மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
Jump to navigation
Jump to search
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
---|---|
வடிவம் | மகளிர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
முதல் பதிப்பு | 1973, இங்கிலாந்து |
கடைசிப் பதிப்பு | 2022, நியூசிலாந்து |
தற்போதைய வாகையாளர் | ![]() |
அதிகமுறை வெற்றிகள் | ![]() |
அதிகபட்ச ஓட்டங்கள் | டெப்பி ஆக்லி (1,501) |
அதிகபட்ச வீழ்த்தல்கள் | ஜுலான் கோஸ்வாமி (43) |
![]() |
ஐசிசி மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (ICC Women's Cricket World Cup) மகளிர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திற்கான பன்னாட்டளவிலான முதன்மைப் போட்டிகளாகும். இந்தப் போட்டிகளை துடுப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐசிசி) நிர்வகிக்கிறது. துவக்கத்தில் இந்தப் போட்டிகளை பன்னாட்டு மகளிர் துடுப்பாட்ட அவை நடத்தியபோதும் இவ்விரு அவைகளும் 2005இல் ஒருங்கிணைக்கப்பட்ட பின்னர் ஐசிசியே நடத்துகிறது. முதல் போட்டிகள், ஆண்களுக்கான உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு இரண்டாண்டுகள் முன்னரே, 1973ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடத்தப்பட்டன. கடைசியாக 2009ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவில் நடைபெற்றது. இங்கிலாந்து இந்தப் போட்டிகளில் வெற்றி வாகை சூடியது. தற்போதைய உலகக்கிண்ணப் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகின்றன.