உள்ளடக்கத்துக்குச் செல்

அண்டிக்குவா

ஆள்கூறுகள்: 17°5′N 61°48′W / 17.083°N 61.800°W / 17.083; -61.800
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்டிக்குவா
உள்ளூர் பெயர்: வலாட்லி அல்லது வடாட்லி
அண்டிக்குவாவின் பாரிஷ் எனப்படும் நிர்வாக அலகுஎளைக் காட்டும் நிலப்படம்
புவியியல்
அமைவிடம்கரிபியக் கடல்
ஆள்கூறுகள்17°5′N 61°48′W / 17.083°N 61.800°W / 17.083; -61.800
தீவுக்கூட்டம்லீவர்டு தீவுகள்
மொத்தத் தீவுகள்2
பரப்பளவு281 km2 (108 sq mi)
கரையோரம்87 km (54.1 mi)
உயர்ந்த ஏற்றம்402 m (1,319 ft)
உயர்ந்த புள்ளிஒபாமா குன்றம் / பாக்கி சிகரம்
நிர்வாகம்
பெரிய குடியிருப்புசென் ஜோன்ஸ் (மக். 32,000)
மக்கள்
மக்கள்தொகை80,161 (2011 கணக்கெடுப்பு)
அடர்த்தி285.2 /km2 (738.7 /sq mi)
இனக்குழுக்கள்91% ஆபிரிக்கர் அல்லது முலட்டோ, 4.4% பிற கலப்பினர், 1.7% வெள்ளையர், 2.9% பிறர்
அண்டிக்குவாவில் உள்ள டர்னர் கடற்கரை

அண்டிக்குவா (Antigua) அல்லது சிலநேரங்களில் அண்ட்டீகோ,[1] உள்ளூர் மக்களால் வலாட்லி அல்லது வடாட்லி, கரிபியன் பகுதியில் லீவர்டு தீவுகளில் ஒரு தீவாகும்; இது அன்டிகுவா பர்புடா நாட்டின் முதன்மைத் தீவாகும். அண்டிக்குவா என்றால் எசுப்பானியத்தில் "தொன்மையானது" எனப் பொருள்படும்; செவீயா பெருங்கோவிலில் உள்ளதோர் திருவோவியத்தை ஒட்டி இப்பெயர் எழுந்துள்ளது.[2] உள்ளூர்ப் பெயரான வலாட்லி[3] என்பதற்கு "நம்முடையதே" எனப் பொருள் கொள்ளலாம். இத்தீவின் சுற்றளவு ஏறத்தாழ 87 km (54 mi) ஆகவும் பரப்பளவு 281 km2 (108 sq mi)ஆகவும் உள்ளது. இங்குள்ள மக்கள் தொகை 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 80,161 ஆகும்.[4] அண்டிக்குவாவின் பொருளியல்நிலை சுற்றுலாவை ஆதாரமாகக் கொண்டது. வேளாண்மைத் துறை உள்ளூர் சந்தையின் தேவைகளை நிறைவு செய்கின்றது.

தலைநகரமான செயிண்ட். ஜான்சில் 31,000 பேர் வசிக்கின்றனர். தலைநகரம் தீவின் வடமேற்கில் அமைந்துள்ளது; இங்கு நீண்ட பயணியர் சுற்றுலாக் கப்பல்களை நிறுத்தக்கூடிய ஆழமானத் துறைமுகம் அமைந்துள்ளது. ஆல் செயிண்ட்சு (3,412) லிபெர்ட்டா (2,239) ஆகியன மற்ற முதன்மைக் குடியிருப்புகளாகும்.

தென் கிழக்கிலுள்ள ஆங்கிலத் துறைமுகம் (English Harbour) பெரும் சுழற்காற்றுகளின்போதும் பாதுகாப்பு வழங்கும் தன்மைக்காக புகழ்பெற்றது. குடியேற்றக் காலத்தில் ஹோரஷியோ நெல்சன் நினைவாக பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட "நெல்சன் துறைமுகத்தை" சீரமைத்து இத்துறைமுகம் உருவாகியுள்ளது. இன்று இத்துறைமுகமும் அடுத்துள்ள பால்மவுத் சிற்றூரும் பன்னாட்டளவில் பாய்மரப் படகோட்டத்திற்காகவும் படகுப் போட்டிகளுக்காகவும் புகழ்பெற்றுள்ளது. ஏப்ரல் இறுதி/ மே மாத துவக்கத்தில் அண்டிக்குவா பாய்ப்படகு வாரம் கொண்டாடப்படுகின்றது; அப்போது உலகத்தர படகுப்போட்டி இங்கு நடத்தப்படுகின்றது.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Wells, J. C. (2000). Longman Pronunciation Dictionary (2nd ed.). Harlow, Essex: Longman. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-36467-1.
  2. Kessler, Herbert L. & Nirenberg, David. Judaism and Christian Art: Aesthetic Anxieties from the Catacombs to Colonialism. Accessed 23 September 2011.
  3. Murphy, Reg. "Common Myths". Archaeology Antigua. Waladli versus Wadadli. Archived from the original on 8 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 September 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. CIA, The World Factbook பரணிடப்பட்டது 2017-09-20 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2 February 2012.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்டிக்குவா&oldid=3671280" இலிருந்து மீள்விக்கப்பட்டது