடைந்த பிறகே செயற்பாட்டிற்கு வந்தது; இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு சூலை 15,2007இல் நடைபெற்றது. காண்க J. P. Thiellay, Droit des outre-mers, Paris:Dalloz, 2007.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "The World Factbook". cia.gov. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-12-22.
- ↑ 2.0 2.1 2.2 INSEE, Government of France. "Populations légales 2011 pour les départements et les collectivités d'outre-mer" (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 2014-01-26.
{{cite web}}
: Check|first=
value (help) - ↑ This "local" variant of the flag is listed as "dubious" at the Flags of the World website.
- ↑ Holm (1989) Pidgins and Creoles, vol. 2