சுரங்க லக்மால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரங்க லக்மால்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரனசிங்க ஆரச்சிகே சுரங்க லக்மால்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர T20
ஆட்டங்கள் 16 21 3
ஓட்டங்கள் 121 14 1
மட்டையாட்ட சராசரி 8.64 4.66
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 25* 10* 1*
வீசிய பந்துகள் 2386 1026 70
வீழ்த்தல்கள் 57 30 4
பந்துவீச்சு சராசரி 29.29 28.83 22.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 5/78 5/31 2/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/– 7/– 0/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், மார்ச்சு 26 2009

ரனசிங்க ஆரச்சிகே சுரங்க லக்மால் (Ranasinghe Arachchige Suranga Lakmal,சிங்களம்: සුරංග ලක්මාල් பிறப்பு: மார்ச்சு 10, 1987), இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் வலது கை மட்டையாளர் மற்றும் வலது கை விரைவு வீச்சாளர் ஆவார்.

2008-2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்றார். பின் இலங்கைத் துடுப்பாட்ட அணி வீரர்கள் சென்ற பேருந்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இவர் காயமடைந்தார்.[1]

இவர் தமிழ் யூனியன் துடுப்பாட்ட சங்கத்திற்காக விளையாடி வருகிறார்.[1][2] மேலும் 2014 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் கோப்பைவென்ற இலங்கை அணியில் இடம்பிடித்திருந்தார்.அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு தேர்வான முதல் வீரர் இவர் ஆவார்.[3]

சர்வதேச போட்டிகள்[தொகு]

2009 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இதில் தில்ஹாரா ஃபெர்ணான்டோ காயம் காரணாமாக விலகியதால் இவருக்கு இடம் கிடைத்தது. இந்தத் தொடரில் நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 8 ஓவர்களை வீசி 58 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இந்தப் போட்டியில் இலக்கினைக் கைப்பற்றவில்லை[4]. பின் நவம்பர் 23, 2010 ஆர். பிரேமதாச அரங்கத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 114 ஆவது வீரராக அறிமுகமானார்.[5]

இந்தப் போட்டியில் இவர் வீசிய முதல் பந்தில் கிறிஸ் கெயிலின் இலக்கினை வீழ்த்தினார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் முதல் பந்திலேயே இலக்கினைக் கைப்பற்றிய நான்காவது வீரர் எனும் சாதனை படைத்தார். இதற்கு முன்பாக இந்தியத் துடுப்பாட்ட அணியின் கபில்தேவ் மற்றும் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இம்ரான் கான் ஆகியோர் முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தச் சாதனையைக் கைப்பற்றினார்.[6]

தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான துடுப்பாட்டத் தொடரில் இவருக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைத்தது.[7] இந்தத் தொடரின் முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.இதன்மூலம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 5 இலக்குகளைக் கைப்பற்றிய இரண்டாவது இலங்கை வீரர் எனும் சாதனை படைத்தார். இதற்குமுன்னதாக சானக்க வெலகெதர இந்தச் சாதனை படைத்தார்.இருந்தபோதிலும் இந்தப் போட்டியில் 206 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இந்தத் தொடரை முழுமையாக இலங்கைஅணி இழந்தது. இதன்முடிவில் 12 இலக்குகளை எடுத்து அதிக இலக்குகள் எடுத்த இலங்கை வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இவரின் பந்துவீச்சு சராசரி 30.83 ஆகும்.[8]

பெப்ரவரி 8,2018 இல் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தமீம் இக்பாலின் இலக்கினை வீழ்த்தினார்.இது அவரின் 100 ஆவது இலக்கு ஆகும். இதன்மூலம் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 100 இலக்குகளை வீழ்த்திய நான்காவது விரைவு வீச்சாளர் ஆவார்.[9] இதற்குமுன்னதாக சமிந்த வாஸ், லசித் மாலிங்க மற்றும் தில்லார பர்னான்டோ ஆகியோர் இந்தச் சாதனை படைத்தனர்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகள் வீழ்த்தியவ இலங்கை அணி வீரர்களின் தரவரிசையில் 6 ஆவது இடத்தில் உள்ளார்.[10]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Sri Lanka name two newcomers for Pakistan Tests". கிரிக்இன்ஃபோ. 2009-02-03. பார்க்கப்பட்ட நாள் 2009-03-26.
  2. "Suranga Lakmal". Cricinfo. 2009-02-03. பார்க்கப்பட்ட நாள் 2009-03-26.
  3. "Suranga Lakmal 1st national cricketer from Hambantota". The Nation. 2009-02-15. Archived from the original on 2015-01-28. பார்க்கப்பட்ட நாள் 2011-08-21.
  4. "India v Sri Lanka in 2009/10". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 19 December 2009.
  5. "Suranga Lakmal makes his Test debut". Island Cricket. Archived from the original on 22 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 1 December 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Bravo's 50 lifts WI to 134–2". BangaloreMirror.com. 1 December 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-12-05.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "Lakmal, a day in the life". The Nation. 2016-12-27. பார்க்கப்பட்ட நாள் 2016-12-27.
  8. "Records / Sri Lanka in South Africa Test Series, 2016/17 / Most wickets". ESPNcricinfo. 2017-01-12. பார்க்கப்பட்ட நாள் 2017-01-16.
  9. "Sri Lanka on top after 14-wicket first day". ESPNcricinfo. 2018-02-07. பார்க்கப்பட்ட நாள் 2018-02-07.
  10. "Sri Lanka/records//Test matches/Most wickets". ESPNcricinfo. 2018-02-07. பார்க்கப்பட்ட நாள் 2018-02-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரங்க_லக்மால்&oldid=3555107" இலிருந்து மீள்விக்கப்பட்டது