காலிதா சியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலிதா சியா
Khaleda Zia
வங்காளதேச தேசியவாதக் கட்சியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
30 மே 1984
(39 ஆண்டுகள், 126 நாட்கள்)
முன்னவர் அப்துசு சத்தார்
வங்காளதேசத்தின் பிரதமர்
பதவியில்
10 அக்டோபர் 2001 – 29 அக்டோபர் 2006
குடியரசுத் தலைவர் சகாமுதீன் அகமது
பத்ருதோசா சவுத்திரி
லசுத்தீன் அகமது
முன்னவர் லத்திபுர் ரகுமான் (பதில்)
பின்வந்தவர் லசுத்தீன் அகமது (பதில்)
பதவியில்
20 மார்ச் 1991 – 30 மார்ச் 1996
குடியரசுத் தலைவர் சகாபுதீன் அகமது (பதில்)
முன்னவர் காசி சபார் அகமது
பின்வந்தவர் முகம்மது அபிபுர் ரகுமான் (பதில்)
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
29 டிசம்பர் 2008 – 9 சனவரி 2014
முன்னவர் சேக் அசீனா
பின்வந்தவர் ரவ்சான் எர்சாத்
பதவியில்
23 சூன் 1996 – 15 சூலை 2001
முன்னவர் சேக் அசீனா
பின்வந்தவர் சேக் அசீனா
தனிநபர் தகவல்
பிறப்பு காலிதா மசும்தர்
15 ஆகத்து 1945 (1945-08-15) (அகவை 78)
தினாச்பூர், பிரித்தானிய இந்தியா
(இன்றைய வங்காளதேசம்)
அரசியல் கட்சி வங்காளதேச தேசியவாதக் கட்சி (1979–இன்று)
பிற அரசியல்
சார்புகள்
நான்கு கட்சிக் கூட்டணி (2001–2011)
18 கட்சிக் கூட்டணி (2011–இன்று)
வாழ்க்கை துணைவர்(கள்) சியாவுர் ரகுமான் (1960–1981)
பிள்ளைகள் தாரிக் ரகுமான்
அரபாத் ரகுமான்
சமயம் சுன்னி இசுலாம்

பேகம் காலிதா சியா (Khaleda Zia, பஒஅ: kʰaled̪a dʒia; பிறப்பு 15 ஆகத்து 1945[1]), வங்காளதேச அரசியல்வாதி ஆவார். இவர் 1991 முதல் 1996 வரையிலும் பிறகு 2001 முதல் 2006 வரையிலும் வங்காளதேசத்தின் தலைமை அமைச்சராக இருந்தார். 1991ல் இவர் பதவியேற்ற போது, அந்நாட்டின் தலைமை அமைச்சரான முதல் பெண்ணாகவும் இசுலாமிய உலகிலேயே மக்களால் தேர்ந்தெடுத்தக்கப்பட்ட அரசு ஒன்றின் தலைமை அமைச்சரான இரண்டாவது பெண்ணாகவும் (1988–1990 இல் பாக்கித்தானின் தலைமை அமைச்சராக விளங்கிய பெனசீர் பூட்டோவுக்குப் பிறகு) விளங்கினார். இவரது கணவர் சியாவூர் இரகுமான் குடியரசுத் தலைவராக இருந்தபோது, நாட்டின் தலைமகள் எனும் தகுதியினைக் கொண்டிருந்தார். இரகுமானால் 1970களில் தொடங்கப்பட்ட வங்காளதேச தேசியவாதக் கட்சியின் அவைமுன்னவராகவும் தலைவராகவும் தற்போது இருக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Zia, Begum Khaleda". Banglapedia. 2012. http://en.banglapedia.org/index.php?title=Zia,_Begum_Khaleda. பார்த்த நாள்: 9 சூலை 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலிதா_சியா&oldid=2707373" இருந்து மீள்விக்கப்பட்டது