செயிண்ட் மார்ட்டின்

ஆள்கூறுகள்: 18°04′N 63°03′W / 18.067°N 63.050°W / 18.067; -63.050
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செயிண்ட் மார்டின்
உள்ளூர் பெயர்: Sint Maarten (டச்சு)
Saint-Martin (பிரெஞ்சு)

Nickname: நட்பான தீவு
புவியியல்
அமைவிடம்கரிபியக் கடல்
ஆள்கூறுகள்18°04′N 63°03′W / 18.067°N 63.050°W / 18.067; -63.050
தீவுக்கூட்டம்லீவர்டு தீவுகள், சிறு ஆந்தலீசு
பரப்பளவு87 km2 (34 sq mi)
உயர்ந்த ஏற்றம்414 m (1,358 ft)
உயர்ந்த புள்ளிபிக் பாரடிசு
நிர்வாகம்
பிரான்சியக் குடியரசு
கடல்கடந்த தொகுப்புசெயிண்ட் மார்டின் தொகுப்பு
தலைநகரும் பெரிய குடியேற்றம்மரிகாட் (pop. 5,700)
Area covered53 km2 (20 sq mi)
உள்ளடங்கிய நாடுசின்டு மார்தின்
தலைநகரம்பிலிப்சுபெர்கு
பெரிய குடியிருப்புகீழ் பிரின்சு குவார்டர் (pop. 8,123)
பரப்பளவு34 km2 (13 sq mi)
மக்கள்
மக்கள்தொகை77,741 (சனவரி 1, 2009)
அடர்த்தி892 /km2 (2,310 /sq mi)
இனக்குழுக்கள்ஆபிரிக்க-கரிபீயர், காகசியர், சீனர், இந்தியர், கலப்பினத்தவர்

செயிண்ட் மார்டின் (Saint Martin,பிரெஞ்சு மொழி: Saint-Martin; டச்சு: Sint Maarten) வடகிழக்கு மேற்கிந்தியத் தீவுகளில் உள்ளதோர் தீவு ஆகும். இது புவேர்ட்டோ ரிக்கோவிற்கு கிழக்கே ஏறத்தாழ 300 km (190 mi) தொலைவில் உள்ளது. 87-சதுர-கிலோமீட்டர் (34 sq mi) பரப்பளவுள்ள இந்தத் தீவு கிட்டத்தட்ட 60/40 விகிதத்தில் பிரான்சுக்கும் (53 km2, 20 sq mi)[1] நெதர்லாந்திற்கும் (34 km2, 13 sq mi);[2] இடையே பிரிபட்டுள்ளது; இரு பகுதிகளிலும் உள்ள மக்கள்தொகை ஏறத்தாழ சமமாகும். இருநாடுகளுக்கும் இடையே பகிர்ந்துகொண்டுள்ள தீவுகளில் இதுவே மிகச்சிறிய மக்கள்வாழும் தீவாகும். இந்தப் பிரிவு 1648 முதல் உள்ளது. தெற்கத்திய டச்சுப் பகுதி சின்டு மார்தின் எனப்படுகின்றது; இது நெதர்லாந்து இராச்சியத்தில் உள்ளடங்கிய நான்கு நாடுகளில் ஒன்றாகும். வடக்குப் பகுதி கலெக்டிவிடி டெ செயின்ட்-மார்டின் (செயிண்ட் மார்டின் தொகுப்பு) எனப்படுகின்றது;இது பிரான்சிய கடல்கடந்த தொகுப்புகளில் ஒன்றாகும்.

சனவரி 1, 2009இல் முழுமையான இத்தீவின் மக்கள்தொகை 77,741 ஆக இருந்தது;, டச்சுப் பகுதியில் 40,917 பேரும்,[3] பிரான்சியப் பகுதியில் 36,824 பேரும் உள்ளனர்.[4]

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயிண்ட்_மார்ட்டின்&oldid=3555678" இருந்து மீள்விக்கப்பட்டது