எசுப்பானிய கன்னித் தீவுகள்
எசுப்பானியம்: Islas Vírgenes de Puerto Rico / Islas Vírgenes Españolas | |
---|---|
புவேர்ட்டோ ரிக்கோவிற்கும் (இடது) ஐக்கிய அமெரிக்க கன்னித் தீவுகளின் செயிண்ட் தாமசுக்கும் இடையே எசுப்பானியக் கன்னித் தீவுகளின் (மஞ்சள்) அமைவிடம் | |
புவியியல் | |
தீவுக்கூட்டம் | கன்னித் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | கரிபியக் கடல் |
பரப்பளவு | 378.2 km2 (146.0 sq mi) |
நிர்வாகம் | |
ஐக்கிய அமெரிக்க ஆட்புலம் | புவேர்ட்டோ ரிக்கோ |
நகராட்சி | குலெப்ரா, வீக்கெசு |
பெரிய குடியிருப்பு | இசபெல் செக்ந்தா (மக். 1459) |
மக்கள் | |
மக்கள்தொகை | 11,119 |
அடர்த்தி | 29.27 /km2 (75.81 /sq mi) |
எசுப்பானியக் கன்னித் தீவுகள், முன்பு பாசேஜ் தீவுகள் அல்லது தற்போது பரவலாக புவர்ட்டோ ரிக்கோவின் கன்னித் தீவுகள் புவேர்ட்டோ ரிக்கோ பொதுநலவாயத்தின் அங்கமாக உள்ள குலெப்ரா, வீக்கெசு தீவுகளையும் அடுத்துள்ள குறுந்தீவுகளையும் உள்ளடக்கியது; இவை புவர்ட்டோ ரிக்கோ தீவின் கிழக்கில் அமைந்துள்ளன.
புவர்ட்டோ ரிக்கோவின் சுற்றுலாக் கையேடுகள் இவற்றை எசுப்பானியக் கன்னித் தீவுகள் என குறிப்பிடுகின்றன; ஆனால் பெரும்பாலான நிலப்படங்களும் நிலப்படத் தொகுப்புகளும் இவற்றை கன்னித் தீவுகள் தீவுக் கூட்டத்தில் ஏற்பதில்லை. செல்வழித் தீவுகள் (Passage Islands) எனப்பட்ட இத்தீவுகள் புவர்ட்டோ ரிக்கோவின் அங்கமாக அமெரிக்கப் பகுதியாக உள்ளன. இவை 1898இல் நடந்த எசுப்பானிய அமெரிக்கப் போருக்கு முன்னதாக எசுப்பானியாவின் அங்கமாக இருந்தன. இன்றும் இத்தீவுகளில் எசுப்பானியம் முதன்மை மொழியாக விளங்குகின்றது; ஆங்கிலமும் பொதுவான மொழியாக உள்ளது.
இத்தீவுக் குழுமத்தின் முதன்மைத் தீவுகளாக குலெப்ராவும் வீக்கெசும் உள்ளன. சுற்றிலும் பல சிறு,குறுந்தீவுகள் அமைந்துள்ளன. புவர்ட்டோரிக்கோவின் கரைக்கு அருகில் உள்ள மற்ற தீவுகளாக ஐகாகோசு தீவு, கேயோ லோபோ, கேயோ டயப்லோ, பலோமினா தீவு, பலோமினிடோ தீவு, ராமோசு தீவு, பினிரிரோ தீவு ஆகியன உள்ளன. குலெப்ரா அருகில் கேயோ டெ லூயி பெனா தீவுள்ளது. குலெப்ராவின் சிறிய தீவான, கேயோ நோர்ட் குலெப்ரா தேசிய வனவாழ்வு உய்வகமாக விளங்குகின்றது.[1] வீகெசின் பெரும்பகுதி வீகெசு தேசிய வனவியல் உய்வகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக அமெரிக்கக் கடற்படையின் மையமாக இருந்தது.[2]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ U.S. Fish & Wildlife Service. "Culebra National Wildlife Refuge" (PDF). Archived (PDF) from the original on அக்டோபர் 14, 2006. பார்க்கப்பட்ட நாள் March 7, 2007.
- ↑ U.S. Fish & Wildlife Service. "Vieques National Wildlife Refuge" (PDF). Archived (PDF) from the original on அக்டோபர் 4, 2006. பார்க்கப்பட்ட நாள் March 7, 2007.