உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவில் வருமானவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வருமானவரித் துறையின் சின்னம்



மைய அரசின் வருவாய்துறை வசூலித்த வரிகள் 2007-2008

  தனிநபர் வருமானவரி (நேரடி வரி) (17.43%)
  நிறுவன வரி (Corporate tax) (நேரடி வரி) (32.76%)
  இதர வரிகள் (நேரடி வரி) (2.83%)
  கலால் வரி (மறைமுக வரி) (20.84%)
  சுங்கவரி (மறைமுக வரி) (17.46%)
  இதர வரிகள் (மறைமுக வரி) (8.68%)

இந்தியாவில் வருமான வரி இந்தியா விடுதலை பெற்ற பின்பு இந்திய வருமானவரி சட்டம், 1961-[1] இந்திய பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, 01-04-1962 முதல் இந்திய வருமான வரிச் சட்டம் செயல்படத் தொடங்கியது. [2]வருமான வரி கணக்கை சரிபார்த்தல் மற்றும் வசூலித்தல் ஆகியவற்றை இந்திய அரசின் வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறையானது இந்திய அரசின் நிதி அமைச்சக வருவாய்த்துறையின் நேரடி வரிகள் வாரியத்தின் கீழ் இயங்குகிறது.[3]வருமான வரித் துறையினர்க்கு, வருமான வரி படிவம் தாக்கல் செய்யும் போது, படிவத்தில் நிரந்த கணக்கு எண் (PAN) கட்டாயமாக குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

வருமான வரி விகிதங்கள்

[தொகு]

இந்திய வருமான வரித் துறையினர், ஒரு நிதியாண்டில் ஒரு தனிநபர் ஈட்டிய மொத்த வருவாய்க்கு ஏற்ப வருமான வரி நிர்ணயத்துள்ளது. வருமானவரி செலுத்துவதில் 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கும், 80 வயது நிரம்பிய மிக மூத்த குடிமக்களுக்கும் வருமான வரி செலுத்துவதில் சிறிது சலுகை காட்டப்பட்டுள்ளது.[4]

அறுபது வயதிற்குட்பட்டவர்களுக்கான வருமான வரி விகிதங்கள் ?

[தொகு]
ஆண்டு வருவாய் ரூபாய் 0 முதல் 2,50,000 வரை : வருமானவரி இல்லை
ஆண்டு வருவாய் ரூபாய் 2,50,001 முதல் 5,00,000 வரை : 5 விழுக்காடு வருமான வரி
ஆண்டு வருவாய் ரூபாய் 5,00,001 முதல் 10,00,000 வரை : 20 விழுக்காடு வருமான வரி
ஆண்டு வருவாய் ரூபாய் 10,00,000 மேல்  : 30 விழுக்காடு வருமான வரி

அறுபது வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விகிதங்கள்

[தொகு]
ஆண்டு வருவாய் ரூபாய் 0 முதல் 3,00,000 இலட்சம் வரை  : வருமான வரி இல்லை
ஆண்டு வருவாய் ரூபாய் 3,00,001 முதல் 5,00,000 இலட்சம் வரை : 10 விழுக்காடு வருமான வரி
ஆண்டு வருவாய் ரூபாய் 5,00,001 முதல் 10,00,000 இலட்சம் வரை: 20 விழுக்காடு வருமான வரி
ஆண்டு வருவாய் ரூபாய் 10,00,000 இலட்சத்திற்கு மேல்  : 30 விழுக்காடு வருமான வரி

எண்பது வயதிற்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விகிதங்கள்

[தொகு]
ஆண்டு வருவாய் ரூபாய் 0 முதல் 5,00,000 இலட்சம் வரை  : வருமான வரி இல்லை
ஆண்டு வருவாய் ரூபாய் 5,00,001 to 10,00,000 இலட்சம் வரை : 30 விழுக்காடு வருமான வரி
ஆண்டு வருவாய் ரூபாய் 10,00,000 இலட்சத்திற்கு மேல்  : 60 விழுக்காடு வருமான வரி

வருமான வரி படிவம் கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டியவர்கள்

[தொகு]
மாத ஊதியம் பெறுபவர்களுக்கான வருமானவரி கணக்கீடு மாதிரி படிவம்
ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களுக்கான வருமானவரி கணக்கீடு மாதிரி படிவம்

வருமான வரி படிவத்தை ஆண்டு தோறும் சூலை 30-ஆம் தேதிக்குள் வருமானத்துறையினரிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு முன் மார்ச்சு மாத இறுதிக்குள் முன்கூட்டியே வருமானவரி கட்டியிருக்க வேண்டும்.

  • நிதியாண்டில் அனைத்து இனங்கள் மூலம் ரூபாய் இரண்டு இலட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுபவர்கள்.
  • நிதியாண்டில் ரூபாய் 10,000/-க்கு மேல் வங்கி/கூட்டுறவு நிறுவனங்களிடமிருந்து வட்டி

ஈட்டுபவர்கள்.

  • நிதியாண்டில் 5 இலட்சமும் அதற்கு மேலும் தங்க நகைகள் மற்றும் தங்கத்தை வாங்குபவர்கள்.
  • கடன் அட்டை மூலம் ஆண்டிற்கு இரண்டு இலட்சம் மற்றும் அதற்கு மேலும் பொருட்களை கொள்முதல் செய்பவர்கள்.
  • ரூபாய் முப்பது இலட்சம் மற்றும் அதற்கு மேலும் மதிப்புடைய அசையாச் சொத்துக்களை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள்.
  • வங்கி சேமிப்பு கணக்கில் ரூபாய் பத்து இலட்சமும் அதற்கு மேற்பட்ட தொகை இருப்பாக வைத்திருப்பவர்கள்.
  • ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை பரஸ்பர நிதியில் முதலீடு செய்துள்ளவர்கள்.
  • ரூபாய் ஐந்து இலட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளவர்கள்.
  • ரூபாய் ஒரு இலட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள்.
  • ரூபாய் ஐந்து இலட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை இந்திய ரிசர்வ் வங்கியின் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளவர்கள்.

உரிய காலத்தில் வருமான வரி படிவம் தாக்கல் செய்யவில்லை எனில் ஏற்படும் விளைவுகள்

[தொகு]

வருமான வரிச் சட்டம் பிரிவு 276சிசி-இன் படி, உரிய காலத்தில் வருமானவரி படிவம் தாக்கல் செய்யவில்லை எனில் ரூபாய் ஒரு இலட்சம் அபராத தொகை செலுத்துவதுடன், வருமான வரித் துறையின்ர் மேற்கொள்ளும் குற்ற நடவடிக்கைகளுக்கும் ஆளாக நேரிடும்.[5] [6]

வருமான வரி படிவம் தாக்கல் செய்வதில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள்

[தொகு]

ஆண்டு மொத்த வருவாய் ரூபாய் இரண்டரை இலட்சத்திற்கு கீழ் வருவாய் ஈட்டும், அறுபது நிரம்பிய மூத்த குடிமக்களும், ஆண்டு மொத்த வருவாய் ரூபாய் ஐந்து இலட்சத்திற்கு கீழ் வருவாய் ஈட்டும், எண்பது வயது நிரம்பிய மிக மூத்த குடிமக்களும் வருமான வரித்துறையினருக்கு, ஆண்டு தோறும் வருமானவரி படிவம் தாக்கல் செய்யத் தேவையில்லை.[7]

வருமான வரி செலுத்த மொத்த வருவாய் கணக்கீடு செய்வதில் அரசின் சலுகைகள்

[தொகு]

ஒரு தனிநபரின் மொத்த வருமானத்தை வருமான வரிக்காக கணக்கிடப்படும் பொழுது கீழ்கண்ட தொகைகள், மொத்த வருமானத்திலிருந்து கழித்து வருமானம் வருமான வரி செலுத்த கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.[8]

  • வருமான வரி சட்டப் பிரிவு 80GG-இன் படி, வாடகை வீட்டில் குடியிருப்பவர், அதிக பட்சம் மாதம் ரூபாய் 2000/-வீதம் ஆண்டுக்கு ரூபாய் 24,000/- மொத்த வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம்.[9]
  • வருமான வரி சட்டம் 80சி-இன்படி பொது வருங்கால வைப்பு நிதி, சிறப்பு வருங்கால வைப்பு நிதி, அஞ்சலக வருங்கால வைப்பு நிதி, ஆயுள் காப்புறுதி சந்தா தொகை, வீட்டுவ்சதி கடனுக்கு செலுத்திய அசல் தொகை, அதிக பட்சம் இரண்டு குழந்தைக்களுக்கான கல்விக் கட்டணம், ஐந்து வருட தேசிய சேமிப்பு பத்திரங்களில் வைப்புத் தொகை ஆகியவற்றின் கூட்டுதொகையில் அதிக பட்சம் 1.50 இலட்சம் ரூபாய் வரை ஒருவரின் மொத்த வருவாயிலிருந்து கழித்து மீதமுள்ள தொகைக்கு வருமானவரி கணக்கிடப்படும்.[10]
  • வருமான வரி சட்டம் 80சிசிசி-இன்படி ஓய்வூதிய காப்புறுதி திட்டத்திலிருந்து பெறும் ஓய்வூதிய தொகைக்கு அதிக பட்சம் ரூபாய் பத்தாயிரம் வரை மொத்த வருவாயிலிருந்து கழித்து மீதமுள்ள வருவாய்க்கு வரி கணக்கிடப்படும்.[11]
  • வருமான வரிச் சட்டம் 80டி-இன் படி மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான செலுத்திய சந்தா (பிரிமியம்) தொகையில் அதிக பட்சம் ரூபாய் 15,000/- வரையும், 65 வயது நிரம்பிய மூத்த குடிமகன்கள் செலுத்தும் சந்தா தொகையில் அதிக பட்சம் ரூபாய் 20,000/- வரையும் மொத்த வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம்.[13]
  • வருமான வரிச் சட்டம் 80டிடி-இன் படி, வரி செலுத்துபவரது மருத்துவ செலவில் ரூபாய் 50,000/- வரையில் மொத்த வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளப்படும்.[14]
  • வருமான வரிச் சட்டம் 80இ-இன் படி தனது மற்றும் தனது குழந்தைகளின் மேற்படிப்பிற்காக வாங்கிய அரசு/வங்கி கடனுக்கு கட்டிய வட்டி முழுவதும் மொத்த வருவாயிலிருந்து கழித்துக் கொள்ளலாம்.[15]
  • வருமான வரி சட்டம் 80ஜி-இன் படி மாநில மத்திய அரசுகள் அங்கீகரித்த அறநிலையங்களுக்கும் மற்றும் அரசின் நிவாரண நிதிகளுக்கு வழங்கிய நன்கொடை தொகையில் அதிக பட்சம் 50 விழுக்காடு அல்லது 100 விழுக்காடு வரை மொத்த வ்ருவாயிலிருந்து கழித்துக் கொள்ளலாம்.[16]
  • வருமான வரிச் சட்டம் 80எல்-இன் படி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்தப்பட்ட ஐந்து வருட திரண்ட நிலைத்த வைப்பு நிதிக்கான வட்டி மற்றும் அரசு பத்திரங்கள் மீதான் வட்டித் தொகைகளை மொத்த வருவாயிலிருந்து கழித்துக் கொள்ளலாம்.[17]
  • வீட்டுக் கடன் வட்டிக்கான வரி விலக்கு வரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • வருமான வரி சட்டப்பிரிவு 80GGA-இன் படி, வருமான வரித்துறையினரால் அனுமதிக்கப்பட்ட பல்கலைகழங்கள், கல்லூரிகள், மற்றும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆய்வுக்கூடங்களில் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணி மேற்கொள்ளும் ஆய்வு மாணவர்கள் பெறும் தொகுப்பு ஊதியத்தின் மொத்த வருவாயை வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

[18]

  • வருமான வரி சட்டம் 80GGC-இன்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடை தொகை முழுவதற்கும் வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.[19]

வருமான வரி செலுத்துவதிலிருந்து முழுவதும் விடுவிக்கப்பட்ட வருவாய் இனங்கள் [20]

[தொகு]
  • வேளாண்மை வருவாய்கள்
  • பங்கு முதலீடுகளின் மீதான ஈவுத்தொகை
  • கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் ஈட்டிய வருவாய்
  • பணி ஓய்வுகால நிதிப்பலன் தொகைகள்

குறைந்த வருவாய் பிரிவினருக்கு நடப்பு ஆண்டில் வழங்கப்பட்ட சிறப்புச் சலுகை

[தொகு]

வருமான வரி சட்டப் பிரிவு 87A-இன் படி ரூபாய் ஐந்து இலட்சம் மற்றும் அதற்கு கீழ் மொத்த வருவாய் ஈட்டியவர்களுக்கு மட்டும் கட்ட வேண்டிய வருமானவரியிலிருந்து ரூபாய் இரண்டாயிரம் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.[21][22]. [23]

வருமானவரி ஏய்ப்பவர்களுக்கான தண்டனைகள்

[தொகு]

வருமான வரித்துறைக்கு ஆண்டு தோறும் வருமான வரி படிவம் சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கும், உண்மையான வருவாய்களை வருமான வரி படிவத்தில் காட்டாது வருமான வரியை செலுத்த தவறும் நபர்களுக்கும் வருமானவரிச் சட்டப்பிரிவு 271H-இன் படி ரூபாய் 10,000ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் குற்ற வழக்கும் பதிவு செய்யப்படும்.[24]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.incometaxindia.gov.in/HISTORY/PRE-1922.ASP
  2. http://www.incometaxindia.gov.in/HISTORY/PRE-1922.ASP
  3. http://incometaxindia.gov.in/ccit/CBDT.asp
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-08. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  5. http://indiankanoon.org/doc/212752/
  6. http://law.incometaxindia.gov.in/DitTaxmann/IncomeTaxActs/2005ITAct/section276cc.htm[தொடர்பிழந்த இணைப்பு]
  7. http://www.iiserbhopal.ac.in/PDF/Income%20Tax%20on%20salaries%20FY%202013-14.pdf
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-08. பார்க்கப்பட்ட நாள் 2014-12-02.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-19. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  10. https://cleartax.in/Guide/section80deductions
  11. http://caopinion.com/Post/Income-Tax-Deduction-Under-section-80CCC-80CCD--80CCF
  12. https://www.facebook.com/notes/amit-karnani/nps-duduction-under-income-tax-section-80ccd2/10150523768480826
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-19. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-19. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  15. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-19. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  16. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-19. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  17. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-07. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  18. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-19. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  19. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-19. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  20. http://www.taxfaq.in/list-of-income-that-is-exempt-from-tax.html
  21. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-02-11. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  22. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-17. பார்க்கப்பட்ட நாள் 2014-02-14.
  23. http://incometaxreturnindia.com/section-87a-gives-income-tax-rebatecredit-of-rs-2000-for-individual-whose-income-is-less-than-rs-5-lac/#.U7pmKJSSxOI ரூபாய் இரண்டாயிரம் சிறப்பு வரித்தள்ளுபடி
  24. http://www.iiserbhopal.ac.in/PDF/Income%20Tax%20on%20salaries%20FY%202013-14.pdf பத்தி 4.9.5 பக்க எண்கள் 11 to 12

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியாவில்_வருமானவரி&oldid=3593210" இலிருந்து மீள்விக்கப்பட்டது