வரகு
வரகு | |
---|---|
Kodo millet | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
வரிசை: | Poales
|
குடும்பம்: | Poaceae
|
துணைக்குடும்பம்: | Panicoideae
|
பேரினம்: | Paspalum
|
இனம்: | P. scrobiculatum
|
இருசொற் பெயரீடு | |
Paspalum scrobiculatum லி. |
வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது (தவறு[1]). வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. வறட்சி, நஞ்சை என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். இதன் விதை ஆயிரம் வருடம் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது.[சான்று தேவை][2][3][4]
பண்டைத்தமிழரின் உணவு தானியம்
[தொகு]இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உட்கொள்ளப்பட்ட ஓர் உணவு தானியமாகும். இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்டது.
- வரகை அரிசிக்குப் பதிலாக இட்லி மற்றும் தோசைகளில் பயன்படுத்தலாம்.
- அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.
- வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.
விழிப்புணர்வு
[தொகு]தற்போது பொதுவாக சிறுதானியங்களின் மேல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதால், வரகின் பயன்பாடு மெல்ல கூடிக்கொண்டு வருகின்றது.
வரகை சரியாக தோல் நீக்கம் செய்யாவிட்டால், தொண்டையில் அடைத்துக் கொண்டு ஒருவிதமான ஒவ்வாமையை உண்டாகும்.
வரகின் பயன்பாடு
[தொகு]- வரகைக் கோவில் கும்பத்தில் வைத்து பத்திரப்படுத்துவதற்கு முக்கியமான காரணம் அதற்கு இடியைத் தாங்கும் தன்மை உள்ளது.[சான்று தேவை]
- வீடுகளில் கூரை வேய்வதற்கு வரகுத்தாளை பயன்படுத்தலாம். கோடைக்காலத்தில் நல்ல குளிர்ச்சியாக இருக்கும்.
சாகுபடி முறை
[தொகு]- ஆடிப் பட்டம், வரகு சாகுபடிக்கு ஏற்றது.
- இதன் வயது 5 மாதங்கள்.
- அனைத்து மண் வகைகளிலும் சிறப்பாக வளரும். குறிப்பாக, களர் மண்ணில்கூட விளையும் தன்மையுடையது.
- மழை பெய்து முடிந்த பிறகு, மண்ணில் அதிக ஈரம் இல்லாமல், புட்டுப்பதத்தில் இருக்கும் போது, இரண்டு சால் உழவு செய்து, ஏக்கருக்கு 7 கிலோ விதையைப் பரவலாக விதைத்து, மீண்டும் ஒரு சால் உழவு போடவேண்டும்.
- ஈரப்பதம் இருப்பதைப் பொறுத்து, 7 முதல் 10 நாட்களில் முளைப்பு எடுத்துவிடும்.
- விதைப்பு செய்த பிறகு மழை இல்லாமல் இருந்தாலும், மழை பெய்தவுடன் முளைத்து விடும்.
- களை எடுக்கத் தேவையில்லை, பூச்சி, நோய், பறவைகள் போன்ற பிரச்னையில்லை, உரம், பூச்சிக்கொல்லி தேவையில்லை.
- இளம் பயிராக இருக்கும்போது, மாடுகள் மேய்ந்தாலும், பயிர் மீண்டும் அதிகமான கிளைப்புடன் வளர்ந்து விடும்.
- நான்காம் மாதத்தில் கதிர் பிடிக்க ஆரம்பித்து, ஐந்தாம் மாதத்தில் முற்றி அறுவடைக்கு வந்து விடும்.
- ஒரு குத்துக்கு 15 முதல் 20 சிம்புகளும், சிம்புக்கு 5 முதல் 8 கதிர்களும், கதிருக்கு 150 முதல் 200 மணிகளும் இருக்கும்.
- அறுவடை செய்ய ஆட்கள் வேண்டிய அவசியமில்லை. இப்போது நடைமுறையில் இருக்கும் நெல் அறுவடை இயந்திரங்களை வைத்தே அறுவடை செய்யலாம்.
- ஏக்கருக்கு சராசரியாக 15 மூட்டை (60 கிலோ) மகசூல் கிடைக்கும்.
கபிலர் பாடலில் வரகு
[தொகு]கபிலர் தன் பாடலில் (115) ஈன்றணிய மயிற் பேடையை ஒத்து வரகுக் கதிர் விளைந்திருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ பயன்கள்
[தொகு]- சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
- மூட்டுவலியைக் குறைக்க உதவுகிறது.
- கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு
- நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.
- மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது.
தொடர்புடைய சுட்டிகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ முனுசாமி இலட்சுமணன், அசோக் (1996-02-14). "Lost Crops of Africa: Volume I: Grains". National Academies Press: 260. https://www.nap.edu/read/2305/chapter/17#253.
- ↑ "Panicum miliaceum L.". The Plant List. 2013. பார்க்கப்பட்ட நாள் 8 January 2015.
- ↑
- USDA, ARS, GRIN. வரகு in the மூலவுயிர்முதலுரு வளவசதிகள் தகவற் வலையகம், ஐக்கிய அமெரிக்காவின் வேளாண்துறை ஆராய்ச்சி சேவையகம்.
- ↑ Lu, H.; Zhang, J.; Liu, K.-b. et al. (21 April 2009). "Earliest domestication of common millet (Panicum miliaceum) in East Asia extended to 10,000 years ago". Proceedings of the National Academy of Sciences 106 (18): 7367–7372. doi:10.1073/pnas.0900158106. பப்மெட்:19383791. Bibcode: 2009PNAS..106.7367L.