ஆஸ்திரேலிய மகளிர் துடுப்பாட்ட அணி இந்தக் கிண்ணத்தை ஆறாவது முறையாக வென்றது; இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 114 ஓட்டங்கள் வேறுபாட்டில் தோற்கடித்தது.[3][4]
எட்டு துடுப்பாட்ட அணிகளும் நான்கு அணிகள் கொண்ட இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தனது குழுவிலுள்ள அணிகளுடன் விளையாடிகின்றன. ஒவ்வொரு குழுவிலும் முதல்நிலையில் உள்ள மூன்று அணிகள் சூப்பர் சிக்ஸ் எனப்படும் அடுத்த நிலைப் போட்டிகளில் விளையாடுகின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஆட வேண்டும். இருப்பினும் தங்கள் குழுவில் இல்லாத மற்ற மூன்று அணிகளுடன் மட்டுமே ஆடுகின்றன. தங்கள் குழுவில் உள்ள அணிகளுடன் ஏற்கெனவே விளையாடிப் பெற்றிருந்த புள்ளிகளை தக்க வைத்துக் கொள்கின்றன. சூப்பர் சிக்சில் முதலாவதாக வரும் இரு அணிகள் இறுதி ஆட்டத்தில் விளையாடுகின்றன.