திமுத் கருணாரத்ன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திமுத் கருணாரத்ன
Dimma.jpg
இலங்கை இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் திமுத் மதுசாங்க கருணாரத்ன
பட்டப்பெயர் Dimma
உயரம் 6 ft 0 in (1.83 m)
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை இடது கை
பந்துவீச்சு நடை வலது கை மிதவேகம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு 17 நவம்பர், 2012: எ நியூசிலாந்து
கடைசித் தேர்வு 3-7 சனவரி, 2015: எ நியூசிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 146) 9 சூலை, 2011: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி 29 சனவரி, 2015:  எ நியூசிலாந்து
சட்டை இல. 21
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2008–இன்று சிங்களவர் விளையாட்டுக் கழகம்
2009 பஸ்னாகிரா வடக்கு
2010-இன்று வடமேல் மாகாணம்
தரவுகள்
தேர்வுஒ.நாமு.தப.அ
ஆட்டங்கள் 60 23 86 95
ஓட்டங்கள் 4074 447 5,988 2,656
துடுப்பாட்ட சராசரி 36.05 26.29 46.78 31.24
100கள்/50கள் 8/22 0/4 19/25 3/16
அதிகூடியது 196 97 210* 120
பந்துவீச்சுகள் 231 10 241 22
விக்கெட்டுகள் 2 0 0 2
பந்துவீச்சு சராசரி 69 - - 16.00
5 விக்/இன்னிங்ஸ் - - 0
10 விக்/ஆட்டம் - - 0
சிறந்த பந்துவீச்சு 1/12 - - 2/13
பிடிகள்/ஸ்டம்புகள் 11/– 3/0 93/1 45/–

June 28, 2019 தரவுப்படி மூலம்: ESPN Cricinfo

பிராங் திமுத் மதுசாங்க கருணாரத்ன (Frank Dimuth Madushanka Karunaratne, சிங்களம்: දිමුත් කරුණාරත්න, பிறப்பு: ஏப்ரல் 21, 1988, கொழும்பு), இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மட்டையாளர். இடக்கை மட்டையாளரான இவர் தேர்வுப் போட்டிகளிலும், பன்னாட்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறார். முதல்தரப் போட்டிகளில் சிங்களவர் விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடி வருகிறார்.[1]

சர்வதேச போட்டிகள்[தொகு]

2012 ஆம் ஆண்டில் காலி பன்னாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். திலகரத்ன டில்சான் காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவரின் முதல் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 50 ஓட்டங்கள் அடித்தார்.[2] மேலும் வெற்றிக்கான இலக்கையும் இவர் அடித்தார். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்று தேர்வுத் துடுப்பாட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். முதல் இரண்டு போட்டிகளில் ஆத்திரேலிய விரைவு வீச்சாளர்களை இவரால் எதிர்கொள்ள இயலாமல் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 85 ஓட்டங்கள் எடுத்தார். இதுதான் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவரது அதிகபட்ச ஓட்டங்களாகும்.

டிசம்பர் 24, 2014 இல் கிறைஸ்ட்சேர்ச்சில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். இந்தப் போட்டியில் 363 பந்துகளில் 152 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது.

2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் 15 பேர்கொண்ட அணியில் இவர் இடம்பிடித்தார். ஆனால் பயிற்சிப் போட்டியில் இவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதனால் இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்குப் பதிலாக குசல் பெரேரா இடம்பெற்றார்.[3]

கண்டியில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் தனது இரண்டாவது நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். இந்த அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 133 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியிலும் இலங்கை அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2015 ஆம் ஆண்டில் காலி பன்னாட்டு அரங்கத்தில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் போட்டியில் 186 ஓட்டங்கள் அடித்து மார்லன் சாமுவேல்சு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மேலும் தினேஸ் சந்திமலுடன் இணைந்து 238 ஓட்டங்கள் அடித்தார். இதன்மூலம் காலி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் 3 ஆவது இணைக்கு எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் எனும் சாதனை படைத்தனர். இந்தப் போட்டியில் இலங்கை அணி ஒரு ஆட்டப் பகுதி மற்றும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் அ அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அ அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.[4] மேலும் மட்டையாட்டத்தின் முதல் ஆட்டப் பகுதியில் 131 ஓட்டங்களும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 39* ஓட்டங்களும் எடுத்தார். இந்தப் போட்டியில் இலஙகை அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[5][6] இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் அக்டோபர், 2016 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவருக்குஇடம் கிடைத்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திமுத்_கருணாரத்ன&oldid=2900627" இருந்து மீள்விக்கப்பட்டது