பன்னாட்டுக் காவல்துறை அறிவிப்பு
பன்னாட்டுக் காவல்துறை அறிவிப்பு அல்லது இண்டர்போல் அறிவிப்பு (Interpol notice), கடும் குற்றச் செயல்கள் செய்து விட்டு வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தேடப்படும் குற்றவாளிகள், காணாமல் போனவர்கள், அடையாளம் தெரியாத இறந்தவரின் உடல், ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அச்சுறுத்தல்கள் ஏற்படுத்துபவர்கள், சிறையிலிருந்து தப்பி வெளிநாடுகளில் பதுங்கியவர்கள் போன்றவர்களைக் குறித்து, உறுப்பு நாடுகள் கேட்டுக் கொள்வதின் பேரிலோ[1], ஐக்கிய நாடுகள் அவை அல்லது பன்னாட்டு நீதிமன்றம் கேட்டுக் கொள்வதின் பேரிலோ, அல்லது தானாகவோ இண்டர்போலால் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் குற்றவாளிகள் குறித்து அனுப்பப்படும் சுற்றறிக்கையாகும்.[2]
அறிவிப்பின் நிறங்கள்
[தொகு]குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப பன்னாட்டுக் காவல்துறையின் அறிவிப்புகள் சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள், கருப்பு, ஆரஞ்சு மற்றும் ஊதா போன்ற வண்ண குறியீடுகள் கொண்டுள்ளது. எட்டாவது சிறப்பு அறிவிப்பானது, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கேட்டுக் கொள்வதன் பேரில் வெளியிடப்படும்.
அவற்றுள் சிவப்பு வண்ண அறிவிப்பு (Red Corner Notice) வெளிநாடுகளில் தங்கியிருக்கும் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைக்கானது.[3][4]
அறிவிப்பு மொழிகள்
[தொகு]ஆங்கிலம், எசுப்பானியம், பிரஞ்சு மற்றும் அரபு ஆகிய மொழிகளில் பன்னாட்டு காவலகத்தின் அறிவிப்பு வெளியாகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ED justifies seeking Interpol red corner notice against Vijay Mallya
- ↑ "INTERPOL Fact Sheet – International Notices system" (PDF). Interpol. January 2012. Archived from the original (PDF) on 4 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 1 October 2013.
- ↑ "Interpol Red Notices". United States Attorneys' Manual. United States Department of Justice. பார்க்கப்பட்ட நாள் 1 October 2013.
- ↑ Interpol(24 February 2004). "INTERPOL creates new international alert notice". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 1 October 2013. “INTERPOL already issues a series of colour-coded notices, including the famous Red Notice for wanted international fugitives” பரணிடப்பட்டது 2013-10-04 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "INTERPOL Expertise – Notices". Interpol. பார்க்கப்பட்ட நாள் 1 October 2013.