டிரெவர் பெய்லிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டிரெவர் பெய்லிஸ் (Trevor Harley Bayliss, பிறப்பு: டிசம்பர் 21, 1962) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளர் ஆவார்[1]. இவர் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநில அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரரும் அவ்வணியின் முன்னாள் பயிற்சியாளரும் ஆவார்[2].

பயிற்சியாளராக[தொகு]

நியூ சவுத் வேல்ஸ் மாநில அணிக்காக விளையாடிய பின்னர் மாநில துடுப்பாட்டக் கழகத்தின் திட்டமிடல் அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் நியூ சவுத் வேல்ஸ் மாநில இரண்டாவது XI அணியின் பயிற்சியாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 2004-2005 காலப்பகுதியில் மாநில அணிப் பயிற்சியாளராகி, பியூரா கிண்ணத் தொடரில் அவ்வணியை இறுதிப் போட்டி வரை தயார்ப்படுத்தியிருந்தார். இறுதிப் போட்டியில் குயின்ஸ்லாந்து அணியொடம் ஒரு விக்கெட்டால் நியூ சவுத் வேல்ஸ் அணி தோற்றது. அடுத்த ஆண்டில் ஐஎன்ஜி கிண்ணத்தை வென்றது[3].

2007 இல் இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்த ஆத்திரேலியாவின் டொம் மூடி அப்பதவியில் இருந்து விலகவே பெய்லிஸ் இலங்கை அணியின் பயிற்சியாளராக ஆகத்து 2007 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். குயின்ஸ்லாந்து புல்ஸ் அணியின் பயிற்சியாளர் டெரி ஒலிவர் இவருடன் இப்பணிக்காகப் போட்டியிட்டார். முன்னாள் இலங்கை அணி வீரர்கள் அரவிந்த டி சில்வா, ரஞ்சன் மடுகல்ல, மைக்கல் திசேரா, சிடத் வெத்திமுனி, பந்துல வர்ணபுர ஆகியோரைக் கொண்ட தெரிவுக் குழு டிரெவர் பெய்லிசைத் தெரிவு செய்தது.[2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரெவர்_பெய்லிஸ்&oldid=2215028" இருந்து மீள்விக்கப்பட்டது