வருமான வரித் துறை
आयकर विभाग | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1860[1][2] |
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | வடக்குத் தொகுதி, தலைமைச் செயலக கட்டிடம், புது தில்லி |
பணியாட்கள் | 46,000 (2016–17)[3] |
அமைச்சர் | |
அமைப்பு தலைமை |
|
மூல நிறுவனம் | நிதி அமைச்சகம் |
வலைத்தளம் |
வருமான வரித் துறை (Income Tax Department), இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் கீழ் செயல்படுகிறது.[5] 1961 வருமான வரி சட்டத்தின் கீழ் இத்துறை இந்திய அரசிற்கு வருமான வரி வசூலிப்பதற்கு நிறுவப்பட்டது. மேலும் இத்துறை பினாமி சொத்துக்கள் பரிவர்த்தனைகள் தடுப்பதற்கும்[6], கருப்புப் பணத்தை கண்டறிவதற்கும்[7] மற்றும் வருமான வரி புலனாய்வு மற்றும் குற்றவியல் விசாரணை செய்வதற்கும் அதிகாரம் கொண்டுள்ளது.
1961ஆம் ஆண்டின் வருமான வரிச்சட்டம், வருமான வரித் துறைக்கு தனிநபர்கள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், சங்கங்கள், உள்ளாட்சி நிறுவனங்கள், நீதித்துறை அதிகாரம் பெற்ற செயற்கையான நபர்களிடமிருந்து வருமான வரி வசூலிப்பதற்கு அதிகாரம் கொண்டுள்ளது.[8] வருமான வரி ஏய்ப்பு செய்பவர்களையும், வருமான வரி கட்டுவதை தவிர்க்கும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் இத்துறைக்கு அதிகாரம் உள்ளது. வருமான வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்வது அல்லது தவிர்ப்பது தண்டனைக்குரிய குற்றச் செயல் ஆகும்.[9]
நிர்வாகம்
[தொகு]சட்டபூர்வ உயர் அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் கீழ் வருமான வரித் துறை இயங்குகிறது. இத்துறை 18 வருமான வரி மண்டலங்களையும், வருமான வரி விசாரணை தலைமை இயக்குநரகம் உள்ளிட்ட 10 சிறப்பு இயக்குநகரங்களைக் கொண்டுள்ளது.
மண்டல தலைமையகங்கள்
[தொகு]தற்போது வருமான வரித் துறை முதன்மை தலைமை வருமான வரி அணையாளர்களின் கீழ் 18 மண்டலங்கள் செயல்படுகிறது. வருமான வரி தலைமை ஆணையாளர்களின் கீழ் துணை-மண்டலங்கள் செயல்படுகிறது.
வ. எண் | மண்டலம் (முதன்மை தலைமை வருமான வரி அணையாளர்) | துணை-மண்டலங்கள் (வருமான வரி தலைமை ஆணையாளர்) | தலைமையிடம் |
---|---|---|---|
1 | குஜராத் | வருமான வரி தலைமை ஆணையாளர், அகமதாபாத்-1, 2, TDS, சூரத், வடோதரா, ராஜ்கோட், வருமான வரி புலனாய்வு & விசாரணை, அகமதாபாத் | அகமதாபாத் |
2 | கர்நாடகா & கோவா | முதன்மை தலைமை வருமான வரி அணையாளர், பெங்களுரூ-1 & 2, TDS, பனாஜி வருமான வரி புலனாய்வு & விசாரணை, பெங்களுரு | பெங்களுரூ |
3 | மத்தியப் பிரதேசம் & சத்தீஸ்கர் | முதன்மை தலைமை வருமான வரி அணையாளர், ராய்ப்பூர், இந்தூர், வருமான வரி புலனாய்வு & விசாரணை, போபால் | போபால் |
4 | ஒடிசா | புவனேஸ்வர் | |
5 | வடமேற்கு மண்டலம் | முதன்மை தலைமை வருமான வரி அணையாளர் அமிர்தசரஸ், லூதியானா, சிம்லா, பஞ்சகுலா, சண்டிகர் | சண்டிகர் |
6 | தமிழ்நாடு & புதுச்சேரி | முதன்மை தலைமை வருமான வரி அணையாளர் சென்னை-1 to 4, TDS, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, வருமான வரி புலனாய்வு & விசாரணை, சென்னை | சென்னை |
7 | தில்லி | முதன்மை தலைமை வருமான வரி அணையாளர், தில்லி-1 to 9, TDS, வருமான வரி புலனாய்வு & விசாரணை, தில்லி | Delhi |
8 | வடகிழக்கு மண்டலம் | முதன்மை தலைமை வருமான வரி அணையாளர், சில்லாங் | குவகாத்தி |
9 | ஆந்திரப் பிரதேசம் & தெலங்கானா | முதன்மை தலைமை வருமான வரி அணையாளர், ஐதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், வருமான வரி புலனாய்வு & விசாரணை, ஐதராபாத் | ஐதராபாத் |
10 | இராஜஸ்தான் | முதன்மை தலைமை வருமான வரி அணையாளர், ஜோத்பூர், உதய்ப்பூர், வருமான வரி புலனாய்வு & விசாரணை, ஜெய்ப்பூர் | ஜெய்ப்பூர் |
11 | உத்தரப் பிரதேசம் (மேற்கு) & உத்தரகாண்ட் | முதன்மை தலைமை வருமான வரி அணையாளர், காசியாபாத், டேராடூன் | கான்பூர் |
12 | கேரளா | வருமான வரி தலைமை ஆணையாளர், திருவனந்தபுரம், வருமான வரி புலனாய்வு & விசாரணை, கொச்சி | கொச்சி |
13 | மேற்கு வங்காளம் & சிக்கிம் | வருமான வரி தலைமை ஆணையாளர், கொல்கத்தா-1 to 6, TDS, வருமான வரி புலனாய்வு & விசாரணை, கொல்கத்தா | கொல்கத்தா |
14 | உத்தரப் பிரதேசம் (கிழக்கு) | வருமான வரி தலைமை ஆணையாளர், அலகாபாத், பரேலி, வருமான வரி புலனாய்வு & விசாரணை, லக்னோ | லக்னோ |
15 | மும்பை | வருமான வரி தலைமை ஆணையாளர், மும்பை-1 to 11, TDS, மையம்-1, 2, வருமான வரி புலனாய்வு & விசாரணை, மும்பை | மும்பை |
16 | நாக்பூர் | None | நாக்பூர் |
17 | பிகார் & ஜார்கண்ட் | வருமான வரி தலைமை ஆணையாளர், ராஞ்சி, வருமான வரி புலனாய்வு & விசாரணை, பாட்னா | பாட்னா |
18 | புனே | வருமான வரி தலைமை ஆணையாளர், புனே, தானே, நாசிக், வருமான வரி புலனாய்வு & விசாரணை, புனே | புனே |
இயக்குநரகங்கள்
[தொகு]வருமான வரித்துறையின் சிறப்புப் பணிகளை மேற்கொள்ள 10 இயக்குநரகங்கள் செயல்படுகிறது. அவைகளில் முக்கியமானது வருமான வரி புலனாய்வு & விசாரணை இயக்குநரகம் ஆகும்.
வ எண் | இயக்குநகரம் | தலைமை அலுவலர் | தலைமையிடம் |
---|---|---|---|
1 | புலனாய்வு & விசாரணை | வருமான வரி விசாரணை தலைமை இயக்குநரகம் | தற்போது 18 மண்டலங்களைக் கொண்டுள்ளது. |
2 | அமைப்பு | வருமான வரி முதன்மை தலைமை இயக்குநர் | புது தில்லி |
3 | சட்ட நடவடிக்கைகள் & ஆராய்ச்சி | வருமான வரி முதன்மை தலைமை இயக்குநர் | புது தில்லி |
4 | பயிற்சி | வருமான வரி முதன்மை தலைமை இயக்குநர் | நேரடி வரிகளுக்கான தேசிய அகாதமி, நாக்பூர் |
5 | உளவு & குற்ற விசாரணை | வருமான வரி முதன்மை தலைமை இயக்குநர் | புது தில்லி |
6 | லஞ்ச ஒழிப்பு | வருமான வரி முதன்மை தலைமை இயக்குநர் | புது தில்லி |
7 | நிர்வாகம் & வரிச் சேவைகள் (TPS) | வருமான வரி முதன்மை தலைமை இயக்குநர் | புது தில்லி |
8 | போக்குவரத்து | வருமான வரி முதன்மை தலைமை இயக்குநர் | புது தில்லி |
9 | மனித ஆற்றல் மேம்பாடு (HRD) | வருமான வரி முதன்மை தலைமை இயக்குநர் | புது தில்லி |
10 | இடர் அளவிடல் | வருமான வரி தலைமை இயக்குநர் | புது தில்லி |
இதனையும் காண்க
[தொகு]- மத்திய நேரடி வரிகள் வாரியம்
- இந்தியாவில் வருமான வரி
- வருமானவரி பிடித்தம்
- வருமான வரி விசாரணை தலைமை இயக்குநரகம்
- பான் கார்டு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The evolution of income-tax".
- ↑ "July 24 to be celebrated as Income Tax Day". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "Central govt to hire 2.8 lakh more staff, police, I-T & customs to get lion's share". The Times of India.
- ↑ "JB Mohapatra named acting Chairman of CBDT". 31 May 2021.
- ↑ "Department of Revenue- Functions". Archived from the original on 10 January 2019. பார்க்கப்பட்ட நாள் January 1, 2019.
- ↑ "THE BENAMI TRANSACTIONS (PROHIBITION) AMENDMENT ACT, 2016" (PDF). The Gazette of India. August 11, 2016. பார்க்கப்பட்ட நாள் January 10, 2019.
- ↑ "THE BLACK MONEY (UNDISCLOSED FOREIGN INCOME AND ASSETS) AND IMPOSITION OF TAX ACT, 2015" (PDF). The Gazette of India. May 27, 2015. பார்க்கப்பட்ட நாள் January 10, 2019.
- ↑ "Who is liable to pay income tax". Archived from the original on 18 January 2018. பார்க்கப்பட்ட நாள் 13 April 2019.
- ↑ "Union Budget 2012: GAAR empowers I-T department to deny tax benefits to 'companies'", The Times Of India, 2012-03-16
- ↑ "PrCCIT Regions" (PDF). www.incometaxindia.gov.in.
- ↑ 11.0 11.1 "Who We Are?". www.incometaxindia.gov.in.
- ↑ "Directorates" (PDF). www.incometaxindia.gov.in.