லீவர்டு தீவுகள்
Jump to navigation
Jump to search
லீவர்டு தீவுகள் (Leeward Islands, /ˈliːwərd/) அல்லது வளிமறைவுத் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள தீவுக் குழுமம் ஆகும். ஆங்கிலப் பயன்பாட்டில், இவை சிறிய அண்டிலிசு தொடர்ச்சியின் வடக்குத் தீவுகளை குறிக்கின்றது. புவேர்ட்டோ ரிக்கோவின் கிழக்கிலிருந்து துவங்கி டொமினிக்காவின் தெற்கு வரை நீள்கின்றன. வடகிழக்கு கரிபியக் கடலும் மேற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலும் சந்திக்கின்ற பகுதியில் இவை அமைந்துள்ளன. இவற்றில் சிறிய அண்டிலிசு தொடரின் தென்பகுதியில் உள்ளவை வின்வர்டு தீவுகள் (வளிப்புறத் தீவுகள்) எனப்படுகின்றன.
லீவர்டு தீவுகளின் பட்டியல்[தொகு]
வடமேற்கிலிருந்து தென்கிழக்காக தீவுகள்:
- புவர்ட்டோ ரிக்கோவின் கன்னித் தீவுகள்: வீக்கெசு (புவர்ட்டோ ரிக்கா), குலெப்ரா (ஐ.அ.)
- அமெரிக்க கன்னித் தீவுகள்: செயிண்ட் தாமசு, செயிண்ட் ஜான், செயிண்ட் குரோய்க்சு, வாட்டர் தீவு (ஐ.அ.)
- பிரித்தானிய கன்னித் தீவுகள்: ஜோச்ட்டு வான் டைக்கு, டோர்டோலா, வர்ஜின் கோர்டா, அனெகடா (ஐ.இரா.)
- அங்கியுலா (ஐ.இரா., பிரித்தானிய அரசி கீழ்)
- செயிண்ட் மார்டின்/சின்டு மார்ட்டென் (பிரா./நெத.)
- செயிண்ட்-பார்த்தலெமி (பிரா.)
- சேபா (நெத.)
- சின்டு யுசுடாசியசு (நெத.)
- செயிண்ட் கிட்சு (பொதுநலவாயம், நெவிசுடன் இணைந்து பிரித்தானிய அரசியின் கீழ் நாடானது)
- நெவிசு (பொதுநலவாயம், செயிண்ட் கிட்சு காண்க)
- பர்புடா (பொதுநலவாயம், அண்டிக்குவா காண்க)
- அண்டிக்குவா (பொதுநலவாயம், பார்புடாவுடன் இணைந்து பிரித்தானிய அரசியின் கீழ் நாடானது)
- ரெடோண்டா (அண்டிக்குவா & பார்புடாவின் மக்களில்லா பகுதி)
- மொன்செராட் (ஐ.இரா.)
- குவாதலூப்பே (பிரா. கடல்கடந்த திணைக்களம்)
- லா டிசைரேடு (குவாதலூப்பேயின் சார்புப் புலம், பிரா.)
- ஐலெசு தெசு சைந்தெசு (குவாதலூப்பேயின் சார்புப் புலம், பிரா.)
- மாரீ-காலந்தெ (குவாதலூப்பேயின் சார்புப் புலம், பிரா.)
- டொமினிக்கா (பொதுநலவாயம்; உள்ளும் வெளியிலும்)
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமீடியா பொதுவகத்தில் லீவர்டு தீவுகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- The Leeward Islands Gazette, with full page images and full searchable text is freely and openly available in the Digital Library of the Caribbean
- Antigua, Montserrat and Virgin Islands Gazette, with full page images and full searchable text is freely and openly available in the Digital Library of the Caribbean