பியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பியரைக் ஓர் பெரிய கானில் இருந்து கண்ணாடிக் குவளைக்குள் ஊற்றும் படம்
டச்சு பியர்களின் ஓர் தொகுப்பு
ஜெர்மானிய பியர் தொழிற்சாலையின் தோற்றம்
அரிய பீயர் கான்களின் ஓர் தொகுப்பு
மால்ட் என்னும் தானியத்தை வறுப்பதற்கு முன் உள்ள தோற்றம்
வரையப்பட்ட படம் - பியர் கடை
எகிப்திய நாகரிகத்தில் பியர் குடித்துள்ளனர், என்பதற்கு சாட்சி
25 லீற்றர் (Homebrew) எனப்படும் பியர் போத்தல்
(Kriek) எனப்படும் ஓர் பியர் கண்ணாடிக் குவளையில் உள்ள படம்
(Paulaner Dunkel) எனப்படும் ஓர் கருமையான பியர் கண்ணாடிக் குவளையில் உள்ள படம்

பியர் அல்லது பீர் உலகின் பழமைவாய்ந்த[1] மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம்[2] மேலும், நீர், தேனீருக்கு அடுத்தப்படியாக அதிகமாக உட்கொள்ளப்படும் குடிவகையாகும்[3]. தானியங்களிலிருந்து பெறப்பட்ட மாப்பொருளை நொதிக்கவைப்பதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. தேவையான மாப்பொருள் பொதுவாக பார்லி முளைக்கூழிலிருந்து பெறப்படுகிறது எனினும் கோதுமை, சோளம், அரிசி போன்றவையும் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலான பியர் வகைகள் ஒப் தாவரத்தின் பூக்களை சுவையூட்டிகளாக பயன்படுத்துகின்றன. ஒப் பூக்கள் பியருக்கு அதன் கைப்புச் சுவையைக் கொடுப்பதோடு காப்புப்பொருளாகவும் செயற்படுகின்றன. ஒப் பூக்களை விடுத்து பச்சிலை, பழங்கள் போன்றவையும் சில வகை பியர்களில் சுவையூட்டிகளாக பயன்படுத்தப்படுகின்றன. திராட்சையிலிருந்து பெறப்படும் வைன், தேனிலிருந்து பெறப்படும் மெட் போன்ற மாப்பொருளற்றவற்றை நொதிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படும் மதுபானங்கள் பியராக கருதப்படுவதில்லை.

மனித வரலாற்றின் மிகப்பழைய எழுத்தெச்சங்கள் பியர் தயாரிப்பு, விநியோகம் தொடர்பான குறிப்புகளைக் கொண்டிருக்கின்றன:அம்முராபி நெறியில் பியர், பியர் விற்பனை நிலையங்களை கட்டுப்படுத்தும் சட்டங்கள் காணப்படுகின்றன,[4] மேலும் சுமேரிய பியர் கடவுளான நின்கசி மீதான தேவாரம் கடவுள் வாழ்த்தாகவும் பியர் தயாரிப்பு முறையை மனனம் செய்துவைக்கும் முறைமையாகவும் பயன்பட்டது.[5][6] இன்று, பியர் வடிக்கும் கைத்தொழில் சில முன்னணி பன்னாட்டு நிறுவனங்களையும் பல ஆயிரக்கணக்கிலான சிறிய நிறுவனங்களையும் கொண்ட உலகலாவிய வணிகமாகும்.

பியரை உலகலாவிய அளவில் பிரபலமான வெளிர் லாகர் மற்றும் பகுதிக்கு பகுதி வேறுபடும் மாவடிகளாக (ale) முக்கிய இரண்டு வகைகளாக பிரிக்கலாம். மாவடிகள், வெளிர் மாவடி, உறமிக்க மாவடி, பழுப்பு மாவடி என மேலும் சிறுவகைகளாக பிரிக்கப்படுகின்றன. பியரில் காணப்படும் மதுவின் அளவு சில வகைகளில் 1%க்கும் (கனவளவின் படி மது) குறைவாகவும் சில அரிய வகைகளில் 20%க்கும் அதிமாகவும் காணப்படுகிறது. பொதுவாக மதுவின் அளவு 4% தொடங்கி 6% வரை காணப்படுகிறது.

அளவீடு[தொகு]

பீயர் வலிமை, கசப்பு மற்றும் நிறம் மூலம் அளவிடப்பட்டு மதிப்பிடப்படுகிறது. உணரப்படும் கசப்பு காய்ச்சுதல் வேதியியலர்கள் அமெரிக்கன் சொசைட்டி மற்றும் ஐரோப்பிய வடிப்பாலை மாநாடு இடையே ஒத்துழைப்பு வரையறுக்கப்பட்ட சர்வதேச கசப்பு அலகுகள் அளவில் Glazyrin,, மூலம் அளவிடப்படுகிறது. சர்வதேச அளவில் அடிக்கடி (EBU) என சுருக்கமாக அழைக்கப்படும் ஐரோப்பிய கசப்பு அலகுகள் அளவில், ஒரு வளர்ச்சி, மற்றும் கசப்பு மதிப்புகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

நிறம்[தொகு]

பியரின் நிறம் மால்ட் என தீர்மானிக்கப்படுகின்றது. பியர் மிகவும் பொதுவான நிறமான வெளிர் மால்ட்ஸ் நிறத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட ஓர் மங்கலான அம்பர் நிறமாக மாறப்படுகின்றது. கருமையான பீயர்கள் வழக்கமாக இருண்ட மால்ட் ஒரு சிறிய விகிதத்தில் ஒரு வெளிர் மால்ட் நிறத்தைக்கொண்டது.

சுகாதாரப் பாதிப்புக்கள்[தொகு]

Possible long-term effects of ethanol.svg

பியரில் அதிக பாதிப்பைச்செலுத்தும் மது கலந்துள்ளது. பீயரில் உள்ளிட்ட மது மிதமான நுகர்வு, இதய நோய், பக்கவாதம் மற்றும் அறிவாற்றல் சரிவு ஒரு குறைந்த ஆபத்து தொடர்புடையதாக உள்ளது.

ஊட்டச்சத்து வீதம்[தொகு]

பியரின் ஊட்டச்சத்து வீதம் பெரிதும் மாறுபடுகின்றன.

பியர் வகை மாப்பொருள் மது வீதம் கலோரீஸ்
பட்வெய்சர் தெரிவு 55 1.8 2.4% 55
கூர்ஸ் லேசானது 5 4.2% 102
கின்னஸ் டிறவுட் 19 4% 126
சியெற்றா நெவடா பிக்பூட் 30.3 9.6% 330

ஆய்வுகள்[தொகு]

பீரின் சுவை மனிதனின் மூளையை சுறுசுறுப்பாக்கி மேலும் அப்பானத்தை அருந்தத் தூண்டுகிறது என அண்மைய ஆய்வு தெரிவிக்கின்றது. ஏப்பிரல் 15 அன்று வெளியான நியூரோசைக்கோபார்மக்காலசி (Neuropsychopharmacology) இதழின் ஆய்வு அறிக்கை ஒன்றில், இந்தியானா பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் உள்ள ஆய்வாளர்கள் 49 ஆண்களில் சோதனை செய்து இதனைக் கண்டறிந்துள்ளனர்.[7] அருந்திய சிறிய அளவு பீரின் சுவை மட்டுமே, மூளையின் வேதியியல் வெகுமதிக் குறிகையான டோபமைனை (dopamine) வெளியிடுகிறது. ஆய்வாளர்கள் 15 மி.லி பீரும், விளையாட்டின் பானமும் 15 நிமிட இடைவேளை விட்டு பங்குபெற்றவர்களுக்கு கொடுத்தனர். பிறகு அவர்களின் மூளையை துலாவிப் பார்த்ததில் அதில் டோபமைன் இருந்ததை அறிந்தனர். ஆய்வாளர்கள் 15 மி.லி பீரும் உடலில் மது அடைவை அதிகரிக்காது என்றும், நஞ்சுத்தன்மையை கொடுக்கக்கூடியதாகாது என்றும் கூறினர்.[8]

பொருட்களின் பயிற்சி, கொள்கை மற்றும் பயன்பாடு ஆகியற்றின் பேராசிரியரான நியூகாசில் பல்கலைக்கழகத்தின் பீட்டர் ஆன்டர்சன் "இது ஒரு வகை குறிப்புகள். சுவை, மணம், படிமம் ஆகியவை விரும்பும் படியாக செய்யக்கூடியது. இது ஆச்சரியம் அளிப்பதாக இல்லை. சுவை விரும்பக்கூடியதாக இருந்தால், அதன் பிரிதிபலிப்பு மூளையின் செயல்பாட்டில் தெரியும்." எனக் கூறியுள்ளார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Arnold, John P. Origin and History of Beer and Brewing: From Prehistoric Times to the Beginning of Brewing Science and Technology. ISBN 0966208412. 
  2. "Volume of World Beer Production". European Beer Guide. பார்த்த நாள் 2006-10-17.
  3. The Barbarian's Beverage: A History of Beer in Ancient Europe. http://www.amazon.co.uk/gp/reader/0415311217?p=S00H&checkSum=ha%2FMenougrV%2FCPWZg6P4td6OJoeMeVfRptT8FuSLUrk%3D. 
  4. "Beer Before Bread". Alaska Science Forum #1039, Carla Helfferich. பார்த்த நாள் 2008-05-13.
  5. "Nin-kasi: Mesopotamian Goddess of Beer". Matrifocus 2006, Johanna Stuckey. பார்த்த நாள் 2008-05-13.
  6. Black, Jeremy A.; Cunningham, Graham; Robson, Eleanor (2004). The literature of ancient Sumer. Oxford: Oxford University Press. ISBN 0-19-926311-6. 
  7. Brandon G. Oberlin, Mario Dzemidzic, Stella M. Tran, Christina M. Soeurt, Daniel S. Albrecht, Karmen K. Yoder, David A. Kareken (ஏப்ரல் 2013). "Beer Flavor Provokes Striatal Dopamine Release in Male Drinkers: Mediation by Family History of Alcoholism". Neuropsychopharmacology. doi:10.1038/npp.2013.91. http://www.nature.com/npp/journal/vaop/naam/abs/npp201391a.html. 
  8. Tanya Lewis (ஏப்ரல் 15, 2013). "Mmm! Taste of Beer Triggers Good Feelings in the Brain". லைவ் சயன்சு. பார்த்த நாள் ஏப்ரல் 22, 2013.
  9. James Gallagher (ஏப்ரல் 15, 2013). "Beer taste excites male brain". பிபிசி. பார்த்த நாள் ஏப்ரல் 22, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியர்&oldid=1828245" இருந்து மீள்விக்கப்பட்டது