உள்ளடக்கத்துக்குச் செல்

காலி பன்னாட்டு அரங்கம்

ஆள்கூறுகள்: 6°01′53.19″N 80°12′58.78″E / 6.0314417°N 80.2163278°E / 6.0314417; 80.2163278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலி பன்னாட்டு அரங்கம்
எசுபிளனாடே
கட்டுமானம் முடுயுமுன்னர் அரங்கம்
அரங்கத் தகவல்
அமைவிடம்காலி, இலங்கை
ஆள்கூறுகள்
உருவாக்கம்1876
உரிமையாளர்காலி துடுப்பாட்டக் கழகம்
குத்தகையாளர்இலங்கை துடுப்பாட்டம்
காலி துடுப்பாட்டக் கழகம்
முடிவுகளின் பெயர்கள்
நகர முனை
கோட்டை முனை
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வுஜூன் 3 1998:
 இலங்கை நியூசிலாந்து
கடைசித் தேர்வுAugust 3 2008:
 இலங்கை இந்தியா
முதல் ஒநாபஜூன் 25 1998:
 இலங்கை இந்தியா
கடைசி ஒநாபஜூலை 6 2000:
 இலங்கை தென்னாப்பிரிக்கா
அணித் தகவல்
காலி துடுப்பாட்டக் கழகம் (? முதல் தற்போது வரை)
28 ஏப்ரல் 2009 இல் உள்ள தரவு
மூலம்: Cricinfo

காலி பன்னாட்டு அரங்கம் தென் இலங்கையின் காலி மாநகரில் அமைந்துள்ள ஒரு துடுப்பாட்ட அரங்கமாகும். இதன் ஒரு பக்கத்தில் காலி கோட்டையும் மற்ற இரு புறமும் இந்தியப் பெருங்கடலும் அமைந்துள்ளது. இது உலகிலுள்ள அழகான துடுப்பாட்ட அரங்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காலி துடுப்பாட்டக் கழகத்தின் இல்ல அரங்கமாக இவ்வரங்கம் காணப்படுகிறது.

வரலாறு

[தொகு]

இந்த மைதானமானது, 1876 ஆம் ஆண்டு, குதிரைப் பந்தயத்திடலாக நிர்மாணிக்கப்பட்டது. 1872 ஆம் வரையிலும் எந்தவகையான நிரந்தரமான பார்வை அரங்குகளும் இங்கு காணப்படவில்லை. காலி நகராட்சி மன்றத்தின் செயலாளராயிருந்த திருவாளர், பீ.ஏ. டெம்லரின் ஆலோசனையின் பேரில், "கிரான்ட் ஸ்டான்ட்" என்ற பார்வையாளர் அரங்கு நிர்மாணம் செய்யப்பட்டது. இருந்த போதிலும், இந்த மைதானத்தில் குதிரைப் பந்தய ஓட்டங்கள் நடைபெறுவது இடைநிறுத்தப்பட்டதோடு, மாறாக கிரிக்கெட் விளையாடுதல் இடம்பெற்றது. 1927 ஆம் உத்தியோகபூர்வமாக இது கிரிக்கெட் அரங்கமாக அறிவிக்கப்பட்டது.

1984 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29 ஆம் நாள் இந்த மைதானத்தில் முதற்தர கிரிக்கெட் ஆட்டங்கள் இடம்பெற்றன. காலி கிரிக்கெட் மைதானத்தின் அந்தநாள் செயலாளராயிருந்த திருவாளர். தனபால லோரண்சு அவர்களின் வழிகாட்டலின் பேரில், அரங்கத்தில் பசும் புற்தரை ஆடுகளம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதற்காக கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் உதவிகளும் பெற்றுக் கொள்ளப்பட்டன[1].

பின்னர் இம்மைதானமானது, சர்வதேச கிரிக்கெட் அமைவுகளுக்கேற்ப தரமுயற்றப்பட்டு, கிரிக்கெட் தேர்வு போட்டிகளை இடம்பெறக்கூடிய இலங்கையின் ஏழாவது கிரிக்கெட் அரங்கமாக உருவானது. முதல் தேர்வு ஆட்டமானது, 1998 ஆம் ஆண்டு, யூன் மாதம் முதலாவது தேர்வுப் போட்டி இடம்பெற்றது. இது நியூஸிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெற்றது. இதில், இலங்கை அணி ஒரு இனிங்சினாலும், 16 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றது. முதல் ஒருநாள் சர்வதேச போட்டியானது, 1998 ஆம் ஆண்டு, யூன் மாதம் 25 ஆம் திகதி, இந்திய அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் நடைபெற ஒழுங்காகி இருந்தபோதும், அடை மழையின் காரணமாக அரங்கத்தின் ஆடுகளத்தில் நீர்தேங்கி நின்றதன் காரணத்தால் அப்போட்டி கைவிடப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. காலி கிரிக்கெட் அரங்கத்தின் வரலாறு[தொடர்பிழந்த இணைப்பு] - (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலி_பன்னாட்டு_அரங்கம்&oldid=3804695" இலிருந்து மீள்விக்கப்பட்டது