உள்ளடக்கத்துக்குச் செல்

பிரான்சுவா ஆலந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்சுவா ஆலந்து
François Hollande
2017 இல் ஆலந்து
பிரான்சு ஜனாதிபதி
பதவியில்
15 மே 2012 – 14 மே 2017
பிரதமர்ஜீன்-மார்க் அய்ரால்ட்
மானுவல் வால்ஸ்
பெர்னார்ட் காஸ்நர்வ்
முன்னையவர்நிக்கொலா சார்கோசி
பின்னவர்இம்மானுவேல் மாக்ரோன்
கொரிசா பகுதியின் பொதுமன்றத் தலைவர்
பதவியில்
20 மார்ச் 2008 – 15 மே 2012
முன்னையவர்ஜீன்-பியர் டுபோன்ட்
பின்னவர்ஜெரார்ட் பொன்னே
பிரான்சு சோசலிசக் கட்சியின் முதன்மைச் செயலாளர்
பதவியில்
27 நவம்பர் 1997 – 27 நவம்பர் 2008
முன்னையவர்லியோனல் யோசுபின்
பின்னவர்மார்ட்டீன் ஆப்ரி
துல்லேயின் மாநகரத்தலைவர்
பதவியில்
17 மார்ச் 2001 – 17 மார்ச் 2008
முன்னையவர்ரேமாண்டு மாக்சு ஓபேர்
பின்னவர்பெர்னார்டு கோம்பே
பிரான்சின் தேசிய சட்டமன்றத்தில் கொரிசா முதல் தொகுதியிலிருந்து உறுப்பினர்
பதவியில்
12 ஜூன் 1997 – 14 மே 2012
முன்னையவர்லூசியன் ரெனாடி
பின்னவர்சோஃபி டெசுஸ்
பதவியில்
23 ஜூன் 1988 – 1 ஏப்ரல் 1993
முன்னையவர்தொகுதி மீண்டும் நிறுவப்பட்டது
பின்னவர்ரேமண்ட்-மேக்ஸ் ஆபேர்ட்
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
20 ஜூலை 1999 – 17 டிசம்பர் 1999
தொகுதிபிரான்சு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பிரான்சுவா கெரார்டு ஜியார்ஜ் நிக்கொலா ஆலந்து

12 ஆகத்து 1954 (1954-08-12) (அகவை 70)
ரோவா, பிரான்சு
அரசியல் கட்சிசோசலிசக் கட்சி
துணை(கள்)செகோலென் ரோயல் (1973–2007)
வலேரி டிரியவேய்லர் (2007–நடப்பு)
பிள்ளைகள்தோமசு (பி. 1984)
கிளமென்சு (பி. 1985)
யூலியன் (பி. 1987)
பிளோரா (பி. 1992)
முன்னாள் கல்லூரிஎச்ஈசி பாரிசு
இகோல் நேசனல் த அட்மினிசுடிரேசியோன் (ENA)
பாரிசு அரசியல் கல்வி நிறுவனம்
தொழில்வழக்கறிஞர்

பிரான்சுவா கெரார்டு ஜியார்ஜ் நிக்கொலா ஆலந்து (François Gérard Georges Nicolas Hollande, பிரான்சுவாஸ் ஹாலண்ட்; பிறப்பு 12 ஆகத்து 1954) பிரான்சின் முதன்மை அரசியல்வாதிகளில் ஒருவர். பிரெஞ்சு சோசலிசக் கட்சியின் முதன்மைச் செயலாளராக 1997ஆம் ஆண்டு முதல் 2008 வரை நெடுநாள் பதவி வகித்தவர். பிரான்சின் தேசிய சட்டமன்றத்தில் கொரிசாவின் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 1997 முதல் உறுப்பினராக உள்ளவர். முன்னதாக இதே தொகுதியிலிருந்து 1988-1993இல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொரிசாத் தலைநகர் துல்லேயின் மாநகரத்தலைவராக 2001 முதல் 2008 வரை இருந்துள்ளார். கொரிசா மாநில பொதுமன்றத் தலைவராக 2008 முதல் பதவியில் உள்ளார்.

சோசலிசக் கட்சி மற்றும் இடது முழுமாற்றக் கட்சிகளின் பிரதிநிதியாக 2012 பிரான்சிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அக்டோபர் 16, 2011இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய ஜனாதிபதி நிக்கொலா சார்கோசிக்கு முதன்மை போட்டியாளராக விளங்குகிறார்.[1]

மே 6, 2012ல் நடந்த தேர்தலில் நிக்கொலா சார்கோசியை தோற்கடித்து ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 51,63% வாக்குகளும் சார்கோசி 48% வாக்குகளும் பெற்றனர்.[2]

இவர் சிரியா நாட்டில் நடந்து வரும் தீவிரவாதாரசால் நாட்டை விட்டு ஓடிவந்து வாழ்வாதாரத்தை கேட்டு தவிக்கும் அகதிகளுக்கு உதவ முன்வந்துள்ளார். முதலில் 24,000 அகதிகளை தங்கள் நாட்டில் தங்கவைக்க முன்வந்துள்ளார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Socialists choose Hollande to face Sarkozy in 2012". FRANCE 24. பார்க்கப்பட்ட நாள் 3 January 2012.
  2. ஆலந்து அதிபராக வெற்றி
  3. அகதிகளை ஏற்க பிரான்ஸ் முடிவு தி இந்து தமிழ் 08 செப்டம்பர் 2015

மேலும் அறிய

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சுவா_ஆலந்து&oldid=3582216" இலிருந்து மீள்விக்கப்பட்டது