வரகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரகு
Kodo millet
உயிரியல் வகைப்பாடு
திணை:
வரிசை:
Poales
குடும்பம்:
Poaceae
துணைக்குடும்பம்:
Panicoideae
பேரினம்:
Paspalum
இனம்:
P. scrobiculatum
இருசொற் பெயரீடு
Paspalum scrobiculatum
லி.
Panicum miliaceum

வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது (தவறு[1]). வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. வறட்சி, நஞ்சை என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். இதன் விதை ஆயிரம் வருடம் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது.[சான்று தேவை]

பண்டைத்தமிழரின் உணவு தானியம்[தொகு]

இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உட்கொள்ளப்பட்ட ஓர் உணவு தானியமாகும். இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்டது.

 • வரகை அரிசிக்குப் பதிலாக இட்லி மற்றும் தோசைகளில் பயன்படுத்தலாம்.
 • அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.
 • வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.

விழிப்புணர்வு[தொகு]

தற்போது பொதுவாக சிறுதானியங்களின் மேல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதால், வரகின் பயன்பாடு மெல்ல கூடிக்கொண்டு வருகின்றது.

வரகை சரியாக தோல் நீக்கம் செய்யாவிட்டால், தொண்டையில் அடைத்துக் கொண்டு ஒருவிதமான ஒவ்வாமையை உண்டாகும்.

வரகின் பயன்பாடு[தொகு]

 • வரகைக் கோவில் கும்பத்தில் வைத்து பத்திரப்படுத்துவதற்கு முக்கியமான காரணம் அதற்கு இடியைத் தாங்கும் தன்மை உள்ளது.[சான்று தேவை]
 • வீடுகளில் கூரை வேய்வதற்கு வரகுத்தாளை பயன்படுத்தலாம். கோடைக்காலத்தில் நல்ல குளிர்ச்சியாக இருக்கும்.

சாகுபடி முறை[தொகு]

 • ஆடிப் பட்டம், வரகு சாகுபடிக்கு ஏற்றது.
 • இதன் வயது 5 மாதங்கள்.
 • அனைத்து மண் வகைகளிலும் சிறப்பாக வளரும். குறிப்பாக, களர் மண்ணில்கூட விளையும் தன்மையுடையது.
 • மழை பெய்து முடிந்த பிறகு, மண்ணில் அதிக ஈரம் இல்லாமல், புட்டுப்பதத்தில் இருக்கும் போது, இரண்டு சால் உழவு செய்து, ஏக்கருக்கு 7 கிலோ விதையைப் பரவலாக விதைத்து, மீண்டும் ஒரு சால் உழவு போடவேண்டும்.
 • ஈரப்பதம் இருப்பதைப் பொறுத்து, 7 முதல் 10 நாட்களில் முளைப்பு எடுத்துவிடும்.
 • விதைப்பு செய்த பிறகு மழை இல்லாமல் இருந்தாலும், மழை பெய்தவுடன் முளைத்து விடும்.
 • களை எடுக்கத் தேவையில்லை, பூச்சி, நோய், பறவைகள் போன்ற பிரச்னையில்லை, உரம், பூச்சிக்கொல்லி தேவையில்லை.
 • இளம் பயிராக இருக்கும்போது, மாடுகள் மேய்ந்தாலும், பயிர் மீண்டும் அதிகமான கிளைப்புடன் வளர்ந்து விடும்.
 • நான்காம் மாதத்தில் கதிர் பிடிக்க ஆரம்பித்து, ஐந்தாம் மாதத்தில் முற்றி அறுவடைக்கு வந்து விடும்.
 • ஒரு குத்துக்கு 15 முதல் 20 சிம்புகளும், சிம்புக்கு 5 முதல் 8 கதிர்களும், கதிருக்கு 150 முதல் 200 மணிகளும் இருக்கும்.
 • அறுவடை செய்ய ஆட்கள் வேண்டிய அவசியமில்லை. இப்போது நடைமுறையில் இருக்கும் நெல் அறுவடை இயந்திரங்களை வைத்தே அறுவடை செய்யலாம்.
 • ஏக்கருக்கு சராசரியாக 15 மூட்டை (60 கிலோ) மகசூல் கிடைக்கும்.

கபிலர் பாடலில் வரகு[தொகு]

கபிலர் தன் பாடலில் (115) ஈன்றணிய மயிற் பேடையை ஒத்து வரகுக் கதிர் விளைந்திருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ பயன்கள்[தொகு]

 • சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
 • மூட்டுவலியைக் குறைக்க உதவுகிறது.
 • கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு
 • நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.
 • மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது.

தொடர்புடைய சுட்டிகள்[தொகு]

கல்லீரலைக் காக்கும் வரகு !

 1. முனுசாமி இலட்சுமணன், அசோக் (1996-02-14). "Lost Crops of Africa: Volume I: Grains". National Academies Press: 260. https://www.nap.edu/read/2305/chapter/17#253. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரகு&oldid=3935322" இலிருந்து மீள்விக்கப்பட்டது