குசல் பெரேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குசல் பெரேரா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மதுரகே டொன் குசல் ஜனித் பெரேரா
பிறப்பு17 ஆகத்து 1990 (1990-08-17) (அகவை 33)
களுபோவிலை, இலங்கை
உயரம்5 அடி 6 அங் (1.68 m)
மட்டையாட்ட நடைஇடக்கை
பங்குகுச்சக் காப்பாளர்-மட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம்சனவரி 13 2013 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாபசூலை 12 2014 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப சட்டை எண்8
இ20ப அறிமுகம் (தொப்பி 48)சனவரி 26 2013 எ. ஆத்திரேலியா
கடைசி இ20பமே 20 2014 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
வயம்பா துடுப்பாட்ட அணி
2013 – இன்றுராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 8)
ருகுணை துடுப்பாட்ட அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை 1நா இ20ப 1த பஏ
ஆட்டங்கள் 33 18 36 72
ஓட்டங்கள் 736 521 2,524 1,694
மட்டையாட்ட சராசரி 26.28 28.94 46.74 28.23
100கள்/50கள் 1/3 0/5 7/8 1/11
அதியுயர் ஓட்டம் 106 84 336 155
வீசிய பந்துகள் -
வீழ்த்தல்கள் -
பந்துவீச்சு சராசரி -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
-
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
-
சிறந்த பந்துவீச்சு -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/0 5/– 64/14 52/22
மூலம்: ESPN Cricinfo

குசல் பெரேரா (சிங்களம்: කුසල් පෙරේරා, Kusal Perera; பிறப்பு: ஆகத்து 17, 1990) இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 36 முதல்தரப் போட்டிகளில் வயம்பா துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார்.[1] தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் ஆத்திரேலிய அணிக்கு எதிராக 2013 சனவரி 13 இல் தினேஸ் சந்திமல்லின் இடத்துக்கு விளையாடினார்.

கொட்டாவை தர்மபால வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற பெரேரா[2] பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றார். ரோயல் கல்லூரி அணியிலும் இவர் விளையாடியுள்ளார்.[3] ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளிலும் இவர் விளையாடியுள்ளார். இவர் தனது முதல்தரப் போட்டி ஒன்றில் 270 பந்துகளை எதிர்கொண்டு 330 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

பெரேரா தனது முதலாவது நூறாவது ஓட்டத்தை 2014 பெப்ரவரி 22 இல் வங்காளதேச அணிக்கு எதிராக விளையாடிப் பெற்றார். 124 பந்துகளை எதிர்கொண்டு 106 ஓட்டங்களைப் பெற்றார்.

சிறந்த பங்களிப்புகள்[தொகு]

துடுப்பாட்டம்
ஓட்டங்கள் விளையாட்டு இடம் காலம்
முத 336 கோல்ட்சு எதிர் சராசென்சு கோல்ட்சு துடுப்பாட்ட அரங்கு 2013
1நாள் 106 இலங்கை எ. வங்காளதேசம் டாக்கா துடுப்பாட்ட அரங்கு, டாக்கா 2014
இ20 66 இலங்கைவங்காளதேசம் முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை 2013
இ20 57 இலங்கை எ. நியூசிலாந்து முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை 2013
இ20 84 இலங்கை எ. பாக்கித்தான் டிஎஸ்ஈ துடுப்பாட்ட அரங்கு, துபாய் 2013

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kushal Janith Perera". ESPNcricinfo. ESPN Inc. பார்க்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "The new 'Master Blaster' in the cricket arena". Archived from the original on 2013-12-27. பார்க்கப்பட்ட நாள் 2014-07-26.
  3. "Kusal shines as Royal regain Mustangs Trophy". Archived from the original on 2013-12-27. பார்க்கப்பட்ட நாள் 2014-07-26.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குசல்_பெரேரா&oldid=3550292" இலிருந்து மீள்விக்கப்பட்டது