உள்ளடக்கத்துக்குச் செல்

நரேந்திர மோடி விளையாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரேந்திர மோதி துடுப்பாட்ட விளையாட்டரங்கம்
மொதெரா விளையாட்டரங்கம்
நரேந்திர மோடி விளையாட்டரங்கம்
முழுமையான பெயர்நரேந்திர மோடி விளையாட்டரங்கம்
முன்னாள் பெயர்கள்மொதெரா விளையாட்டரங்கம்
சர்தார் படேல் விளையாட்டரங்கம்
அமைவிடம்மொதெரா, அகமதாபாத், குஜராத், இந்தியா
உரிமையாளர்குஜராத் துடுப்பாட்டச் சங்கம்
Executive suites76
இருக்கை எண்ணிக்கை110,000 (2020–முதல்)[1]
54,000 (2006–2015)[2][3]
49,000 (1982–2006)
மிகக் கூடிய வருகை
ஆடுகள அளவு162 x 170 கெஜம்[4]
பரப்பளவு63
தரைப் பரப்புஆத்திரேலிய புல் (முட்டை வடிவம்)
Construction
Broke ground1983 (பழைய அமைப்பு), 2017 (விரிவாக்கம்)
கட்டப்பட்டது12 நவம்பர் 1983 (பழைய அமைப்பு)
24 பிப்ரவரி 2020 (தற்போதைய அமைப்பு)
திறக்கப்பட்டது12 நவம்பர் 1983 (பழைய அமைப்பு)
24 பிப்ரவரி 2021 (தற்போது விரிவாக்கப்பட்ட அமைப்பு)
சீரமைக்கப்பட்டது24 பிப்ரவரி 2020
விரிவாக்கப்பட்டது24 பிப்ரவரி 2020
மூடப்பட்டது2015 (பழைய அமைப்பு)
அழிப்பு2015 (பழைய அமைப்பு)
கட்டுமான செலவு800 கோடி (US$100 மில்லியன்) (மறு கட்டுமானம், 2017–2020)[5]
வடிவமைப்பாளர்பாபுலஸ் கம்பேனி (பழைய கட்டமைப்பு)[6] (former structure)
General contractorலார்சன் அன்ட் டூப்ரோ
குடியிருப்போர்
இந்தியத் துடுப்பாட்ட அணி (1983–தற்போது வரை)
குஜராத் துடுப்பாட்ட அணி (1983–தற்போது வரை)
ராஜஸ்தான் ராயல்ஸ் (2010 & 2014)

நரேந்திர மோடி விளையாட்டரங்கம் (குசராத்தி: નરેન્દ્ર મોદી સ્ટેડિયમ), அகமதாபாத் நகரத்தில் சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டரங்க வளாகத்தில் உள்ள துடுப்பாட்ட அரங்கம் ஆகும். முன்னர் மொதெரா விளையாட்டரங்கம் என்று அழைக்கப்பட்ட நரேந்திர மோதி விளையாட்டரங்கம், இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாநகராட்சியின் மொதெரா பகுதியில் உள்ளது. ஆத்திரேலியா புல்லைக் கொண்டு, முட்டை வடிவத்தில் 63 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த விளையாட்டரங்கம், 1,10,000 பார்வையாளர்கள் அமர்ந்து காணக்கூடிய வகையில் 2020-இல் கட்டி முடிக்கப்பட்டது.[7] இந்த விளையாட்டரங்கத்தின் உரிமையாளர்கள் குஜராத் துடுப்பாட்டச் சங்கம் ஆகும். 24 பிப்ரவரி 2021 அன்று இப்புதிய விளையாட்டரங்கத்திற்கு, நரேந்திர மோடி விளையாட்டரங்கம் எனும் பெயரிட்டு, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் 24 பிப்ரவரி 2021 அன்று அலுவல்முறையில் திறந்து வைத்தார். இது ஒரு இலட்சத்திற்கும் மேல் பார்வையாளர்கள் அமரும் வகையில் கட்டப்பட்ட உலகின் பெரிய விளையாட்டரங்கம் ஆகும்.[8][9][10] [11]

வரலாறு[தொகு]

முதன் முதலில் இந்த விளையாட்டரங்கம் 1983-இல் கட்டப்பட்டு, 2006-இல் சீரமைக்கப்பட்டது.[12]2015-இல் இந்த விளையாட்டரங்கை முழுவதும் இடித்து பன்னாட்டுத் தரத்தில் பெரிதாக கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. பிப்ரவரி 2020-இல் 63 ஏக்கர் பரப்பளவில், 1,10,000 பேர் அமரும் வகையில் ரூபாய் 800 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட புதிய விளையாட்டரங்கம் நரேந்திர மோடி விளையாட்டரங்கம் எனப் பெயரிடப்பட்டு, 24 பிப்ரவரி, 2021 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர். ராம் நாத் கோவிந்தால் திறந்து வைக்கப்பட்டது.[13][14][15]

முக்கிய நிகழ்வுகள்[தொகு]

உலக கிரிக்கெட் போட்டிகள்[தொகு]

பழைய விளையாட்டரங்கத்தில் ஒரு நாள் உலக துடுப்பாட்டப் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அவைகள் வருமாறு;

புதிய விளையாட்டரங்கத்தில் இந்தியா - இங்கிலாந்து துடுப்பாட்டப் போட்டிகள், 2021[தொகு]

இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் துடுப்பாட்ட வீரர்கள் கலந்து கொள்ளும் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் இருபது20 போட்டிகள், இப்புதிய விளையாட்டரங்கத்தில் 24 பிப்ரவரி 2021 முதல் 28 மார்ச் 2021 முடிய நடைபெறுகிறது.[16]

நமஸ்தே டிரம்ப்[தொகு]

ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் டோனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு வருகை தந்த போது, நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி இந்த புதிய விளையாட்டரங்கத்தில் 24 பிப்ரவரி 2020 அன்று நடைபெற்றது.[17][18]

படக்காட்சிகள்[தொகு]

2010-இல் விளையாட்டரங்கத்தின் முந்தைய அமைப்பு)

மேற்கோள்கள்[தொகு]

 1. "Revamped Motera stadium to have record over one lakh seating capacity: GCA". Zee News.
 2. HT Correspondent (10 December 2016). "Why Sardar Patel Stadium in Motera, Ahmedabad will make cricket history". Hindustan Times. https://www.hindustantimes.com/cricket/why-sardar-patel-stadium-in-motera-ahmedabad-will-make-cricket-history/story-7b59h4SZG5yHl7BGkg9agK.html. 
 3. Sardar Patel Stadium, Motera, Ahmedabad, India. ESPN
 4. "New Motera Stadium is PM Modi's Vision". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
 5. "Motera Stadium gearing up to host Trump".
 6. "Archived copy". Archived from the original on 23 August 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-04-01.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
 7. "All about Motera stadium, the largest cricket stadium in the world". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2020-12-12.
 8. Motera Stadium renamed as Narendra Modi Cricket Stadium; officially inaugurated by President Ram Nath Kovind
 9. Now, Motera is world's largest cricket arena; renamed to Narendra Modi Stadium from Sardar Patel Stadium
 10. Refurbished Motera stadium renamed after PM as Narendra Modi stadium
 11. Motera Cricket Ground, World's Largest, Renamed Narendra Modi Stadium
 12. "Motera Stadium: Gujarat's Grand Stand". Ahmedabad Mirror.
 13. "Donald Trump likely to inaugurate, Motera Cricket Stadium, world's largest cricket facility in Ahmedabad". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2020-02-14.
 14. Now, Motera is world's largest cricket arena; renamed to Narendra Modi Stadium from Sardar Patel Stadium
 15. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு நரேந்திர மோடி பெயர் சூட்டல்
 16. England tour of India, 2021
 17. Namaste Trump
 18. "Ahmedabad's Motera Stadium to host US President Donald Trump". cnbctv18.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-24.

வெளி இணைப்புகள்[தொகு]