வருமானவரி பிடித்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் வருமானவரி பிடித்தம் (Tax Deduction at Source, TDS) என்பது இந்திய வருமானவரிச் சட்டம், 1961-இன்படி உரிய நபர்களால், உரிய நபர்களின் வருவாய் ஆதாரத்திலிருந்து குறிப்பிட்ட விழுக்காடு தொகையை முன்கூட்டியே வருமான வரியாகப் பிடித்தம் செய்வதாகும்.[1] வருமானவரி பிடித்த திட்டத்தின் மூலம் இந்திய அரசுக்கு நிலையான வருவாய் ஈட்ட வழிவகுக்கிறது. இம்முறையானது வரி ஏய்ப்பை தடுப்பதுடன் வரி அமைப்பை விரிவடையச் செய்கிறது. வருமானவரி பிடித்தம் செய்தவர் அத்தொகையினை ஏழு நாட்களுக்குள் அல்லது அந்தந்த மாத இறுதிக்குள் வருமானவரித்துறையினரிடம் செலுத்த கடமைப்பட்டவர்கள் ஆகின்றனர்.

ஆண்டு இறுதியில் செலுத்த வேண்டிய வருமானவரிக்கு கூடுதலாக வருமானவரி பிடித்தம் இருப்பின் அதனை வருமானவரித்துறைக்கு, அதற்குரிய படிவத்தை அனுப்பி திரும்பப் பெறலாம்.[2][3]

வங்கி வட்டி வருவாயில் வரிப் பிடித்தம்[தொகு]

பிரிவு 194A மற்றும் 80TTA–இன்படி ரூபாய் 10,000/-க்கு மேற்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு/நிலைத்த வைப்புகள் மீதான வட்டி வருவாயில் 10% வரிப்பிடித்தம் செய்யப்படும்.[4] [5][6] படிவம் 15G அல்லது 15H வங்கியில் சமர்ப்பித்து இருப்பின் வட்டி பிடித்தம் செய்யப்படாது. வருமானவரி நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) வெளிப்படுத்தாத வங்கி வாடிக்கையாளர் எனில் வட்டி வருவாயில் 20 விழுக்காடு வரிப் பிடித்தம் செய்யப்படும்.[7]

மாத ஊதியம் வழங்குகையில் வருமானவரி பிடித்தம்[தொகு]

வருமானவரிச் சட்டப்பிரிவு 192-இன்படி, மாத ஊதியம் பெறுவோர், ஒராண்டில் செலுத்த வேண்டிய வருமானவரியை முன்கூட்டியே தோராயமாக கணக்கிட்டு, அத்தொகையை தவணை முறையில் ஒவ்வொரு மாத ஊதியத்திலிருந்து ஊதியம் வழங்கும் அலுவரால் வருமானவரியாக பிடித்தம் செய்து வருமானவரித் துறையினர்க்கு செலுத்த வேண்டும். நிதியாண்டு இறுதிக்குள் மீதமுள்ள வருமானவரித் தொகையை செலுத்திய பிறகே அடுத்த மாத ஊதியம் வழங்கப்படும்.[8] [9]

அசையாச் சொத்துக்கள் விற்பனையின் போது வருமானவரி பிடித்தம்[தொகு]

01-06-2013 முதல் ரூபாய் 50 இலட்சத்திற்கு மேற்பட்ட மதிப்புடைய வேளாண்மை நிலங்கள் அல்லாத மற்ற அசையாச் சொத்துக்களை கொள்முதல்/விற்பனை செய்யும் போது, இந்திய வருமான வரிச் சட்டப் பிரிவு 194- 1ஏ-இன்படி, விற்பனை மதிப்பில் ஒரு விழுக்காடுத் தொகையை வருமானவரி பிடித்தம் செய்யப்படும். அசையாச் சொத்த்தினை விற்பவர் பான் கார்டு வெளிப்படுத்தவில்லை எனில் அசையாச் சொத்தின் மதிப்பில் 20 விழுக்காடு தொகை வரை வருமானவரியாக பிடித்தம் செய்து வருமானவரித்துறைக்கு கட்ட வேண்டும்.[10][11]

ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும் தொகையில் வரி பிடித்தம்[தொகு]

வருமான வரிச் சட்டப்பிரிவு 194சி-இன்படி, ஒப்பந்த்தாரர்கள் செய்து முடித்த பணிகளுக்கு வழங்கப்படும் தொகைகள் மீது ஒரு விழுக்காடு தொகை வருமானவரி பிடித்தம் செய்து வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டும்.[12]

வாடகை மீதான வருமானவரிப் பிடித்தம்[தொகு]

பிரிவு 194 (1)-இன் படி நிலம் அல்லது கட்டிடம் மீதான வாடகை வருவாய் மீது 10 விழுக்காடு தொகையும், இயந்திர தளவாடங்களின் வாடகை வருவாய்க்கு 2 விழுக்காடும் வருமான வரிப் பிடித்தம் செய்து வருமான வரித் துறைக்கு கட்ட வேண்டும்.[13]

பரிசுச் சீட்டுகள், புதிர்கள், குதிரைப்பந்தயம் மற்றும் பிற பந்தயப் பரிசுகளுக்கு வருமானவரி பிடித்தம்[தொகு]

பிரிவு 194 பி-இன்படி ரூபாய் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பரிசுச் சீட்டுகள் மற்றும் புதிர்களுக்கு 30 விழுக்காடு வரியும், பிரிவு 194பிபி-இன்படி குதிரைப் பந்தயம் மற்றும் பிற பந்தயப் பரிசுகளுக்கு கிடைக்கும் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட தொகைக்கு 30 விழுக்காடு வருமானவரி பிடித்தம் (TDS) செய்து மீதித் தொகை மட்டுமே வழங்கப்படும்.[14]

இதர இனங்கள் மீது வரி பிடித்தம்[தொகு]

  • பிரிவு 193-இன்படி சேமிப்பு பத்திரங்கள் மீதான வட்டிக்கு, 10 விழுக்காடு வருமானவரி பிடித்தம் செய்யப்படும்.[15]
  • பிரிவு 194D -இன்படி பட்டுவடா செய்யப்படும் தரகுத்தொகை மற்றும் காப்பீட்டுத்தரகுத் தொகையில் (Commission and Brokerage) 20,000/-க்கு மேற்பட்ட கமிசன் தொகையில் 10% வரி பிடித்தம் செய்யப்படும்.[16]
  • பிரிவு 194E –இன்படி விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் தொகையில் 20% வரி பிடித்தம் செய்யப்படும்.[17]
  • பிரிவு 194EE-இன்படி தேசிய சேமிப்புத்திட்ட பணப்பட்டுவடா தொகையில் ரூபாய் 2500க்கு மேற்பட்ட தொகைக்கு 20% வரி பிடித்தம் செய்யப்படும[18]
  • பிரிவு 194G –இன்படி பரிசுச் சீட்டு விற்பனை கமிசன் தொகையில் 10% வரி பிடித்தம் செய்யப்படும்.[19]
  • பிரிவு 194H –இன்படி ரூபாய் 5000/-க்கு மேற்பட்ட தரகு/கமிசன் பட்டுவடா தொகையில் 10% வரிப் பிடித்தம் செய்யப்படும்.[20]
  • பிரிவு 194-I –இன்படி 1.80 இலட்சத்திற்கு மேற்பட்ட வாடகை பட்டுவடா தொகையில் , தளவாடங்கள், கருவிகள் & இயந்திரங்களுக்கு 2% வரிப் பிடித்தமும் மற்றும் நிலம், கட்டிடம் மற்றும் அறையணிகளுக்கு 10% வரிப்பிடித்தம் மேற்கொள்ளப்படும்.[21]
  • பிரிவு 194J –இன்படி ரூபாய் 30,000/-க்கு மேற்பட்ட சேவை மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கும் பணிகளுக்கு கட்டணத்தில் 10% வருமானவரிப்பிடித்தம் செய்யப்படும்.[22]
  • நகராட்சி எல்லையிலிருந்து 8 கி. மீ., தொலைவிற்குள் அமைந்துள்ள நிலங்களைக் கையகப்படுத்தும் போது (Compulsory Acquision of Land) அரசால் வழங்கப்படும் இழப்பீடு தொகை ரூபாய் 50 இலட்சத்திற்கு மேற்பட்ட இழப்பீட்டுத் தொகையில் 10.3 விழுக்காடு வருமானவரிப் பிடித்தம் செய்யப்படும்.[23]
  • வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு (Non-Residents) வழங்கப்படும் தொகையில் குறிப்பிட்ட விழுக்காடு வருமானவரி பிடித்தம் செய்யப்படும்.[24]

வருமானவரிப் பிடித்த சான்றிதழ்[தொகு]

வருமான வரி சட்ட விதி எண் 114 (4)-இன்படி, யாரிடமிருந்து வருமானவரி பிடித்தம் (TDS) செய்யப்பட்டதோ, அவர்களுக்கு வருமான வரிப் பிடித்தம் செய்தவர், வருமானவரிப் பிடித்த சான்றிதழ் தவறாது வழங்க வேண்டும்.

வருமானவரி பிடித்தம் செய்யாமல் இருப்பின் ஏற்படும் விளைவுகள்[தொகு]

  • வருமான வரிச் சட்டம் பிரிவு 40 (a)(ia) மற்றும் பிரிவு 20 (1), பிரிவு 201 (iA) மற்றும் பிரிவு 271சி-இன்படி வரிப்பிடித்தம் செய்து அதனை வருமான வரித்துறைக்கு கட்டாமல் இருப்பின் வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறைத்தண்டண்னைக்கு ஆளாக நேரிடும்.[25][26]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-16. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  2. http://www.charteredclub.com/tds-refund/
  3. http://knowyourpan.blogspot.com/2013/07/indian-income-tax-refund-status-cpc.html
  4. http://www.taxmann.com/taxmannflashes/BUD12-70g.htm
  5. http://www.taxbingo.com/interest_from_fd_sb_accounts.html பரணிடப்பட்டது 2014-03-18 at the வந்தவழி இயந்திரம்,
  6. http://www.allbankingsolutions.com/Top-Topics/DEPSUB3.shtml
  7. http://www.bemoneyaware.com/blog/fd-interest-tds-tax-itr-refund/
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-07-04. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-10-08. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  10. "TDS on Immovable Property". TopCAfirms. பார்க்கப்பட்ட நாள் 4 December 2013.
  11. http://www.caclubindia.com/forum/tds-on-sale-of-immovable-property-sec-194ia-simplified-268528.asp#.Ux3qyD-Syi4
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-08-18. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-04-03. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-08-18. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  15. http://yourfinancebook.com/section-193-tds-interest-securities/
  16. http://yourfinancebook.com/tds-section-194d-insurance-commission/
  17. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-04-26. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  18. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-21. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.
  19. http://lawzonline.com/bareacts/income-tax-act/section194G-income-tax-act.htm
  20. http://yourfinancebook.com/tds-section-194h-commission-brokerage/
  21. http://yourfinancebook.com/tds-rent-section-194i-income-tax-act/
  22. http://yourfinancebook.com/tds-rent-section-194i-income-tax-act/
  23. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2014-03-17.
  24. http://www.smartpaisa.in/2013/02/non-resident-indian-nri-definition-income-tax-act-implication-residency.html
  25. http://www.caclubindia.com/articles/applicability-of-sec-40-a-ia-on-year-end-tds-provisions-4013.asp#.Ux35MT-Syi4
  26. "Non-compliance with TDS provisions". TopCAfirms. Archived from the original on 6 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 4 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வருமானவரி_பிடித்தம்&oldid=3570915" இலிருந்து மீள்விக்கப்பட்டது