சார்லொட் அமாலீ
Appearance
சார்லொட் அமாலீ | |
---|---|
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
பிரதேசம் | அமெரிக்க கன்னித் தீவுகள் |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 18,481 |
அஞ்சற் குறியீடு | 00801–00804 |
இடக் குறியீடு | 340 |
சார்லொட் அமாலீ அல்லது சார்லட் அமாலி அமெரிக்கக் கன்னித்தீவுகளின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் 1666இல் தபூஸ் எனும் பெயரில் தோற்றம்பெற்றது. 1691இல் இது டென்மார்க் அரசன் ஐந்தாம் கிரிஸ்டியனின் பட்டத்துராணியான சார்லொட் அமாலீ ஹெசி-கெசல் என்பவரின் பெயரையொற்றி சார்லொட் அமாலீ எனப் பெயர் மாற்றம் பெற்றது. இந்நகரிலுள்ள துறைமுகம் முன்னர் கடத்தல்காரர்களால் அதிகம் பயன்படித்தப்பட்டது. தற்போது சொகுசுக்கப்பல்கள் அதிகம் தரித்துச் செல்லும் ஒரு துறைமுகமாக இது விளங்குகின்றது. 2010இல் இந்நகரின் மக்கட்டொகை 18481[1][2] ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Census Bureau Releases Census 2000 Population Counts for the U.S. Virgin Islands, U.S. Census Bureau, ஜூலை 3, 2001
- ↑ By ALDETH LEWIN (Daily News Staff) (2011-08-25). "Census shows V.I.'s population down 2% - News". Virgin Islands Daily News. Archived from the original on 2013-04-12. பார்க்கப்பட்ட நாள் 2014-01-11.