ஹோரஷியோ நெல்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹோரஷியோ நெல்சன்
டிரபால்கர் சதுக்கத்தில் நெல்சன் தூண், அவருக்கான சிறப்பான நினைவுச் சின்னமாக விளங்குகிறது.

ஓரேசியோ நெல்சன் (Horatio Nelson, செப்டம்பர் 29, 1758 -அக்டோபர் 21, 1805) ஐக்கிய இராச்சிய கடற்படையின் புகழ்பெற்ற தளபதி (அட்மிரல்)களில் ஒருவராவார். பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் பொனபார்ட் இங்கிலாந்து மீது தொடுத்த போர்களில் பிரெஞ்சுக் கடற்படையை தோற்கடித்தவர். மிகவும் வீரமிக்க போர்வீரராகவும் போர் தந்திரங்களில் வல்லவராகவும் அறியப்படுகிறார். சண்டைகளின்போது நெல்சன் ஒரு கண்ணையும் கையையும் இழந்தவர்.[1]

நெல்சன் நோர்போக்கில் உள்ள பர்னம் தோர்ப்பு என்றவிடத்தில் பிறந்தார். பிரெஞ்சு மற்றும் இசுப்பானியா|இசுப்பானியக் கடற்படைகளை தோற்கடித்தவர். டிரபால்கர் சண்டையில் எதிரிகளைத் தோற்கடித்தபோதும் ஒரு பிரெஞ்சு வீரரின் துப்பாக்கிக்கு இரையானார். இவரது நினைவைப் போற்றும் வண்ணம் இலண்டனின் மையப்பகுதியான டிரபால்கர் சதுக்கத்தில் ஒரு நினைவுத்தூண், நெல்சன் தூண் எழுப்பப்பட்டுள்ளது.

பிறப்பும் ,வளர்ப்பும்[தொகு]

ஹொரஷிய நெல்சன் 29 செப்டம்பர் 1758 அன்று நோர்போக், பர்ன்ஹாம் தோர்பில்ஒரு குமாஸ்தாவின் 11 பிள்ளைகளில் ஆறாவதுவராக பிறந்தார் 12 வயதில் கடற்படையில் தன் தாய்வழி மாமாவிடம் ஒரு கப்பலில் இணைந்து பணியாற்றினார் .அவர் 20 வயதில் ஒரு கேப்டன் ஆனார், வெஸ்ட் இண்டீஸ், பால்டிக் மற்றும் கனடாவில் சேவை புரிந்தார் . 1787 ஆம் ஆண்டில் அவர் நெவிஸில் பிரான்சிஸ் நிஸ்பேட் என்பவரை திருமணம் செய்தார் . வேலை ஏதுமின்றி அடுத்த ஐந்து ஆண்டுகளை அரை ஊதியத்தில் ,இங்கிலாந்திற்குத் திரும்பி தனது மணமகளோடு கழித்தார் .

கடல் சார் போர் வெற்றிகளும் ,இழப்பும்[தொகு]

1793 இல் பிரித்தானிய புரட்சிப் போரில் நுழைந்தபோது, ​​நெல்சன் அகமோம்நானின் கட்டளையை வழங்கினார். அவர் மத்தியதரைக்கடலில் பணியாற்றினார், கோர்சிகாவைக் கைப்பற்ற உதவியதுடன் கால்வியிலும்போரிட்டார்.அப்போரில்1794 வலது கண்ணை இழந்துவிட்டார் . 1797 ஆம் ஆண்டில் சாண்டா குரூஸ் டி டெனெரிப் போரில் அவர் தனது வலது கரத்தை இழந்தார்..

ஒரு தளபதி யாக அவர் தைரியமான நடவடிக்கை அறியப்பட்டது,தான் .எனினும் அவரது மூத்த அதிகாரியின் உத்தரவுகளை அவ்வப்போது புறக்கணிப்பு செய்தார் .அதுவே 1797 ஆம் ஆண்டில் ஸ்பெயினில் கேப் வின்சென்ட் மீது அவருக்கு வெற்றி தேடி தந்தன . நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் கோபன்ஹாகனில் நடந்த போரில் அவர் தனது தொலைநோக்கி யை தனது குருட்டு கண்கள் மேல் வைத்து கொண்டு மூத்த அதிகாரியின் உத்தரவுகளை ஏற்று, யுத்த நடவடிக்கைகளை நிறுத்த மறுத்து உத்தரவிட்டார்.

எம்மா, ஹாமில்டன் மீது காதல்[தொகு]

1798 இல் நைல் போரில், நெப்போலியனின் கடற்படை வெற்றிகரமாக அழிக்கப்பட்டது, இதன் மூலம்இந்தியா வுக்கு நேரடி வர்த்தக வழிவகை செய்யப்பட்டது.நெல்சன் நேபிள்ஸ் நகருக்கு மாற்றம் செய்யப்பட்டார் .அங்கு அவர் எம்மா, ஹாமில்டன் மீது காதலில் விழுந்தார். அவர்கள் இருவருமே மணம் ஆனவர்கள் . என்றாலும் நெல்சன் மற்றும் எம்மா ஹாமில்டன் இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்தனர் , விளைவாக 1801 ஆம் ஆண்டில் ஓரேசியோ என்ற ஒரு பெண் குழந்தையைப் பெற்றனர். அதே வருடத்தில் நெல்சன் துணை அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

வீரமான இறப்பும்,மரியாதையும்[தொகு]

1794 முதல் 1805 வரையிலான காலப்பகுதியில் நெல்சனின் தலைமையின் கீழ், ராயல் கடற்படை பிரான்சின் மீது தனது மேலாதிக்கத்தை நிரூபித்தது. கேப் டிராபல்கரில் அவரது மிகவும் பிரபலமான ஈடுபாடு, பிரித்தானியரை நெப்போலியனின் படையெடுப்பு அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றியது, ஆனால் அது அவரது இறுதிப் பயணமாக அமைந்தது . 1805 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி போர் தொடங்குவதற்கு முன்னர் நெல்சன் தனது கப்பலில் இருந்து பிரபலமான சமிக்ஞையை ,குறுஞ் செய்தியை அனுப்பினார்.

"இங்கிலாந்தில் ஒவ்வொருவரும் தனது கடமையைச் செய்வார் "என்று எதிர்பார்க்கிறது.

ஒரு சில மணிநேரங்களுக்கு பின்னர் ஒரு பிரெஞ்சு துப்பாக்கி சுடும் ஸ்னைப்பர் மூலம் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் பிராந்தியால் நிரப்பிய ,தொட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்பட்டு இங்கிலாந்திற்கு எடுத்து செல்லப்பட்டது . அங்கு அவர் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார் .


மேற் சான்றுகள்[தொகு]

  1. Tom Pocock. "Horatio Nelson". Random House UK, 1994.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோரஷியோ_நெல்சன்&oldid=2421860" இருந்து மீள்விக்கப்பட்டது