வக்கார் யூனிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வக்கார் யூனிசு

وقار یونس

Waqar younis.jpg
பாக்கித்தானின் கொடி பாக்கிஸ்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் வக்கார் யூனிசு
பிறப்பு 16 நவம்பர் 1971 (1971-11-16) (அகவை 47)
பன்சாப், பாக்கிஸ்தான்
உயரம் 1.82 m (5 ft 11 12 in)
வகை பந்து வீச்சுசாளர், பாக்கிஸ்தான் பயிற்றுனர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை வேகம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 111) நவம்பர் 15, 1989: எ இந்தியா
கடைசித் தேர்வு சனவரி 2, 2003: எ தென்னாபிரிக்கா
முதல் ஒருநாள் போட்டி (cap 71) அக்டோபர் 14, 1989: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி மார்ச்சு 4, 2003:  எ சிம்பாப்வே
சட்டை இல. 99
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 87 262 228 411
ஓட்டங்கள் 1010 969 2972 1553
துடுப்பாட்ட சராசரி 10.20 10.30 13.38 10.42
100கள்/50கள் 0/0 0/0 0/6 0/0
அதிகூடிய ஓட்டங்கள் 45 37 64 45
பந்து வீச்சுகள் 16224 12698 39181 19841
வீழ்த்தல்கள் 373 416 956 675
பந்துவீச்சு சராசரி 23.56 23.84 22.33 22.36
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 22 13 63 17
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 5 n/a 14 n/a
சிறந்த பந்துவீச்சு 7/76 7/36 8/17 7/36
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 18/– 35/– 58/– 56/–

செப்டம்பர் 3, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

வக்கார் யூனிசு மைட்லா ('Waqar Younis Maitla உருது: وقار یونس, பிறப்பு: நவம்பர் 16, 1971),

பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் தலைவராக இருந்தவர் ஆவார். வலது கை விரைவு வீச்சாளர்.அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[1][2] மேலும் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரும் ஆவார்[3]. 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விரைவு வீச்சு பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார்.

2012 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளின் தலைவரானார். அப்போது இவருக்கு வயது 22 ஆண்டுகள் 15 நாள்களாகும்.[4] இதன்மூலம் மிகக் குறைந்த வயதில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் , தேர்வுத் துடுப்பாட்டத் தலைவர் எனும் சாதனையையும் , சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். 1989- 2003 ஆண்டுகளுக்கிடையே இவர் மொத்தமாக 87 தேர்வுத் துடுப்பாட்டங்களிலும், 262 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பாக்கித்தான் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.[5]

இவர் பின் ஊசலாடும் பந்துகளை விரைவாக வீசுவதின் மூலம் பரவலாக அறியப்படுகிறார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 373 இலக்குகளும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 416 இலக்குகளையும் வீழ்த்தினார்.[6] இவர் வசீம் அக்ரம் போன்ற பந்துவீச்சாளர்களுடன் இணைந்து பந்துவீசினார்.[7] இவர்களின் காலத்தில் சிறந்த பந்துவீச்சு வீரர்களைக் கொண்ட அணியாக பாக்கித்தான் அணி இருந்தது.[7] 350 போட்டிகளுக்கு மேல் விளையாடியவர்களுள் டேல் ஸ்டெய்னிற்கு அடித்த படியாக சிறந்த ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார்.[8]ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மிகக் குறைநத வயதில் 400 இலக்குகளை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார்.[9]

2006 முதல் 2007 ஆம் ஆண்டு வரை தலைமைப் பந்துவீச்சு பயிற்சியாளராக பனிபுரிந்தார்[10]. மார்ச் 3, 2010 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.[11][12] சில சொந்த காரணங்களுக்காக ஆகஸ்டு 19, 2011 இல் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார்.[13][14] 2013 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார்.[15]

சர்வதேச போட்டிகள்[தொகு]

நவம்பர் 16, 1989 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டித் தொடரில் இவர் அறிமுகமானார். இதே போட்டியில் தான் சச்சின் டெண்டுல்கர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ் உள்ளிட்ட 4 இலக்குகளை வீழ்த்தினார்.[16] இந்தப் பந்துவீச்சின் மூலம் பாக்கித்தான் ஊடகங்கள் இவரை விக்கி எனவும் பியூர்வால எக்ஸ்பிரஸ் எனவும் அழைத்தனர்.[17] இவர் பெரும்பாலும் வசீம் அக்ரமுடன் இனைந்து துவக்க ஓவர்கள் வீசினர். இவர்களின் காலத்தில் மிக அச்சுறுத்தலான பந்துவீச்சு இணையாக இவர்கள் கருதப்பட்டார்கள்.[18] 1994 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் ஹேட்ரிக் இலக்குகளை வீழ்த்தினார்.[19] பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்த வசீம் அக்ரமுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் சில குற்றச்சாட்டுகளினாலும் 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.[20][21]

சான்றுகள்[தொகு]

 1. "Waqar Younis Profile - ICC Ranking, Age, Career Info & Stats". பார்த்த நாள் 25 April 2018.
 2. "Waqar Younis inducted into the ICC Cricket Hall of Fame". ICC Cricket (11 December 2013). மூல முகவரியிலிருந்து 7 November 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் April 25, 2018.
 3. "Waqar Younis haven given his second term on". ESPNcricinfo (6 May 2014). பார்த்த நாள் 8 May 2014.
 4. "Records / Test matches / Individual records (captains, players, umpires) / Youngest captains". ESPNcricinfo (21 April 2012). பார்த்த நாள் 21 April 2012.
 5. "Waqar Younis". ESPNcricinfo (21 April 2012). பார்த்த நாள் 21 April 2012.
 6. "The king of reverse swing". ESPNcricinfo. 8 April 2004. http://www.espncricinfo.com/magazine/content/story/134276.html. பார்த்த நாள்: 22 April 2012. 
 7. 7.0 7.1 "Waqar brings down the curtain". ESPNcricinfo. 12 April 2004. http://www.espncricinfo.com/pakistan/content/story/134349.html. பார்த்த நாள்: 21 April 2012. 
 8. "Records / Test matches / Bowling records / Best career strike rate". ESPNcricinfo (21 April 2012). பார்த்த நாள் 21 April 2012.
 9. "Ask Steven – Youngest to reach wickets' milestiones". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/magazine/content/story/1061149.html. 
 10. "Waqar Younis appointed bowling and fielding coach". ESPNcricinfo (9 December 2009). பார்த்த நாள் 21 April 2012.
 11. "Waqar Younis signs as Pakistan coach". ESPNcricinfo (3 March 2010). பார்த்த நாள் 21 April 2012.
 12. "PCB confirms Waqar as coach". ESPNcricinfo (6 March 2010). பார்த்த நாள் 21 April 2012.
 13. "Waqar Younis resigns as Pakistan coach". ESPNcricinfo (20 August 2011). பார்த்த நாள் 21 April 2012.
 14. "Waqar Younis resigns as Pakistan coach". espnstar.com (20 August 2011). பார்த்த நாள் 21 April 2012.
 15. "Waqar joins Sunrisers as bowling coach". Wisden India. 8 March 2013. http://www.wisdenindia.com/cricket-news/waqar-joins-sunrisers-bowling-coach-2/53896. 
 16. "Champions Trophy – 2nd match". ESPNcricinfo (14 October 1989). பார்த்த நாள் 21 April 2012.
 17. "Cricket World Cup 2003 – Waqar Younis". BBC SPORT. 15 January 2007. http://news.bbc.co.uk/sport3/cwc2003/hi/team_pages/pakistan/player_profiles/default.stm. பார்த்த நாள்: 21 April 2012. 
 18. "Greatest Partnerships – Deadly duos". ESPNcricinfo (15 December 2011). பார்த்த நாள் 21 April 2012.
 19. "Mandela Trophy – 11th match". ESPNcricinfo (19 December 1994). பார்த்த நாள் 21 April 2012.
 20. "Mudassar: Wasim and Waqar rivalry undermined Pakistan cricket". ESPNcricinfo (15 September 2003). பார்த்த நாள் 21 April 2012.
 21. "The days of Waqar vs Wasim". PakPassion (21 June 2008). பார்த்த நாள் 21 April 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வக்கார்_யூனிசு&oldid=2714477" இருந்து மீள்விக்கப்பட்டது