தமீம் இக்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமீம் இக்பால்
Tamim Iqbal Khan.jpg
வங்காளதேசம் வங்காளதேசம்
இவரைப் பற்றி
முழுப்பெயர் தமீம் இக்பால்கான்
பிறப்பு 20 மார்ச்சு 1989 (1989-03-20) (அகவை 30)
சிட்டாகொக், வங்காளதேசம்
உயரம் 5 ft 11 in (1.80 m)
துடுப்பாட்ட நடை இடதுகை
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 50) சனவரி 4, 2008: எ நியூசிலாந்து
கடைசித் தேர்வு சூன் 5, 2010: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 83) பிப்ரவரி 9, 2007: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 19, 2011:  எ இந்தியா
சட்டை இல. 29
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2004-இன்று சிட்டாகொக்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 19 90 40 104
ஓட்டங்கள் 1445 2,710 2,928 3,103
துடுப்பாட்ட சராசரி 40.13 30.11 40.66 29.83
100கள்/50கள் 4/8 3/17 6/20 4/18
அதிக ஓட்டங்கள் 151 154 151 154
பந்து வீச்சுகள் 24 6 132 6
இலக்குகள் 0 0 0 0
பந்துவீச்சு சராசரி
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு N/A 0/6
பிடிகள்/ஸ்டம்புகள் 8/– 25/– 20/– 32/–

பிப்ரவரி 21, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

தமீம் இக்பால்கான்: (Tamim Iqbal Khan, வங்காள: তামিম ইকবাল খান பிறப்பு: மார்ச்சு 20, 1989) வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரராவார்,மற்றும் முன்னாள் தேர்வுத் துடுப்பாட்டத் தலைவர் ஆவார். இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் , பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2007 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2008 ஆம் ஆண்டு முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடினார். இடதுகை மட்டையாளரான இவர் துவக்கவீரராக களம் இறங்குகிறார். வங்காளதேச சிறந்த மட்டையாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். டிசம்பர் 2010 முதல் செப்டம்பர் 2011 ஆம் ஆண்டு வரை இவர் அணியின் உதவித் தலைவராக இருந்துள்ளார். இவர் தேர்வுத் துடுப்பாட்டம் , பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆகிய மூன்று வடிவங்களிலும் நூறு ஓட்டங்கள் அடித்துள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் 10,000 ஓட்டங்களை அடித்துள்ளாஅர். இதன்மூலம் 10,000 ஓட்டங்கள் அடித்த முதல் வங்காளதேச வீரர் எனும் சாதனை படைத்தார்.[1] சனவரி 23 , 2018 இல் சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 6,000 ஓட்டங்களை எடுத்தார்.இது அந்த மைதானத்தில் இவர் எடுக்கும் 2, 515 ஆவது ஓட்டமாகும். இதன்மூலம் ஒரே மைதானத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன் சனத் ஜயசூரியா ஆர். பிரேமதாச அரங்கத்தில் 2,514 ஓட்டங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.[2][3] வங்காளதேச சிட்டாகொக் பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, ஆசிய லெவன் அணி, வங்காளதேச துடுப்பாட்ட ஏ அணி, வங்காளதேச 19இன் கீழ் அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

2008 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . சனவரி 4 இல் துனதினில் நடைபெற்ற நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[4] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 88 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்து மார்டினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 9 நான்குகள் அடங்கும். பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 128 பந்துகளில் 84 ஓட்டங்கள் எடுத்து மில்சின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 12 நான்குகள் மற்றும் 1 ஆறு அடங்கும்.இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 9 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[5]

2018 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது [4]. பெப்ரவரி 8 இல் தாக்காவில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 3 பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்து லக்மலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 1 நான்குகள் அடங்கும். பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 7 பந்துகளில் 2 ஓட்டங்கள் எடுத்து பெராராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 215 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[6]

சான்றுகள்[தொகு]

  1. "Tamim ton leads Bangladesh to 90-run win". International Cricket Council. பார்த்த நாள் 25 March 2017.
  2. "Tamim becomes first Bangladesh player to reach 6k ODI runs". The Daily Star. பார்த்த நாள் 23 January 2018.
  3. "Tamim's journey to 6000 ODI runs". பார்த்த நாள் 23 January 2018.
  4. 4.0 4.1 "Tamim Iqbal", Cricinfo, retrieved 2018-05-29
  5. "1st Test, Bangladesh tour of New Zealand at Dunedin, Jan 4-6 2008 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, retrieved 2018-05-29
  6. "2nd Test, Sri Lanka tour of Bangladesh at Dhaka, Feb 8-10 2018 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, retrieved 2018-05-29

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமீம்_இக்பால்&oldid=2754416" இருந்து மீள்விக்கப்பட்டது