நிக்கொலா சார்கோசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கொலா சார்கோசி
Nicolas Sarkozy
பிரெஞ்சு அதிபர்
பதவியில்
மே 16 2007 – மே 15 2012
பிரதமர் பிரான்சுவா பிலோன்
முன்னவர் ஜாக் சிராக்
அண்டோராவின் இளவரசர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 16 2007
தலைமை ஆளுநர் பிலிப் மசோனி
பிரதமர் ஆல்பேர்ட் பிண்டா
முன்னவர் ஜாக் சிராக்
பிரான்சின் உள்ளூராட்சி அமைச்சர்
பதவியில்
மே 31 2005 – மார்ச் 26 2007
பிரதமர் டொமினிக் டி வில்லெபின்
முன்னவர் டொமினிக் டி வில்லெபின்
பின்வந்தவர் பிரான்சுவா பரோயின்
பதவியில்
மே 7 2002 – மார்ச் 31 2004
பிரதமர் Jean-Pierre Raffarin
முன்னவர் டானியல் வாய்லண்ட்
பின்வந்தவர் டொமினிக் டி வில்லெபின்
பிரான்சின் பொருளாதார அமைச்சர்
பதவியில்
மார்ச் 31 2004 – நவம்பர் 28 2004
பிரதமர் Jean-Pierre Raffarin
முன்னவர் பிரான்சிஸ் மேர்
பின்வந்தவர் ஹெர்வே கேமார்ட்
வரவு செலவுத் திட்ட அமைச்சர்
பதவியில்
மார்ச் 29 1993 – மே 10 1995
பிரதமர் எடுவார்ட் பலடூர்
முன்னவர் மைக்கல் கராசே
பின்வந்தவர் none
தனிநபர் தகவல்
பிறப்பு 28 சனவரி 1955 (1955-01-28) (அகவை 68)
பாரிஸ், பிரான்ஸ்
அரசியல் கட்சி Union for a Popular Movement (UMP) (2002–)
வாழ்க்கை துணைவர்(கள்) மரீ-டொமினிக் கூலியோலி (மணமுறிவு)
செசிலியா சிகானர்-அல்பேனிஸ் (மணமுறிவு)
கார்லா புரூனி
பணி வழக்கறிஞர்
சமயம் ரோமன் கத்தோலிக்கம்
இணையம் sarkozy.fr

நிக்கொலா சார்கோசி (Nicolas Sarkozy, (IPA[nikɔla saʁkɔzi]About this soundஒலிப்பு (முழுப்பெயர்:நிக்கொலா பால் ஸ்டெஃப்னெ சார்கோசி தெ நாகி-போக்சா) பிறப்பு: ஜனவரி 28, 1955 பிரான்சின் (23-வது) முன்னால் அதிபரும் அண்டோராவின் இளவரசரும் ஆவார். மே 16, 2007 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

அதிபராக பொறுப்பேற்கும் முன்னர் பிரான்சின் யூனியன் ஃபார் அ பாபுலர் மூவ்மென்ட் கட்சியின் தலைவராக விளங்கினார். ஜாக் சிராக் ஆட்சியில் 2002 முதல் 2004 வரை உள்துறை அமைச்சராகவும் பின்னர் 2004 -2005 ஆண்டுகளில் நிதி அமைச்சராகவும் 2005-2007 காலத்தில் மீண்டும் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்தார். 1983 முதல்2002 வரை பிரான்சின் மிகுந்த செல்வம் கொழிக்கும் நகர்ப்புறமான நியுலி-சுர்-சீன் (Neuilly-sur-Seine) மேயராகவும் பணியாற்றியுள்ளார்.முந்தைய ராலி ஃபார் ரிப்ப்ளிக் கட்சி ஆட்சி புரிந்த பான்சுவா மித்தரோந்த் (François Mitterrand) அதிபராட்சியில் வரவுசெலவு அமைச்சராகவும் இருந்துள்ளார்.

பிரெஞ்சுப் பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்ட சார்கோசி விரும்பினார்.[1][2][3] வேலை ஒழுங்கை மீட்கவும், சகிப்புத்தன்மையை வளர்க்கவும் புதிய முயற்சிகளை மேற்கொண்டார்.[1] ஐக்கிய இராச்சியத்துடனான (entente cordiale)உறவையும் [4] ஐக்கிய அமெரிக்காவுடனான உறவையும்[5] வலுப்படுத்த உறுதி பூண்டிருந்தார்

பாரிசின் எலிசீ அரண்மனையில் 2 பிப்ரவரி 2008 அன்று கார்லா புரூனியுடன் காதல் திருமணம் புரிந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Profile: Nicolas Sarkozy (BBC)
  2. Astier, Henri; What now for Nicolas Sarkozy?, BBC News, 16 May 2007
  3. Bennhold, Katrin; Sarkozy pledges quick action on French economy, International Herald Tribune, 7 May 2007
  4. David Byers (26 March 2008). "Nicolas Sarkozy calls for 'Franco-British brotherhood' as state visit begins". தி டைம்ஸ் (London: Times Online). http://www.timesonline.co.uk/tol/news/uk/article3624398.ece. பார்த்த நாள்: 26 March 2008. 
  5. Anderson, John Ward and Molly Moore; "Sarkozy Wins, Vows to Restore Pride in France", Washington Post, 7 May 2007

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கொலா_சார்கோசி&oldid=3744916" இருந்து மீள்விக்கப்பட்டது