உள்ளடக்கத்துக்குச் செல்

மார்லன் சாமுவேல்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்லன் சாமுவேல்சு
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மார்லன் நாதனியல் சாமுவேல்சு
பிறப்பு5 பெப்ரவரி 1981 (1981-02-05) (அகவை 43)
கிங்ஸ்டன்,ஜமைக்க
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத் திருப்பம்
பங்குசகலத் துறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 237)15 டிசம்பர் 2000 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு30 அக்டோபர் 2016 எ. பாக்கித்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 103)4 அக்டோபர் 2000 எ. இலங்கை
கடைசி ஒநாப25 மார்ச் 2018 எ. ஆப்கானித்தான்
இ20ப அறிமுகம் (தொப்பி 15)28 சூன் 2007 எ. இங்கிலாந்து
கடைசி இ20ப3 ஏப்ரல் 2018 எ. பாக்கித்தான்
இ20ப சட்டை எண்7
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1996–ஜமைக்கா துடுப்பாட்ட அணி
2011–2013துரண்டோ
2012–2013புனே வாரியர்சு
2012–2013மெல்போர்ன்
2013–2014அன்டிகுவா ஹாக்ஸ்பில்ஸ்
2017-பெசாவர் சல்மி
2017-லீவர்டு ஐலாந்து
2017-செயிண்ட் லூசியா ஸ்டார்ச்
2017டெல்லி டேர்டெவில்ஸ் (squad no. 77)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வுத் துடுப்பாட்டம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் பன்னாட்டு இருபது20 அ பிரிவு
ஆட்டங்கள் 71 199 63 247
ஓட்டங்கள் 3,917 5,472 1,530 6,887
மட்டையாட்ட சராசரி 32.64 33.78 30.00 34.43
100கள்/50கள் 7/24 10/30 0/10 12/41
அதியுயர் ஓட்டம் 260 133* 89* 133*
வீசிய பந்துகள் 4,392 5,009 479 6,769
வீழ்த்தல்கள் 41 85 22 129
பந்துவீச்சு சராசரி 59.63 47.53 28.27 40.44
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 4/13 3/25 3/23 4/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
28/– 50/– 12/– 66/–
மூலம்: Espncricinfo, 15 மார்ச் 2018

மார்லன் நாதனியல் சாமுவேல்சு (Marlon Nathaniel Samuels (பிறப்பு:5 பெப்ரவரி ,1981) என்பவர் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் முன்னாள் தலைவர் ஆவார். இவர் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் இந்த அணிக்காக விளையாடி வருகிறார். 2012 ஐசிசி உலக இருபது20 மற்றும் 2016 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரின் கோப்பைகளை வெல்வதற்கு மிகமுக்கிய நபராகத் திகழ்ந்தார். இந்த இரண்டுப் போட்டித் தொடர்களிலும் ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றுள்ளார்.

2000 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். மேலும் நைரோபியில் நடைபெற்ற ஐசிசி நாக் அவுட் கோப்பைக்கான போட்டியில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.

2013 ஆம் ஆண்டில் சிறந்த வீரர்களுள் ஒருவராக இவரை விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது.[1] கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்.[2] 2016 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் மற்றும் ஆண்டின் சிறந்த வீரர் விருதினை மேற்கிந்தியத் துடுப்பாட்ட வாரியம் வழங்கியது.[3]

சர்வதேச போட்டிகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

2000 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .டிசம்பர் 15, அடிலெடுவில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 92 பந்துகளில் 35 ஓட்டங்களை எடுத்து மில்லர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பந்துவீச்சில் 19 ஓவர்கள் வீசி 42 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.இதில் 6 ஓவர்களை மெய்டனாக வீசினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 26 பந்துகளில் 3 ஓட்டங்கள் எடுத்து மெக்கில் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் 6 ஓவர்கள் வீசி 17 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார் ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.இதில் ஓவர்களை மெய்டனாக வீசினார். இந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி 95 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[4]

2002 -2003 ஆம் ஆண்டுகளில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடந்த தேர்வுத் துடுப்பாட்டத்தில் தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். இந்தத் தொடரின் இந்திய அணியில் ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய பந்துவீச்சாளர்கள் இருந்தனர். இந்தப் போட்டியில் 104 ஓட்டங்கள் எடுத்து போட்டி சமனில் முடிய உதவினார். இதே அணிக்கு எதிராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இந்தத் தொடர் 3-3 எனும் சமநிலையில் இருந்தது. பின் இறுதிப் போட்டியானது நவம்பர் 24, 2002 இல் விசயவாடாவில் நடந்தது. இந்தப் போட்டியில் 75 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்கள் எடுத்து அணியின் மொத்த ஓட்டம் 315 ஆவதற்கு உதவினார். 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது. 2005 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இரு தேர்வுத் துடுப்பாட்டங்களில் விளையாடினார். ஆனால் சரியான திறனை வெளிப்படுத்த இயலவில்லை அதிகபட்சமாக 25 ஓட்டங்களையே எடுத்தார். பின் கனுக்காலில் ஏற்பட்ட காயத்தினால் அவர் நாடு திரும்பினார்.[5]

2016 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .அக்டோபர் 30 இல் சாரா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 10 பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் யாசிர் ஷா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இரண்டாவது ஆட்டப் பகுதியில் 25 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுத்து யாசிர் ஷா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 இலக்குகளால் வெற்றி பெற்றது.[6]

ஒருநாள் போட்டிகள்[தொகு]

2000 ஆம் ஆண்டில் பன்னட்டுத் துடுப்பாட்ட அவை வாகையாளர் கோப்பைக்கான தொடரின் தகுதிச் சுற்றுப் இவர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமனார்.அக்டோபர் 4 இல் நைரோபியில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானர். இந்தப் போட்டியில் 32 பந்துகளில் 19 ஓட்டங்களில் எடுத்து விக்கிரமசிங்கே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் ஆறு ஓவர்களை வீசி 30ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் இலங்கை அணி 108 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

2018 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. டிசம்பர் 14 இல் சியல்ஹோட்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் மூன்றாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இருதியாக விளையாடினார். இந்தப் போட்டியில் 32 பந்துகளில் 19 ஓட்டங்களில் எடுத்து முகமது சைபுதீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் நான்கு ஓவர்களை வீசி 25 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் வங்காளதேச அணி 8 இலக்குகளால் வெற்றி பெற்றது.[7]

பன்னாட்டு இருபது20[தொகு]

2007 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. சூன் 28 இல் ஓவலில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார். அந்தப் போட்டியில் 26 பந்துகளில் 51 ஓட்டங்களில் எடுத்து சைட் பாட்டம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நான்கு ஓவர்கள் வீசி 52 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 15 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[8]

சாதனைகள்[தொகு]

பன்னாட்டு இருபது20 போட்டியில் சிறப்பாக விளையாடியதற்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் இரு விருதினைப் பெற்ற முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் பன்னாட்டு இருபது20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் 50 ஓட்டங்கள் மற்றும் 1 இலக்குகள் வீழ்த்திய இரண்டவது நபர் எனும் சாதனை படைத்தார்.[9] இதற்கு முன் சாகித் அஃபிரிடி இந்தச் சாதனையைப் புரிந்தார். பன்னாட்டு இருபது20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். 82 ஓட்டங்கள் எடுத்து இந்தச் சாதனையைப் புரிந்தார். மேலும் 2016 ஐசிசி உலக இருபது20 இறுதிப் போட்டியில் இரண்டாவதாக விளையாடியவர்களில்(சேசிங்) அதிக ஓட்டங்கள் எனும் சாதனையையும் படைத்தார்.[10][11] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் கிறிஸ் கெயிலுடன் இணைந்து 372 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் 2 வது இணைக்கு அதிக ஓட்டங்கள் சேர்த்தவர்கள், துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் ஒரு இணையின் அதிகபட்ச ஓட்டங்கள் மற்றும் அ பிரிவு ஆட்டங்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள் ஆகிய சாதனையைப் படைத்தனர்.[12][13][14][15][16]

சான்றுகள்[தொகு]

 1. "ஜாக் கலிஸ், அசீம் அம்லா, டெயில் ஸ்டெய்ன், சாமுவேல்ஸ் ஆகியோர் விசுடன் வீரர்கள்". விசுடன் இந்தியா. 10 ஏப்ரல் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-04-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130416211548/http://www.wisdenindia.com/cricket-news/kallis-amla-steyn-named-wisden-cricketers-year/57807. 
 2. http://cplt20.com/news/caribbean-premier-league-announces-exciting-plans-tournament
 3. "Samuels named West Indies Cricketer of the Year". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 July 2016.
 4. "முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி". ஈ எஸ் பி என் கிரிக் இன்ஃபோ. அக்டோபர் 13. {{cite web}}: Check date values in: |date= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)
 5. English, Peter (29 November 2005), Bravo and Ramdin provide the hope, ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 22 May 2005
 6. "இறுதிப்போட்டி எதிர் ஆத்திரேலியா". ஈஎஸ் பி என் கிரிக் இன்ஃபோ. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 7. "இறுதிப்போட்டி எதிர் வங்காளதேசம்". ஈஎஸ் பி என் கிரிக் இன்ஃபோ. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 8. "முதல் பான்னட்டு இருபது20 எதிர் வங்காளதேசம்". ஈஎஸ் பி என் கிரிக் இன்ஃபோ. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 9. "Samuels set records in World T20 finals". பார்க்கப்பட்ட நாள் 13 March 2017.
 10. "record holder Samuels". பார்க்கப்பட்ட நாள் 13 March 2017.
 11. "record holder Samuels cricinfo". பார்க்கப்பட்ட நாள் 13 March 2017.
 12. "Highest partnership for any wicket in World Cups". பார்க்கப்பட்ட நாள் 28 March 2017.
 13. "Highest partnership for 2nd wicket in World Cups". பார்க்கப்பட்ட நாள் 28 March 2017.
 14. "Highest partnership for any wicket in ODI history". பார்க்கப்பட்ட நாள் 28 March 2017.
 15. "Highest partnership for 2nd wicket in ODI history". பார்க்கப்பட்ட நாள் 28 March 2017.
 16. "Highest partnership for any wicket in List A history". பார்க்கப்பட்ட நாள் 28 March 2017.

வெளியிணைப்புகள்[தொகு]

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: மார்லன் சாமுவேல்சு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்லன்_சாமுவேல்சு&oldid=3990817" இலிருந்து மீள்விக்கப்பட்டது