முசாரப் முர்தசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முசாரப் முர்தசா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முசாரப் முர்தசா
உயரம்6 அடி 2 அங் (1.88 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 19)நவம்பர் 8 2001 எ. சிம்பாப்வே
கடைசித் தேர்வுசூலை 9 2009 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 53)நவம்பர் 23 2001 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபஏப்ரல் 9 2011 எ. ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்2
இ20ப அறிமுகம் (தொப்பி 4)நவம்பர் 28 2006 எ. சிம்பாப்வே
கடைசி இ20பமே 5 2010 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 36 119 51 133
ஓட்டங்கள் 797 1,177 1,341 1,430
மட்டையாட்ட சராசரி 12.85 15.48 15.96 16.43
100கள்/50கள் 0/3 0/1 1/5 0/2
அதியுயர் ஓட்டம் 79 51* 132* 60*
வீசிய பந்துகள் 5,990 5,932 8,391 6,652
வீழ்த்தல்கள் 78 148 123 176
பந்துவீச்சு சராசரி 41.52 30.94 35.53 28.73
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 0 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/60 6/26 4/27 6/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/– 37/– 21/– 43/–
மூலம்: Cricket Archive, ஏப்ரல் 11 2011

முசாரப் முர்தசா (Mashrafe Mortaza,வங்காள மொழி: মাশরাফি বিন মুর্তজা பிறப்பு: அக்டோபர் 5 1983), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் வங்காளதேசத் துடுப்பாட்டப் அணி சார்பாக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் தற்போது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தலைவராக உள்ளார். இதற்கு முன் பன்னாட்டு இருபது20 போட்டிகளின் தலைவராகவும் இருந்துள்ளார். 2009 முதல் 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலங்களில் இவர் 1 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 9 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் தலைவராக நியமிக்கப்பட்டார். சகீப் அல் அசன் காயம் காரணமாக விலகியதால் இவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

சிறந்த வங்காளதேச விரைவு வீச்சாளர்கள்ர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவர் பொதுவாக மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் பந்துகளை வீசுகிறார்.[1] துவக்க ஓவர்களை இவர் வீசுகிறார். மேலும் இவர் மத்திய கள மட்டையாளராகவும் செயல்படுகிறார். முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒரு நூறும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மூன்று அரைநூறுகளும் அடித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார். ஏப்ரல் 4, 2017 இல் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் எண்ணம் இருப்பதாகத் தெரிவித்தார். பின் ஏப்ரல் 6 இல் தனது ஓய்வினை அறிவித்தார்.[2]

சர்வதேச போட்டிகள்[தொகு]

பெப்ரவரி 2007ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து நான்கு ஒருநாள் தொடர்களில் விளையாடியது. இந்தத் தொடரை வங்காளதேச அணி 3-1 எனும் கணக்கில் கைப்பற்றியது.[3] இந்தத் தொடரில் அதிக இலக்குகள் வீழ்த்தியவ வங்காளதேசப் பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 8 இலக்குகளைக் கைப்பற்றி முதல் இடம் பிடித்தார். இவரின் பந்துவீச்சு சராசரி 16.50 ஆகும்.[4] பின் 2007 ஆம் ஆண்டின் துடுப்பாட்ட உலகக்கிண்னத்திற்கு முன்பான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் வங்காளதேச அணி நியூசிலாந்தை தோற்கடித்தது. இந்தப் போட்டியில் இவர் சகலத்துறையராக சிறப்பாக செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.[5] பின் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்கள் வீசி 38 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார் மேலும் மட்டையாட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் 30* ஓட்டங்கள் எடுத்தார்.[5] இது அந்த உலகக்கிண்ணத் தொடரில் சிறந்த வங்காளதேசப் பந்துவீச்சாளர்களின் சிறந்த பந்துவீச்சாக இது அமைந்தது. மேலும் இந்தப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். பின் இந்தத் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 9 இலக்குகளை 35.88 எனும் சராசரியோடு கைப்பற்றினார்.[6]

பின் துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடர் முடிந்த பின் இந்தியத் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. ஆனால் இந்தத் தொடரை 1-0 எனும் கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்தத் தொடரில் 151 ஓட்டங்கள் எடுத்து அதிக ஓட்டங்கள் எடுத்த வாங்காளதேசத் துடுப்பாளர்களில் முதல் இடத்தையும் அதிக இலக்குகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்தார். இந்தத் தொடரில் இரண்டு அரை நூறுகளை 50.33 எனும் சராசரியோடு எடுத்தார். மேலும் இதே அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் அரைநூறினையும் பதிவு செய்தார்.மேலும் 38.33 எனும் சராசரியோடு 6 இலக்குகளையும் கைப்பற்றினார்..[7][8]

சான்றுகள்[தொகு]

  1. S Rajesh (11 December 2004), Setting the tone in the field, Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2008-12-02
  2. "Mashrafe says he's stepping aside for next generation". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 April 2017.
  3. Bangladesh tour of Zimbabwe, 2006/07, Cricinfo Retrieved on 4 December 2008.
  4. Bangladesh in Zimbabwe, 2006/07 One-Day Series Averages, Cricinfo Retrieved on 4 December 2008.
  5. 5.0 5.1 Cricinfo staff (6 March 2007), Bangladesh shock New Zealand by two wickets, Cricinfo Retrieved on 10 January 2009.
  6. ICC World Cup, 2006/07 – Bangladesh, Cricinfo Retrieved on 4 December 2008.
  7. India in Bangladesh Test Series, 2007, Cricinfo Retrieved on 5 December 2008.
  8. India in Bangladesh Test Series, 2007, Cricinfo Retrieved on 5 December 2008.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முசாரப்_முர்தசா&oldid=3316307" இலிருந்து மீள்விக்கப்பட்டது