மொகமது அஷ்ரஃபுல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மொகமது அஷ்ரஃபுல்
Mohammad Ashraful (3).jpg
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம்
இவரைப் பற்றி
முழுப்பெயர் மொகமது அஷ்ரஃபுல்
பிறப்பு 7 சூலை 1984 (1984-07-07) (அகவை 35)
டாக்கா, வங்காளதேசம்
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை கழல் திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 17) செப்டம்பர் 6, 2001: எ இலங்கை
கடைசித் தேர்வு சூன் 6, 2010: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 51) ஏப்ரல் 11, 2001: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி திசம்பர் 1, 2010:  எ சிம்பாப்வே
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2001–இன்று டாக்கா அணி
2000–2001 டாக்கா மெட்ரோபொலி
2008–இன்று மொகம்மதீன் விளையாட்டுக்கழகம்
2009 மும்பாய் இந்தியன்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 55 164[1] 105 207
ஓட்டங்கள் 2,306 3,360 5,459 4,237
துடுப்பாட்ட சராசரி 22.38 23.33 28.28 23.53
100கள்/50கள் 5/7 3/20 14/22 4/24
அதிக ஓட்டங்கள் 158* 109 263 111*
பந்து வீச்சுகள் 1,591 570 6,532 1,228
வீழ்த்தல்கள் 20 15 115 36
பந்துவீச்சு சராசரி 59.40 36.93 34.59 29.77
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 0 5 0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/42 3/26 7/99 4/28
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 24/– 34/– 56/– 51/–

பிப்ரவரி 4, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்
கிரிக்கெட் ஆக்கைவ்.com

மொகமது அஷ்ரஃபுல் (Mohammad Ashraful, (வங்காள: মোহাম্মদ আশরাফুল) பிறப்பு: சூலை 7 1984) வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரராவார், இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் , பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார் . வங்காளதேசத்தில் டாக்கா பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, ஆசிய லெவன் அணி, டாக்கா அணி, டாக்கா மெட்ரோபொலி, மொகம்மதீன் விளையாட்டுக்கழகம், மும்பாய் இந்தியன்ஸ் அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார். இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் , பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் தலைவராக செயலாற்றி உள்ளார்.

2007 ஆம் ஆண்டு முதல் 2009 ஆண்டு வரை இஅர் 13 தேர்வுத் துடுப்பாட்டம் மற்ரும் 38 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்குத் தலைவராக செயல்பட்டார். இதில் 8 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவரின் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இவர் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விரைவாக அரைநூறு அடித்தவர்களின் வரிசையில் முதல் இடத்தில் உள்ளார்..[2][3][4] தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் அடித்தவர்களின் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.[5][6]

இவர் சர்வதேச போட்டிகளில் விளையாடாத போது இவர் தாகா துடுப்பாட்ட அணிக்காக உள்லூர்ப் போட்டிகளில் ஒருநாள் போட்டிகளிலும் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடினார். இந்த இரண்டு தொடர்களிலும் இவர் தலைவராக செயல்பட்டார். 2014 ஆம் ஆண்டில் இவர் சூதாட்டப் ப்காரில் சிக்கியதால் இவர் 8 ஆண்டுகள் விளையாட வங்காளதேசத் துடுப்பாட்ட வாரியம் தடை விதித்தது. பின் இந்தத் தடையானது 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.[7]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசியக் கோபையில் விளையாடிய வங்காளதேசத் துடுப்பாட்ட அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.செப்டம்பர் 6 இல் கொழும்புவில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 53 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்து முத்தையா முரளிதரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 63 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 212 பந்துகளில் 114 ஓட்டங்கள் எடுத்து பெராராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் அறிமுகப் போட்டியிலேயே இவர் நூறு ஓட்டங்கள் அடித்தார்.இந்தப் போட்டியில் இலங்கை அணி 137 ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆட்டப் பகுதி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருந்தபோதிலும் அஷ்ரபுலிந்தப் போட்டிக்கான ஆட்டநாயகனாகத் தேர்வானார்.[8]

2013 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . ஏப்ரல் 25 , இல் ஹராரேவில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 20 பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்து மசகட்சா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில் 2 ஓவர்களையும் மெய்டனாக வீசினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 8 பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்து ஜார்வீசின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 7 ஓவர்கள் வீசி 13 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசி 1 இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் வங்காளதேச அணி 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[9]

குறிப்புகள்[தொகு]

  1. ஆசியத் துடுப்பாட்ட வாரியம் XI இல் விளையாடிய இரண்டு போட்டிகளும் அடங்கும்.
  2. Records / Test matches / Batting records / Fastest fifties, Cricinfo, http://stats.espncricinfo.com/ci/content/records/284096.html, பார்த்த நாள்: 16 July 2012 
  3. Records / One-Day Internationals / Batting records / Fastest fifties, Cricinfo, http://stats.espncricinfo.com/ci/content/records/284095.html, பார்த்த நாள்: 16 July 2012 
  4. Records / Twenty20 Internationals / Batting records / Fastest fifties, Cricinfo, http://stats.espncricinfo.com/ci/content/records/284094.html, பார்த்த நாள்: 17 July 2012 
  5. Bangladesh / Records / Test matches / Most runs, Cricinfo 
  6. Records / Bangladesh / One-Day Internationals / Most runs, Cricinfo, http://stats.espncricinfo.com/ci/engine/records/batting/most_runs_career.html?class=2;id=25;type=team, பார்த்த நாள்: 10 May 2012 
  7. Ashraful's ban reduced to five years, Cricinfo, http://www.espncricinfo.com/bangladesh/content/story/785707.html, பார்த்த நாள்: 15 November 2014 
  8. 2nd Match, Asian Test Championship at Colombo, Sep 6-8 2001 | Match Summary | ESPNCricinfo, http://www.espncricinfo.com/series/8526/scorecard/63947/sri-lanka-vs-bangladesh-2nd-match-asian-test-champ-2001-02/, பார்த்த நாள்: 2018-05-29 
  9. 2nd Test, Bangladesh tour of Zimbabwe at Harare, Apr 25-29 2013 | Match Summary | ESPNCricinfo, http://www.espncricinfo.com/series/12137/scorecard/623577/zimbabwe-vs-bangladesh-2nd-test-bangladesh-tour-of-zimbabwe-2013/, பார்த்த நாள்: 2018-05-29 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொகமது_அஷ்ரஃபுல்&oldid=2714943" இருந்து மீள்விக்கப்பட்டது