எலும்பு முறிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலும்பு முறிவு
கூட்டு முறிவான ஒரு கையின் உட்புற தோற்றமும் வெளிப்புற தோற்றமும், அறுவைசிகிச்சைக்கு முன்னும் பின்னும்.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஎலும்பியல்
ஐ.சி.டி.-10Sx2 (இதில் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்துக்கேற்ப x=0-9)
ஐ.சி.டி.-9829
நோய்களின் தரவுத்தளம்4939
ம.பா.தD050723

எலும்பு உடைதல் அல்லது கீறலுறுதல் எலும்பு முறிவு (இலங்கை வழக்கு: என்பு முறிவு) எனப்படும். விபத்தினால் எலும்பு முறிவு அல்லது எலும்புகளில் காயம் படுதல் போன்றவை இன்றைய தொழில் வளர்ச்சி பெற்ற நாளில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. மேலும், உலகமெங்கும் விபத்துக்கள் உயிர்கொல்லி நிகழ்வு களாகியுள்ளன. கி.மு. 14ம் நூற்றாண்டில், ஹிப்போகிரட்ஸ் கை, கால்களில் எலும்பு முறிவு சிகிச்சை பற்றி விளக்கினார். இந்தியாவில், இன்றும் பாரம்பரியமாக எலும்பு முறிவிற்குச் சிகிச்சையளிப்பவர்கள் உள்ளனர். எலும்பு முறிவிற்கு நவீனக் காலச் சிகிச்சையும் உள்ளன. இவைகள் அறிவியல் சார்ந்த, நேர்த்தியான சிகிச்சைகளாகும்.

ஆலம்பால் தைலம்(Alampal oil)

ஆலம்பால் நல்லெண்ணெய் தெற்றி வேர் நன்னாரி வேர் சிவதை வின் பிசின் இவற்றை பொடி செய்து தைல பதமாக காட்சி தடவி வர அடிபட்ட காயம் வீக்கம் வேதனை எலும்பு முறிவு போன்றவற்றிற்கு பயன்படுகிறது


எலும்பு முறிவின் வகைகள்[தொகு]

பச்சைக் கொம்பு முறிவு[தொகு]

இவ்வகை எலும்பு முறிவு குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. இதில் முறிவு முழுமையற்றதாகவும், கார்டெக்சின் ஒரு பகுதி ஒட்டிய நிலையிலும் காணப்படும்.

மூடிய முறிவு[தொகு]

இவ்வகை முறிவினால் ஏற்படும் இரத்தக் கட்டு வெளியில் காணப்படுவதில்லை.

திறந்த முறிவு[தொகு]

இவ்வகை முறிவினால், ஏற்படும் இரத்தக் கட்டு, திறந்த காயத்தின் வழியாக வெளியில் நன்கு தெளிவாகக் காணப்படும். இது ஒரு மிக மோசமான காயம். இதன் வழியாகக் கேடு விளைவிக்கும் கிருமிகள் உடலிற்குள் நுழையும் அபாயம் உண்டு.

நோய்நிலை முறிவு[தொகு]

மெலிந்த எலும்புகளில் ஏற்படும் ஒரு சிறிய மோதல், இம்முறிவிற்குக் காரணமாகிறது. இது ஹைபர் பாராதைராய்டிசத்தின் விளைவால் ஏற்படுகிறது.

அழுத்த முறிவு[தொகு]

தொடர்ச்சியாக, நீண்ட காலத்திற்கு, எலும்பின் ஓரிடத்தில் ஏற்படும் அழுத்தம், இவ்வகை முறிவிற்குக் காரணமாகும்.

பிறப்பு முறிவு[தொகு]

குழந்தை பிறக்கும் தருவாயில், குழந்தையின் உடலில் ஏற்படும் முறிவு, பிறப்பு முறிவு எனப்படும்.

எலும்பு முறிவு ஏற்படும் விதம்[தொகு]

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எலும்பின் மீது ஏற்படும் மோதலே எலும்பு முறிவிற்குக் காμணமாகும். நேரடி மோதலினால், எந்த இடத்தில் மோதல் நடைபெறுகிறதோ அந்த இடத்தில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. மறைமுக மோதலினால், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு, மோதலினால் ஏற்பட்ட அழுத்தம் கடத்தப்பட்டு வேறு இடத்தில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. எலும்பின் மீது ஏற்படும் சுழற்சி அல்லது எலும்பின் திருகல்,சரிவான (oblique) எலும்பு முறிவை ஏற்படுத்துகிறது. எலும்பு முறிவு எவ்வாறு ஏற்பட்டது என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதன் மூலம், எலும்பு முறிவுப் பகுதி மேலும் மோசமாகாமல் தடுக்க முடியும். ஒருவர் தென்னை மரத்திலிருந்தோ அல்லது உயரமான கட்டிடத்திலிருந்தோ கீழே விழுந்தால் எலும்புகளில் முறிவு ஏற்படும். இதில் ஏற்படும் எலும்பு முறிவு நேரடியாக ஏற்பட்டது. இதன் பக்க விளைவாக முதுகெலும்புத் தொடரில் ஏற்படும் எலும்பு முறிவு மறைமுக மோதலினால் தோன்றியதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலும்பு_முறிவு&oldid=3655281" இலிருந்து மீள்விக்கப்பட்டது