சகீப் அல் அசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சகீப் அல் அசன்
Shakib Al Hasan (4) (cropped).jpg
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம்
இவரைப் பற்றி
முழுப்பெயர் சகீப் அல் அசன்
பிறப்பு 24 மார்ச்சு 1987 (1987-03-24) (அகவை 32)
மக்ருஆ, வங்காளதேசம்
வகை சகலதுறை
அணியின் தலைவர்
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை மந்த இடதுகை மரபுவழா சுழல்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 46) மே 18, 2007: எ இந்தியா
கடைசித் தேர்வு சூன் 4, 2010: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 81) ஆகத்து 6, 2006: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 19, 2011:  எ சிம்பாப்வே
சட்டை இல. 75
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2004–இன்று ககுள்ன
2010–இன்று வாசெஸ்ட்செயா
2011–இன்று கல்கத்தா நைட்ரைடர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 21 103 54 130
ஓட்டங்கள் 1,179 2,889 2,991 3,539
துடுப்பாட்ட சராசரி 31.02 35.23 32.86 33.07
100கள்/50கள் 1/5 5/18 4/14 5/23
அதிக ஓட்டங்கள் 100 134* 129 134*
பந்து வீச்சுகள் 5,083 5,300 10,706 6,415
இலக்குகள் 75 130 164 159
பந்துவீச்சு சராசரி 32.13 29.05 29.86 28.48
சுற்றில் 5 இலக்குகள் 7 0 12 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 7/36 4/33 7/36 4/30
பிடிகள்/ஸ்டம்புகள் 8/– 28/– 28/– 39/–

பிப்ரவரி 19, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

சகீப் அல் அசன் (Shakib Al Hasan, வங்காள: সাকিব আল হাসান, பிறப்பு: மார்ச் 24 1987) வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் முன்னாள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட தலைவர் ஆவார். இவர் ஏப்ரல், 2017 இல் பன்னாட்டு இருபது20 மற்றும் டிசம்பர் , 2017 இல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[1][2] இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். சிறப்பான மட்டையாடும் திறனுக்காகவும், சிக்கனமாகப் பந்துவீசுவதற்காகவும், சிறப்பான களத்தடுப்பிற்காகவும் இவர் பரவலாக அறியப்படுகிறார்.[3] அனைத்துக் காலத்திற்குமான சிறந்த வங்காளதேச துடுப்பாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். அனைத்து வடிவ துடுப்பாட்ட வடிவங்களுக்குமான சிறந்த சகலத் துறையர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 2015 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய அனைத்து வடிவங்களிலும் சகலத் துறையருக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தரவரிசையில் முதலிடம் பெற்ற முதல் வங்காளதேச துடுப்பாட்ட வீரர் மற்றும் முதல் சர்வதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[4][5][6] சிறிது காலம் தரவரிசையில் பின்தங்கிய இவர் விரைவில் மீண்டும் முதலிடம் பிடித்தார். சனவரி 13,2017 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 217 ஓட்டங்கள் எடுத்தார்.இதன்மூலம் தேர்வுத் துடுப்பாட்ட ஓட்டங்களில் அதிக ஓட்டங்கள் எடுத்த வங்காளதேச வீரர் எனும் சாதனை படைத்தார்.[7] 2017 ஐசிசி வாகையாளர் கோப்பையில் இவரும் மகமதுல்லாவும் இணைந்து 209பந்துகளில் 224 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தனர். இதன்மூலம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வங்காளதேச இணை மற்றும் வாகையாளர் கோப்பையின் இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்கள் சேர்த்த இணை எனும் சாதனைகளைப் படைத்தனர்.[8]

சர்வதேச போட்டிகள்[தொகு]

ஆகஸ்டு 6, 2006 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் சகீப் அல் அசன் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 300 ஓட்டங்களை எடுத்தார். மேலும் எல்டன் சிகும்புரா இலக்கினை பவுல்டு முறையில் வீழ்த்தினார்.[9] மே 6, 2006 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்ட்டியில் அறிமுகமானார். சனவரி 2009 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 2011 வரை மற்றும் மார்ச் 2012 முதல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கான சகலத் துறையர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார். டிசம்பர் 2011 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கான சகலத் துறையர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் அனைத்து வடிவங்களுக்கான தரவரிசையிலும் முதல் மூன்று இடத்திற்குள் இருக்கும் ஒரே வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.[10] 2008 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 36 ஒட்டங்கள் விட்டுக்கொடுத்து 7 இலக்குகளை வீழ்த்தினார். இதுதான் இவரின் தேர்வுப் போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சு ஆகும்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகள் எடுத்த வங்காளதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.

சான்றுகள்[தொகு]

  1. "Shakib confirmed as T20I captain". ESPNcricinfo. பார்த்த நாள் 22 April 2017.
  2. "Shakib named test captain".
  3. கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: சகீப் அல் அசன்
  4. "All Rounder Rankings". பார்த்த நாள் 27 October 2016.
  5. "Bangladesh's finest pursues greatness". பார்த்த நாள் 27 October 2016.
  6. "Bangladeshi Player Shakib Al Hasan named best all-rounder in all formats by ICC: Some interesting facts about the cricketer : Sports Arena". பார்த்த நாள் 27 October 2016.
  7. ICC Player Rankings, http://www.relianceiccrankings.com/playerdisplay/odi/all-rounder/?id=6740&graph=rating 
  8. [1]
  9. "Scorecard: Bangladesh tour of Zimbabwe, 5th ODI: Zimbabwe v Bangladesh at Harare, 6 August 2006", ESPNcricinfo, http://www.espncricinfo.com/ci/engine/match/249207.html 
  10. "Reliance ICC Rankings". Reliance ICC. பார்த்த நாள் 25 October 2013.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகீப்_அல்_அசன்&oldid=2714869" இருந்து மீள்விக்கப்பட்டது